மேலந்தல் ஊராட்சி
மேலந்தல் ஊராட்சி (Melanthal Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் திருக்கோவலூர் வட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையின் வடகரையில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2678 ஆகும். இவர்களில் பெண்கள் 1324 பேரும் ஆண்கள் 1354 பேரும் உள்ளனர். இக்கிராமத்தில் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை மூலம் 22.06.1995 ல் பகுதி நேரமாக நூலகம் தொடங்கப்பட்டு பின்னர் ஊர்ப்புற நூலகமாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது இக்கிராமத்தின் முதல் நூலகராக மு.அன்பழகன் பணியாற்றினார். இவ்வூரின் தெற்கே தென்பெண்ணை ஆறும் மேற்கே ஏரியும் கிழக்கே மடுவும் ஊரின் நடுவே குளமும் சில இடங்களில் குட்டைகளும் அமைந்து விவசாயத்திற்கு பேருதவியாக இருக்கிறது. அடிப்படை வசதிகள்தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
சிற்றூர்கள்இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia