ம. கோ. இராதாகிருட்டிணன்
மலபார் கோபாலன் நாயர் இராதாகிருட்டிணன் (Malabar Gopalan Nair Radhakrishnan) (29 சூலை 1940 - 2 சூலை 2010) கேரளாவைச் சேர்ந்த இந்திய இசையமைப்பாளரும், கர்நாடக இசைப் பாடகருமாவார். சொந்த வாழ்க்கைஇவர், 1940 சூலை 29 அன்று கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிபாடு என்ற ஊரில் இசையமைப்பாளரும், ஆர்மோனியக் கலைஞருமான மலபார் கோபாலன் நாயருக்கும், ஹரிகதா கலாட்சேப நிபுணர் கமலாட்சி அம்மா என்பவருக்கும் மூன்று குழந்தைகளில் மூத்த மகனாகப் பிறந்தார்.[1] ஆலப்புழாவின் சனாதன தர்மக் கல்லூரியில் தனது கல்லூரிக் கல்வியைப் பெற்ற இவர், சுவாதித் திருநாள் இசை அகாதாமியிலிருந்து கணபூசனம் பயின்றார். பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அங்கு இவரது வகுப்பு தோழர்களில் ஒருவர். இவரது தம்பி எம். ஜி. ஸ்ரீகுமார் மலையாளத் திரைப்படத்துறையுலகிலும், தமிழகத் திரைப்படத்துறையுலகிலும் முன்னணி பின்னணி பாடகராக இருக்கிறார்.[2] இவரது தங்கை கே. ஓமனகுட்டி ஒரு பிரபல கருநாடக இசைப் பாடகரும், கல்வியாளருமாவார். இவர், கல்லீரல் நோய் காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 2010 சூலை 2 ஆம் தேதி இறந்தார். தொழில்எம். கோ. இராதாகிருட்டிணன் ஒரு இந்திய சந்நியாசியான சிறீ வித்யாதிராஜா ஹிருதயஞ்சலியின் சீடராக இருந்தார்,[3] மேலும், அவரது பாடல்களுக்கு இசையமைத்தார்.[3] இதை கர்நாடக பாடகரான இவரது தங்கை கே . ஓமனக்குட்டி அம்மா பாடியிருந்தார்.[3] இராதாகிருட்டிணன் தனது உத்தியோகபூர்வ திறனில், திருவனந்தபுரத்தின் அனைத்திந்திய வானொலியில் ஒரு பணியாளராக பணியாற்றி மூத்த இசை அமைப்பாளராக (தரம் 1) ஆனார். 1962இல், அனைத்திந்திய வானொலியில் இசை அமைப்பாளராக சேர்ந்தார். இவர் வானொலி மூலம் 15 நிமிட மெல்லிசை வகுப்பை நடத்தி வந்தார். இது இவரை இசை ஆர்வலர்களின் விருப்பமாக மாற்றியது. கே.ராகவன் இசையமைத்த கல்லிச்செல்லம்மா (1969) என்ற திரைப்படத்திலிருந்து "உன்னிகணபதியே ..." என்ற பாடல் மூலம் பின்னணி பாடகராக திரையுலகில் அறிமுகமானார். ஒரு பாடகராக இவரது பிரபலமான பாடல்களில் சரசையா என்ற படத்தில் இடம்பெற்ற "சரிக்கே சரிக்கே", "நீங்களென்ன கம்யூனிஸ்ட் ஆக்கி" படத்தில் இடம்பெற்ற "பல்லநாயத்தின் தீரத்து" ஆகியவை அடங்கும். இவரது குறிப்பிடத்தக்க கச்சேரி நிகழ்ச்சிகள் சில சங்கனாச்சேரியிலுள்ள நாயர் சமூக அமைப்பின் தலைமையகத்திலும், திருவனந்தபுரத்திலுள்ள கரிக்காக்கோம் சாமுண்டீசுவரி கோயிலிலும் இருந்தன. பின்னர் இவர் மெல்லிசையில் கவனம் செலுத்தினார். அவற்றில் பெரும்பாலானவை பெரிய வெற்றிகளாக மாறியது. பாடகர்கள் சுஜாதா மோகன், ஜி.வேணுகோபால் போன்றவர்கள் முதன்முதலில் அவரது திரைப்படமற்ற பாடல்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டனர். பிரபல இந்திய எழுத்தாளரான கமலா தாசின் கவிதைகளை சுராய்ய பாடுன்னு என்ற இசைத்தொகுப்பின் மூலம் வெளியிட்டர்.[4] இவர், பிரபல பாடகியான கே. எஸ். சித்ராவை, அட்டகாசம் என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார் .[5][6] இறப்புகல்லீரல் இழைநார் வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட இவர், 2 சூலை 2010 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.[7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia