அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (Azhagai Irukkirai Bayamai Irukkirathu) 2006ல் விஜய் மில்டன் எழுதி இயக்கிய திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பரத், மல்லிகா கபூர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்தரத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதியன்று இசை வெளியிடப்பட்டது.[1] திரைப்படம் முதலில் ஊட்டியில் படமாக்கப்பட்டது.[2] இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். 2006 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 25 ஆம் நாள் இசைவெளியீடு நடத்தப்பட்டது.[3] நடிகர்கள்
விமர்சனம்ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "'ரெண்டு பேருக்கும் வந்தாதான் அது காதல். ஒருத்தருக்கு மட்டும் வந்தா அது ஆசை' - போன்ற வசனங்கள் அழகு. இரண்டாம் பாதியின் இழுவையைக் குறைத்திருந்தால் இன்னும் அழகாய் இருந்திருக்கும். இளமையான... குளுமையான... ரசனையான படைப்புக்காக புதுமுக இயக்குநர் விஜய் மில்டனுக்கு இது வெல்கம் டிக்கெட்!" என்று எழுதி 43100 மதிப்பெண்களை வழங்கினர்.[4] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia