கரூர் மக்களவைத் தொகுதி
கரூர் மக்களவைத் தொகுதி (Karur Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 23-ஆவது தொகுதி ஆகும். தொகுதி மறுசீரமைப்புகரூர் மக்களவைத் தொகுதியின் பழைய சட்டமன்றத் தொகுதிகள் - அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), மருங்காபுரி, குளித்தலை, தொட்டியம் ஆகியனவாகும். தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக கரூர் மக்களவைத் தொகுதியில் இருந்த மருங்காபுரி, குளித்தலை, தொட்டியம் ஆகியவை நீக்கப்பட்டன. புதிதாக மணப்பாறை, விராலிமலை ஆகிய இரு தொகுதிகள் இணைக்கப்பட்டன. இவை இரண்டும் புதிதாக உருவாக்கப்பட்டவை ஆகும். சட்டமன்றத் தொகுதிகள்இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை: இங்கு வென்றவர்கள்இதுவரை நடந்துள்ள 16 தேர்தல்களில், 7 முறை காங்கிரசும், 6 முறை அதிமுகவும், திமுகவும், தமாகாவும் தலா ஒரு முறை வென்று உள்ளன. இதுவரை இத்தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல். 18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)வாக்காளர் புள்ளி விவரம்
முக்கிய வேட்பாளர்கள்இத்தேர்தலில், 11 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 31 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 42 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அதிமுக வேட்பாளரான, தம்பிதுரையை 4,20,546 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
16-ஆவது மக்களவைத் தேர்தல்முக்கிய வேட்பாளர்கள்
வாக்குப்பதிவு
15-ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள்38 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், அதிமுகவின் மு. தம்பிதுரை, திமுகவின் கே. சி. பழனிச்சாமியை 47,254 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
14-ஆவது மக்களவைகே. சி. பழனிசாமி (திமுக) – 4,50,407. ராஜா பழனிச்சாமி (அதிமுக) – 2,59,531. வெற்றி வேறுபாடு - 1,90,876 வாக்குகள். மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia