மு. க. முத்து
மு. க. முத்து (M. K. Muthu, 14 சனவரி 1948 – 19 சூலை 2025) தமிழ்த் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். வாழ்க்கைக் குறிப்புமு. க. முத்து முன்னாள் தமிழ்நாட்டு முதலமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) தலைவர் மு.கருணாநிதியின் மூத்த மகன் ஆவார். மு.கருணாநிதியின் மூத்த மனைவியும் சிதம்பரம் ஜெயராமனின் சகோதரியுமான[2] பத்மாவதி, இவரின் தாயார் ஆவார். மு. கருணாநிதியின் சுயசரிதையான நெஞ்சுக்கு நீதி முதல் தொகுதியின் அகச்சான்றுகளின்படி, முத்துவின் பிறப்பு 1948 சனவரி 14 அன்று நடந்திருக்கலாம், முத்துவின் தாயார் பத்மாவதி, முத்துவைப் பெற்றெடுத்த சிறிது நேரத்திலேயே, காசநோய் காய்ச்சலால் 20 வயதில் இறந்துவிட்டார். இவர் பூக்காரி படத்தில் தொடங்கி பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், அணையா விளக்கு என்று தொடர்ந்து பல படங்களில் நடித்தார். மேலும் சில படங்களில் பாடியும் உள்ளார்.[3] இவரின் நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா, சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க.. பாடல்கள் மக்களால் மிக விரும்பப்பட்டவை. நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றவை. தனிப்பட்ட வாழ்க்கையில் இவருக்கு ஏற்பட்ட பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு - சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு - மீண்டும் திரைப்பட உலகுக்கு வந்தார். பவித்ரன் இயக்கத்தில் வெளியான மாட்டுத் தாவணி என்ற திரைப்படத்துக்காக தேவா இசையமைப்பில் நாட்டுப்புறப் பாடல் ஒன்றைப் பாடினார்.[4] தொழில்1970களின் முற்பகுதியில் முத்துவை தனது அரசியல் வாரிசாக கருணாநிதி விரும்பினார். ஆனால் பின்னர் அதிமுகவின் நிறுவனர் எம். ஜி. ராமச்சந்திரனுக்கு எதிராக இவரை திரைப்படங்களில் அறிமுகப்படுத்தினார். ஆனால் முத்துவின் திரைப்பட வாழ்க்கை இதனால் எதிர்பார்த்த அளவு உயரவில்லை.[5] தனது திரை வாழ்விற்கு வந்த எதிர்ப்புப் பணியாக இதைக் கருதிய எம்.ஜி.ஆர்., திமுகவிலிருந்து பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகமெனத் தனிக்கட்சி துவங்க வித்திட்டது இந்நிகழ்வு.[6] முத்துவுக்கும், கருணாநிதிக்கும் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இவர் தனது தந்தையின் போட்டிக் கட்சியான அதிமுகவில் இணைந்தார். ஆனால், முத்து உடல்நிலை சரியில்லாமல் போன பிறகு, 2009 ஆம் ஆண்டு தந்தையும் மகனும் சமாதானம் ஆயினர்.[5][7] திரைப்படவியல்
இறப்புமு. க. முத்து வயது மூப்பு காரணமாக, 19 சூலை 2025 சனிக்கிழமை அன்று, காலை 08:00 மணியளவில் காலமானார்.[8] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia