மௌகஞ்ச்

மௌகஞ்ச்
சிவன் கோயில், பஹுதி அருவி (142 அடி உயரம்)
மௌகஞ்ச் is located in மத்தியப் பிரதேசம்
மௌகஞ்ச்
மௌகஞ்ச்
இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் மௌகஞ்ச் நகரத்தின் அமைவிடம்
மௌகஞ்ச் is located in இந்தியா
மௌகஞ்ச்
மௌகஞ்ச்
மௌகஞ்ச் (இந்தியா)
ஆள்கூறுகள்: 24°41′N 81°53′E / 24.68°N 81.88°E / 24.68; 81.88
நாடு இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்மௌகஞ்ச்
ஏற்றம்
313 m (1,027 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்26,420
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி, பாகேலி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
486331[1]
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:IN
வாகனப் பதிவுMP17
இணையதளம்https://mauganj.nic.in/en/

மௌகஞ்ச் (Mauganj), இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்த மௌகஞ்ச் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும்.[2] இது மாநிலத் தலைநகரான போபால் நகரத்திற்கு வடகிழக்கில் 605 கிலோ மீட்டர் தொலைவிலும். ரேவா நகரத்திற்கு வடகிழக்கே 65 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரத்தில் வட்டார மொழியான பாகேலி மொழி பேசபடுகிறது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 1,026 அடி உயரத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 15 வார்டுகளும், 4,880 குடியிருப்புகளும் கொண்ட மௌகஞ்ச் பேரூராட்சியின் மக்கள் தொகை 26,420 ஆகும். அதில் 13,589 ஆண்கள் மற்றும் 12,831 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 15.20 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 944 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 71.31 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 16.84 % மற்றும் 9.40 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 88.15%, இசுலாமியர் 11.75% மற்றும் பிற சமயத்தினர் 0.08% வீதம் உள்ளனர்.[3]

தொடருந்து நிலையம்

இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் ரேவா நகரத்தில் உள்ளது.

மேற்கோள்கள்

  1. Haider, Razi. "List of All City Name in Madhya Pradesh - Check Zip Code at Citypincode.in". City Pincode Finder Tool.
  2. "Mauganj becomes 53rd district of Madhya Pradesh". The Times of India. 2023-08-14. https://timesofindia.indiatimes.com/city/bhopal/mauganj-becomes-53rd-dist-of-mp-meena-new-collector/articleshow/102707475.cms?from=mdr. 
  3. "Mauganj Nagar Panchayat City Population Census 2011-2025 | Madhya Pradesh". www.census2011.co.in. Retrieved 2025-04-25.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya