மெக்சிகோ பெசோ
மெக்சிகோவின் பெசோ (நாணயக் குறியீடு: $; ஐ.எசு.ஓ 4217: MXN) என்னும் நாணயம், மெக்சிக்கோ நாட்டில் புழக்கத்தில் உள்ளது. இந்த நாணயமும், டாலரும் ஒரே மூலத்தைக் கொண்டவை. இவை இரண்டும் 15 முதல் 19ஆம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்த எஸ்பானிய டாலரை அடிப்படையாகக் கொண்டவை[1] இது உலக அளவில் அதிக புழக்கத்தில் உள்ள நாணயங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. வட அமெரிக்க, தென்னமெரிக்கக் கண்டங்களில் உள்ள நாணயங்களான அமெரிக்க டாலர், கனடா டொலர் ஆகியவை முறையே முதல், இரண்டாம் இடங்களில் உள்ளன.[2] இதன் தற்போதைய ஐ.எசு.ஓ 4217 குறியீடு MXN ஆகும். 1993ஆம் ஆண்டுக்கு முன்னர், MXP என்ற குறீயீடு பயன்படுத்தப்பட்டது. பெசோ 100 செண்டாவோக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இது ¢ என்ற குறியீட்டால் காட்டப்படும். 2015ஆம் ஆண்டின் ஆகஸ்டு பதினொன்றாம் நாளில், ஒரு ஐரோவுக்கு 18.07 மெக்சிகோ பெசோ சமமாகும். ஒரு அமெரிக்க டாலருக்கு 16.36 மெக்சிகோ பெசோ சம மதிப்பை கொண்டுள்ளது.[3] சான்றுகள்
இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia