இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 28 அக்டோபர் 2023 அன்று ஒளிபரப்பப்பட்டு, 1,348 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
இந்த தொடரின் இரண்டாம் பாகம் பாண்டியன் ஸ்டோர்ஸ்: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற பெயரில் 30 அக்டோபர் 2023 ஒளிபரப்பாகிறது.
கதைச்சுருக்கம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றனர் அண்ணன், தம்பி நால்வர். இந்த குடும்பத்தின் மூத்த மருமகள் தனலட்சுமி. அனைவரையும் அன்பால் அரவணைப்பவர். தன் கணவரின் தம்பிகளை, தன் பிள்ளைகள் போல் பார்த்துக் கொள்வார். இந்த குடும்பத்தில் மற்ற மருமகளாக வரும் மீனா, முல்லை ஆகியோரால் இவர்களின் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நீடிக்குமா? என்பதுதான் இந்த தொடரின் கதை.
மீனாவின் வளைகாப்பு நிகழ்வு தனித் தொடராக ஒளிபரப்பானது. அதில் விஜய் டிவியின் மற்ற திரைத்தொடர்களில் நடித்த நடிகைகள் சிறப்புத் தோற்றத்தில் பங்கேற்றனர்.
ஜீவா - மீனா ஆகியோரின் குழந்தைக்கு பெயரிடும் நிகழ்வும் தனித்தொடராக ஒளிபரப்பானது.
பாரதி கண்ணம்மா திரைத்தொடரின் கதாப்பாத்திரங்கள் ஐந்து நாட்கள் இத்தொடரில் தோன்றினர்.
ராஜா ராணி திரைத்தொடரில், மீனாவும் முல்லையும் பங்கேற்றதாக காட்சிகள் அமைக்கப்பட்டா.
நேர அட்டவணை
இந்த தொடர் 1 அக்டோபர் 2018 முதல் 21 ஜூன் 2019 வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பானது. பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சிக்காக 24 ஜூன் 2019 முதல் இரவு 8 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது.
ஒளிபரப்பான திகதி
நாட்கள்
நேரம்
அத்தியாங்கள்
1 அக்டோபர் 2018 - 21 ஜூன் 2019
திங்கள் - வெள்ளி
22:00
1-188
24 ஜூன் 2019 - 28 அக்டோபர் 2023
திங்கள்-வெள்ளி
20:00
189-1,348
மதிப்பீடுகள்
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.