மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2021

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2021 பதிப்பானது மைக்ரோசாப்ட்டினால் விண்டோஸ் மற்றும் ஆப்பிள் மாக்கிண்டோஷ் கணினிகளுக்காக உருவாக்கப்பட்ட ஓர் அலுவலக மென்பொருளாகும்[1]. இது மாதாந்திர அல்லது வருடாந்திர சந்தா இல்லாத, ஒருமுறை வாங்கி நிரந்தரமாகப் பயன்படுத்தக்கூடிய மென்பொருள், அக்டோபர் 5, 2021 அன்று வெளியிடப்பட்டது. இதன் அடுத்தப் பதிப்பு மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் 2024 அக்டோபர் 1, 2024 அன்று வெளியானது. ஆபிஸ் 2021 சில்லறை விற்பனை மற்றும் பெருநிறுவனங்களுக்கான தொகுப்பு உரிமம் (Volume Licensing) என இரண்டு வழிகளில் கிடைக்கிறது.

பதிப்புகள்

ஆபிஸ் 2021 தனிப்பட்ட பயனர்களுக்காகவும், வர்த்தகப் பயன்பாட்டிற்காகவும் பல்வேறு பதிப்புகளில் கிடைக்கிறது:

  • ஹோம் & ஸ்டூடண்ட் (Home & Student): இதில் வேர்ட் (Word), எக்செல் (Excel), பவர்பாயிண்ட் (PowerPoint) மற்றும் ஒன்நோட் (OneNote) ஆகியவை அடங்கும். இதை கணினி அல்லது மேக் (Mac) சாதனத்தில் நிறுவலாம்.
  • ஹோம் & பிசினஸ் (Home & Business): இதில் வேர்ட், எக்செல், பவர்பாயிண்ட், ஒன்நோட் மற்றும் அவுட்லுக் (Outlook) ஆகியவை அடங்கும். இதை கணினி அல்லது மேக் சாதனத்தில் நிறுவலாம்.
  • புரோஃபெஷனல் (Professional): இது கணினிக்கான பிரத்தியேக பதிப்பு. இதில் வேர்ட், எக்செல், பவர்பாயிண்ட், ஒன்நோட், அவுட்லுக், பப்ளிஷர் (Publisher) மற்றும் அக்சஸ் (Access) ஆகியவை அடங்கும்.
  • புரோஃபெஷனல் பிளஸ் (Professional Plus): இதுவும் கணினிக்கான பிரத்தியேக பதிப்பு. இதில் வேர்ட், எக்செல், பவர்பாயிண்ட், ஒன்நோட், அவுட்லுக், பப்ளிஷர், அக்சஸ் மற்றும் டீம்ஸ் (Teams) ஆகியவை அடங்கும்.

இதுவரை வெளிவந்த பதிப்புகள்:

ஆதரவு முடிவு

ஆதரவு முடிவு (End of Support): ஆபிஸ் 2021 இன் சில்லறைப் பதிப்புகளுக்கான ஆதரவு அக்டோபர் 13, 2026 அன்று முடிவடையும். மைக்ரோசாஃப்ட் இதற்குப் பிறகு கூடுதல் ஆதரவு காலத்தை வழங்காது. அதாவது, இந்த தேதிக்குப் பிறகு பாதுகாப்பு புதுப்பிப்புகள் அல்லது தொழில்நுட்ப ஆதரவு கிடைக்காது.

மேற்கோள்கள்

  1. "Language Accessory Pack for Office". Office (in அமெரிக்க ஆங்கிலம்). Microsoft. Archived from the original on November 11, 2021. Retrieved November 11, 2021.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya