மெட்டாலா
மெட்டாலா என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், நாமக்கல் மாவட்டத்தில், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.[1] அமைவிடம்இக்கிராமமானது நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட, கார்கூடல்பட்டி ஊராட்சியின் கீழ் உள்ளது.[2] இவ்வூர் நாமக்கல் மாவட்டம் மற்றும் சேலம் மாவட்டம் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. கிழக்கே தம்மம்பட்டி ஊராட்சி ஒன்றியமும், இராசிபுரம் ஊராட்சி ஒன்றியமும், வடக்கே வாழப்பாடி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியமும் இவ்வூரைச் சுற்றி அமைந்துள்ளது. இவ்வூர் மாவட்ட தலைநகர் நாமக்கலில் இருந்து வடக்கே 41 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேலும் நாமகிரிப்பேட்டையிலிருந்து வடகிழக்கே ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மாநில தலைநகர் சென்னை இங்கிருந்து வடகிழக்கே 315 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நிலவியல்![]() மெட்டாலா கிராமத்தின் 11°30′43″N 78°20′38″E / 11.51194°N 78.34389°E ஆள்கூறுகள் ஆகும். மெட்டாலா மேட்டு வழித்தடம் போதமலையின் கிழக்கு சரிவில் அமைந்துள்ளது. வடக்கு மற்றும் மேற்கே போதைமலை அமைந்துள்ளது. இந்த மலையில் பழங்குடியின மக்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். இங்கு நடுக்காடு, தெற்குகாடு, குறிஞ்சூர், கீழூர், மேலூர், கெடமலை போன்ற கிராமங்கள் உள்ளன. இந்த மலையில் பிரதானமான தொழிலாக விவசாயம் செய்துவருகின்றனர். இந்த மலைக்குச் செல்ல சாலை வசதி இல்லாததால் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இப்பகுதி உள்ளது. தேர்தல் காலங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் போன்றவை இங்கு தலைச்சுமையாகவே கொண்டு செல்லப்பட்டு வருகிறது.[3] இதனால் இந்த மலைக்கு சாலை வசதி ஏற்படுத்த வேலைகள் நடந்து வருகின்றன. தெற்கே கொல்லிமலை அமைந்துள்ளது. மெட்டாலா கால்வாய் போதைமலைத் தொடரின் கிழக்குச் சரிவிலிருந்து மெட்டாலாவிற்கு வடக்கே மேற்கிலிருந்து கிழக்காக செல்கிறது. அருகில் உள்ள கிராமங்கள்
மொழிவட்டார மற்றும் வழக்கு மொழி தமிழ்மொழி ஆகும். இதுவே மாநிலத்தின் ஆட்சி மொழியாகவும் மக்களின் பேச்சு மொழியாகவும் உள்ளது. இடங்கள்
வேளாண்மைமெட்டாலா கால்வாயின் மூலம் பெறப்பட்ட கால்வாய் பாசனம் மூலம் வேளாண்மை நடைபெறுகிறது.[4] இப்பகுதியில் மஞ்சள் பயிரிடப்படுகிறது.[5] அரசியல் மற்றும் நிர்வாகம்மெட்டாலா இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கும், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டதாகும். தற்போழுது அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் அவர்கள் செயல்பட்டு வருகிறார். போக்குவரத்துபேருந்து போக்குவரத்துமெட்டாலா மேட்டு வழித்தடத்தில் இராசிபுரம் மற்றும் ஆத்தூர் மார்கங்களாக தமிழ்நாடு அரசு பேருந்து கழகம் சார்பாகவும், தனியார் பேருந்து அமைப்புகள் மூலமாக தொலைதூர மற்றும் நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மெட்டாலாவிலிருந்து ஆத்தூர் கிழக்கே முப்பத்திநான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மெட்டாலாவிலிருந்து இராசிபுரம் மேற்கே இருபத்திஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மெட்டாலாவிலிருந்து தம்மம்பட்டி தெற்கே இருபத்தி ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மெட்டாலாவிலிருந்து வாழப்பாடி பத்தொன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இரயில் போக்குவரத்துஅருகில் உள்ள இரயில் நிலையங்களான சேலம் சந்திப்பு தொடருந்து நிலையம் மெட்டாலாவிலிருந்து வடமேற்கே ஐம்பத்திரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மற்றும் இராசிபுரம் தொடர்வண்டி நிலையம் மெட்டாலாவிலிருந்து மேற்கே இருபத்திரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia