மெக்லியாட் கஞ்ச்
சொற்பிறப்புமெக்லியோட் கஞ்ச் பஞ்சாபின் ஆளுநரான சர் டொனால்ட் ப்ரியல் மெக்லியோட் என்பவரின் பெயரிடப்பட்டது; கஞ்ச் என்ற பின்னொட்டு "அக்கம்" என்பதற்கான பொதுவான இந்தி வார்த்தையாகும். [1] [2] வரலாறு1850 மார்ச்சில், இரண்டாம் ஆங்கில-சீக்கியப் போருக்குப் பின்னர் இந்த பகுதி ஆங்கிலேயர்களால் இணைக்கப்பட்டது. பின்னர் காங்ராவில் நிறுத்தப்பட்டுள்ள துருப்புக்களுக்கான துணை பாசறை தௌலாதரின் சரிவுகளில், வெற்று நிலத்தில், ஒரு இந்து ஓய்வறை அல்லது தர்மசாலாவுடன் நிறுவப்பட்டது; எனவே புதிய பாசறையின் பெயர் தர்மசாலா எனப்பட்டது. இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியின், இந்த நகரம் ஒரு மலை வாழிடமாக இருந்தது இருந்தது. இங்கு ஆங்கிலேயர்கள் வெப்பமான கோடைகாலத்தை கழித்தனர். மேலும் 1840களின் பிற்பகுதியில், காங்ராவில் மாவட்ட தலைமையகம் நெரிசலானபோது, ஆங்கிலேயர்கள் இரண்டு படைப்பிரிவுகளை தர்மசாலாவுக்கு மாற்றினர். 1849 ஆம் ஆண்டில் ஒரு பாசறை நிறுவப்பட்டது. 1852 ஆம் ஆண்டில் தர்மசாலா காங்ரா மாவட்டத்தின் நிர்வாக தலைநகராக மாறியது. 1855 வாக்கில், இது குடிமக்கள் குடியேற்றத்தின் இரண்டு முக்கியமான இடங்களைக் கொண்டிருந்தது, மெக்லியோட் கஞ்ச் மற்றும் ஒரு பிரதேச ஆணையாளரின் பெயரிடப்பட்ட போர்சைத் கஞ்ச் என்பதாகும். [3] 1860 ஆம் ஆண்டில், 66 வது கூர்க்கா லைட் காலாட்படை, பின்னர் வரலாற்று சிறப்புமிக்க முதாலாவது கூர்க்கா துப்பாக்கிப் படை என மறுபெயரிடப்பட்டு தர்மசாலாவுக்கு மாற்றப்பட்டது. பின்னர், 14 கூர்க்கா பால்தான் கிராமங்கள் அருகிலேயே நிறுவப்பட்டன. மேலும் பக்சுநாத்தின் பண்டைய சிவன் கோவிலுக்கு கூர்க்காக்கள் ஆதரவளித்தனர். இந்தியாவின் பிரித்தன் தலைமை ஆளுநர் (1862-63) எல்ஜின் பிரபு இப்பகுதியை மிகவும் விரும்பினார். ஒரு கட்டத்தில் இதை இந்தியாவின் கோடைகால தலைநகராக மாற்ற பரிந்துரைத்தார். 1863 நவம்பர் 20 அன்று, தர்மசாலாவில் அவர் இறந்தார். மெக்லியோட் கஞ்சிற்கு சற்று கீழே உள்ள போர்சைத் கஞ்சிலுள்ள புனித ஜான் வனப்பகுதி தேவாலயத்தில் புதைக்கப்பட்டார். [3] அவரது கோடைகால இல்லமான மோர்டிமர் வீடு லாகூரின் லாலா பசேசர் நாத் என்ற தனித் தோட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது. பின்னர், தலாய் லாமாவின் உத்தியோகபூர்வ இல்லத்தை அமைப்பதற்காக இந்திய அரசால் கையகப்படுத்தப்பட்டது. ![]() நிலவியல்மெக்லியோட் கஞ்ச் சராசரியாக 2,082 உயரத்தில் உள்ளது மீட்டர் (6,831 அடி ). இது தௌலாதர் மலைத்தொடரில் அமைந்துள்ளது. மெக்லியோட் கஞ்சிற்கு அருகிலுள்ள முக்கிய நகரங்களில் தர்மசாலா, பாலம்பூர், காங்ரா, சித்பரி, தத்வானி மற்றும் மச்சிரியல் ஆகியவை அடங்கும். அருகிலுள்ள மற்ற ஆன்மீக ஈர்ப்புகளில் சின்மயா தபோவனம் (ஒரு இந்து புனித மையம்), ஓஷோ நிசர்கா (ஒரு ஓஷோ புனித மையம்) மற்றும் சாமுண்டா (இந்துக்களுக்கான புனித யாத்திரை இடம்) ஆகியவை அடங்கும். டிரையுண்டிற்கான மலையேற்ற பாதை மெக்லியோட் கஞ்ச்சிலிரிந்து தொடங்குகிறது. பொருளாதாரம்![]() மெக்லியோட் கஞ்சில் சுற்றுலா ஒரு முக்கியமான தொழில் ஆகும். திபெத்திய பௌத்தம் படிக்கவும், கலாச்சாரம், கைவினைப்பொருட்கள் போன்றவற்றைப் பார்க்கவும் பலர் வருகிறார்கள். இந்த நகரம் திபெத்திய கைவினைப்பொருட்கள், தங்காக்கள், திபெத்திய தரைவிரிப்புகள், ஆடைகள், கைவினைக் கலைஞர்களின் கடலை வெண்ணெய் ஆகியவற்றிற்கும் பெயர் பெற்றது. தர்மசாலா சர்வதேச திரைப்பட விழா (டிஐஎஃப்எஃப்) ஆண்டுதோறும் இங்கு நடத்தப்படுகிறது. குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia