ஹரிகதா கலாட்சேபம்![]() ஹரிகதா காலட்சேபம் (Harikatha), திருமாலின் அவதாரக் கதைகளை கூறும் ஹரிகதை என்பது இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் கலந்த கலவையாகும். மக்களிடையே பக்தி மார்க்கத்தை பரப்புவதில் ஹரிகதா காலட்சேபம் முன்னிலை வகித்தது. ஹரிகதைக்கும், உபன்யாசம் அல்லது ஆன்மீகச் சொற்பொழிவுகளுக்கும் வேறுபாடு உண்டு. உபன்யாசம் செய்பவர் உரைநடையில் பேசுவதில் மட்டும் வல்லுனராக இருந்தால் போதும். ஆனால் ஹரிகதா காலட்சேபம் செய்பவரோ உரையாற்றுவதிலும், பாடுவதிலும், பாவனைகளை வெளிப்படுத்தி நடிப்பதிலும், சமயத்தில் நடன முத்திரைகளை அபிநயிப்பதிலும்கூட வல்லுனராக இருக்கவேண்டும். மேலும் வடமொழி, தெலுங்கு போன்ற பன்மொழியில் வித்தகராக இருத்தல் மிகச்சிறப்பு. வேதங்கள், சுலோகங்கள், கீர்த்தனைகள், ராக ஆலாபனைகள், தமிழ், தெலுங்கு பாடல்கள், மராத்திய அபங்கங்கள், இந்தி பஜன்கள் என்று அனைத்தையும் அறிந்தவராக இருப்பதோடு, அவற்றை அளவோடு பயன்படுத்துவதில் திறமையானவராக இருத்தல் வேண்டும். குறிப்பாக இதிகாசங்கள் மற்றும் புராணக் கதைகளை மக்களிடையே சுவையுடன் எடுத்துக் கூறவேண்டும். பக்கவாத்தியங்களுடன் ஹரி கதை வித்தகர் உணர்ச்சிபூர்வமாக நவரசங்களையும் வெளிப்படுத்தும் போது நிகழ்ச்சி சிறப்பாக அமையும். பெரும்பாலும் ஹரிகதைக்கு பக்கவாத்தியங்களாக மிருதங்கமும், ஹார்மோனியமும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. பின்னாளில் ஆர்மோனியத்தின் பதிலாக வயலினும், சுருதி பெட்டியும் ஆக்கிரமித்துவிட்டது. இந்து தொன்மவியலில்
வரலாறுகிபி 15-ஆம் நூற்றாண்டுகளில், தக்காணத்தின் தற்கால மகாராட்டிரா மற்றும் கர்நாடகா பகுதிகளில், புரந்தரதாசர், ஜெயதேவர், கனகதாசர், துக்காராம் போன்ற வைணவ அடியார்களால் ஹரிகதை இசைத்துப் பாடி பரப்பப்பட்டது. பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சாவூர் மராத்திய மன்னர்கள் (1674–1855) தமிழகத்தை ஆண்டபொழுது, ஹரிகதா காலட்சேபங்கள் "பஜனை சம்பிரதாயத்தோடு" தமிழ்நாட்டிற்கு அறிமுகமாயின. தற்கால ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரை மாவட்டங்களில் 19-ஆம் நூற்றாண்டுகளில் தெலுங்கு மொழியில் ஹரிகதை பரவியது.[2] ஹரிகதா காலட்சேபம் செய்வதில் புகழ்பெற்றவர்கள்
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia