மௌகஞ்ச் மாவட்டம்
மௌகஞ்ச் மாவட்டம் (Mauganj district) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரேவா மாவட்டத்தின் மௌகஞ்ச், அனுமானா, நய் கர்கி ஆகிய மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டு 15 ஆகஸ்டு 2023 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1][2]மத்தியப் பிரதேசத்தின் கிழக்கில் இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மௌகஞ்ச் நகரம் ஆகும். இம்மாவட்டத்தில் இந்தி மொழி மற்றும் பாகேலி மொழிகள் பேசப்படுகிறது. மாவட்ட நிர்வாகம்ரேவா வருவாய் கோட்டத்தில் அமைந்த மௌகஞ்ச் மாவட்டத்தில் 1866.88 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும்; 6,16,645 மக்கள் தொகையும், மௌகஞ்ச், அனுமானா, நய் கர்கி எனும் 3 வருவாய் வட்டங்களும், 1070 கிராமங்களும்[3] மற்றும் 3 நகராட்சிகளும் கொண்டுள்ளது. அரசியல்மௌகஞ்ச் மாவட்டம் ரேவா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. இம்மாவட்டம் தியோதலாப் (சட்டமன்றத் தொகுதி) க்கும் மவுகஞ்சு (சட்டமன்றத் தொகுதி)க்கும் உட்பட்டது.[4] போக்குவரத்துஉத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 135 (இந்தியா) இம்மாவட்டத்தின் மௌகஞ்ச் வழியாகச் செல்கிறது. இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia