ம. கல்லுப்பட்டி (திருச்சி மாவட்டம்)
ம.கல்லுப்பட்டி அல்லது மருங்காபுரி கல்லுப்பட்டி , இந்திய மாநிலம் தமிழ்நாடு, திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டத்தில் உள்ள ஊராகும். முன்பு மணப்பாறை வட்டத்தில் இருந்த இவ்வூர் தற்பொழுது மணப்பாறையிலிருந்து பிரிக்கப்பட்ட மருங்காபுரி வட்டத்தில், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. ம.கல்லுப்பட்டி சுருக்கமாக கல்லை எனவும் அழைக்கப்படுகிறது. இதன்
அமைவிடம்திருச்சி மாவட்டம்,மருங்காபுரி வட்டம்,மணப்பாறை சட்டமன்றத் தொகுதி,கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திருச்சி -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எண் NH-45Bல்( வேலூர் - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எண் 38 ) திருச்சியிலிருந்து தெற்கில் 50கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து வடக்கில் 80 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. ம.கல்லுப்பட்டியானது வேலூர் - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை NH-38ல் அமைந்திருப்பதால் இது இதன் அருகில் உள்ள முக்கிய ஊர்களான தெ .இடையபட்டி(ஊராட்சி) மற்றும் மருங்காபுரி ,துவரங்குறிச்சி ஆகிய ஊர்களுக்கு ம.கல்லுப்பட்டி நுழைவுவாயிலாகவும், மருங்காபுரி,வெட்டுக்காடு,மல்லிகைப்பட்டி,யாகபுரம்,குளவாய்பட்டி,டி.இடையபட்டி, நெல்லிப்பட்டி, தெ.ஆண்டிப்பட்டி,சேத்துப்பட்டி,முத்தாழ்வார்பட்டி ஆகிய ஊர்கள் சந்திக்கும் சந்திப்பு முனையமாகவும் ம.கல்லுப்பட்டி('கல்லை')திகழ்கிறது. முத்துமாரியம்மன் கோவில்இங்கு பிரசித்திபெற்ற ம.கல்லுப்பட்டி முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. வருடாவருடம் இக்கோவிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவானது மிகவும் பிரபலமானதாகும். இக்கோவில் திருவிழாவானது எம்.கல்லுப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களான டி.இடையபட்டி, தாழம்பாடி, மருங்காபுரி மற்றும் இதனுள் அடங்கும் சிறிய கிராமங்கள் என பதினெட்டு ஊர் மக்களால் கொண்டாடப்படுகிறது. இக்கோவிலின் பின்புறம் அழகிய யானையின் தோற்றத்தில் பசுமையான மல்லிகைமலை அமைந்துள்ளது. இந்த மல்லிகைமலையின் அடிவாரத்தில் தமிழகத்தின் 100-வது சமத்துவபுரம் அமைந்திருப்பது சிறப்பு. அலுவலகங்கள்இங்கு மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 51 ஊராட்சி மன்றங்களுக்கான தலைமை அலுவலகமான
ஆகிய அலுவலகங்கள் ம.கல்லுப்பட்டியில் அமைந்துள்ளன.மேலும்
ஆலயங்கள்
அருகில் உள்ள ஊர்கள்
தொடர்வண்டி நிலையங்கள்
விமான நிலையங்கள்
கல்வி நிறுவனங்கள்
மேற்கோள்கள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia