ரேவா
ரேவா (Rewa), இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் வடகிழக்கில், தென்கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் எல்லையை ஒட்டி அமைந்த ரேவா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். பகேல்கண்ட் பிரதேசத்தில் அமைந்த ரேவா நகரம், மாநிலத் தலைநகரான போபால் நகரத்திலிருந்து 420 கிலோ மீட்டர் தொலைவிலும், ஜபல்பூரிலிருந்து 230 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. விந்திய மலைத்தொடர் ரேவா மாவட்டத்தின் நடுவில் உள்ளது. வெள்ளைப் புலிகள் ரேவா மாவட்ட காட்டில் உள்ளன.[3] வரலாறுபகேல்கண்ட் பிரதேசத்தில் அமைந்த ரேவா நகரம், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் ரேவா சமஸ்தானத்தின் தலைநகராக விளங்கியது. 1948 முதல் 1956 முடிய விந்தியப் பிரதேசம் மாநிலத்தின் தலைநகரான ரேவா நகரம் விளங்கியது. மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956ன் படி, விந்தியப் பிரதேசம், மற்றும் மத்திய பாரதம் மாநிலங்கள் மத்தியப் பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.[4] மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 45 வார்டுகளும், 45,275 வீடுகளும் கொண்ட ரேவா மாநகரத்தின் மக்கள் தொகை 2,35,654 ஆகும். அதில் ஆண்கள் 1,24,012 மற்றும் பெண்கள் 111,642 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 25356 (11%) ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 86.3% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 23,331 மற்றும் 8,914 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 87.43%, இசுலாமியர் 11.65% சமணர்கள் 0.22%, சீக்கியர்கள் 0.23%, கிறித்தவர்கள் 0.23% மற்றும் பிறர் 0.27% ஆகவுள்ளனர்.[5] போக்குவரத்து![]() அலகாபாத்-ஜபல்பூர் இருப்புப் பாதை, ரேவா சந்திப்பு தொடருந்து நிலையம் மற்றும் சத்னா தொடருந்து நிலையங்களுடன் இணைக்கிறது.[6] சாலைகள்தேசிய நெடுஞ்சாலைச் சாலை எண்கள் 7, 27 மற்றும் 75 ரேவா நகரம் வழியாகச் செல்கிறது. ரேவா வானூர்தி நிலையம் 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia