மெராபி எரிமலை
![]() மெராபி எரிமலை (Mount Merapi) இந்தோனேசியா நாட்டின் சாவகத் தீவில், நடுச் சாவக மாகாணத்திற்கும், யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதிக்கும் இடையில் அமைந்துள்ள முனைப்பன சுழல் வடிவ எரிமலை ஆகும். இது இந்தோனேசியாவில் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றாகும். இது 1548-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வெடித்து வருகிறது. இந்த எரிமலை 2.4 மில்லியன் மக்கள் தொகை கொண்ட யோக்யகர்த்தா நகரத்திற்கு வடக்கே சுமார் 28 கிலோ மீட்டர் (17 மைல்) தொலைவில் உள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் எரிமலையின் ஓரங்களில் வாழ்கின்றனர். இது கடல் மட்டத்திலிருந்து 1,700 மீட்டர் (5,577 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. மலை உச்சியில் இருந்து புகை வெளியேறுவதை அடிக்கடி காணலாம். மெராபி எரிமலை பல வெடிப்புகளால் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 2006 மற்றும் 2010 ஆண்டுகளில் மெராபி எரிமலையில் பலத்த வெடிப்புகளால் பேரளவு உயிரிழப்புகள் ஏற்பட்டன. 27 மார்ச் 2021 அன்று, மற்றொரு சிறிய வெடிப்பு ஏற்பட்டது..[3] 8 ஆகத்து 2021 அன்று மெராபி மீண்டும் வெடிக்கத் தொடங்கியது. எரிமலையின் சரிவில் புதிய எரிமலை குழம்புகளை வெளியேற்றியது.[4].[5] 16 ஆகத்து 2021 அன்று, எரிமலை மீண்டும் வெடித்து, சாம்பல் மேகத்தை காற்றில் ஏற்றி, அதன் பள்ளத்தில் சிவப்பு எரிமலைக் குழும்புகளைப் பாய்வித்தது. வெடிப்புகள் எரிமலையில் இருந்து 3.5 கிலோமீட்டர் (2 மைல்) தொலைவுக்கு மேகங்களைத் தூண்டி, சாம்பலில் உள்ளூர்ப் பகுதிகளை மூடிமறைத்தன. [12] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia