மன்னார்சாலை கோயில்வெட்டிக்குளங்கரை கோயில்மணக்காட்டு கோயில்
ஹரிப்பாடு (Haripad) என்பது ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஒனட்டுகரை பகுதியில் உள்ள ஒரு நகராட்சி ஆகும் ஹரிப்பாட்டின் கிழக்கே பள்ளிப்பாடு, வீயபுரம் மற்றும் கார்த்திகப்பள்ளி மேற்கிலும், தெற்கில் சேப்பாடு[1] ஆகியவை எல்லையாக உள்ளன. இது கலை, கலைஞர்கள், பாம்பு படகுகளின் பூமி, இசை, நடனம் மற்றும் நாடகத்தின் பூமி என்று அழைக்கப்படுகிறது. இது க்ஷேத்ரநகரி (கோவில்களின் நகரம்) என்றும் பிரபலமாக அறியப்படுகிறது. ஹரிப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோயில் இவற்றில் முதன்மையானது.
பனச்சமூடு கோவிலி பம்பை மேளம்
வெளிநாட்டினரையும் கவரும் ஹரிப்பாட்டின் முக்கிய அம்சம் "பாய்ப்பாட் ஜலோத்சவம்". தற்போது வழிபடும் சுப்பிரமணியர் சிலை காந்தல்லூரில் இருந்து பாம்பு படகுகள் மற்றும் வல்ல சடையுடன் கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.[2] ராஜீவ் காந்தி ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையம் (காயம்குளம், தேசிய அனல் மின் நிறுவனம்) ஹரிப்பாடு சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது.
ஹரிப்பாடு அதன் பெயரை அரிபாட் (அரி என்றால் அரிசி) அல்லது "ஹரிகீதபுரம்" என்பதிலிருந்து பெறப்பட்டது.[3] 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஊரின் மக்கள் தொகை 16,445 ஆகும்.[4]
குறிப்பிடத்தக்கவர்கள்
சுவாமி நிர்மலானந்தா (1863–1938), இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (1836–1886)[5]
கேரள வர்மா வல்லிய கோயி தம்புரான் (1845–1914) மயூரசந்தேசம் எனும் நூலின் ஆசிரியர். தனது அன்பு மனைவிக்கு மயில்கள் மூலம் அனுப்பும் காதல் கடிதங்கள் அடங்கிய சந்தேஷ் காவியத்தை எழுதும் போது ஹரிப்பாடில் தங்கியிருந்தார்.[6]