யஷ்பால் குந்தல்யஷ்பால் குந்தல் (Yash Paul Kundal) ஒரு இந்திய அரசியல்வாதியாவார். ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் பிரிவான இளம் சிறுத்தைகளின் மாநிலத் தலைவராக உள்ளார். இவர் இரண்டு முறை ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 2002 முதல் 2008 வரை கால்நடை பராமரிப்பு அமைச்சராக இருந்தார். ஆரம்ப கால வாழ்க்கைகுந்தால் 1997 இல் ஜம்மு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். [1] தொழில்ஜம்முவின், சம்பாவில் நடைபெற்ற ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்திற்கான இரண்டு தேர்தல்களில் இவர் வெற்றி பெற்றுள்ளார். [2] 2002 ஜம்மு-காஷ்மீர் பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு, இவர் அரசாங்கத்தில் கால்நடைத் துறை அமைச்சராக பணியாற்றினார். 2008 ஜம்மு-காஷ்மீர் தேர்தல்களில் இரண்டாவது தேர்தல் வெற்றியின் பின்னர் இவர் எதிர்க்கட்சியின் ஒரு பகுதியாக இருந்தார். [3] நவம்பர் 2014 இல், இவர் இளம் சிறுத்தைகளின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். [4] ஒரு சட்டமன்ற உறுப்பினராக இவர் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையின் மரம் நடும் விழாவுக்கு ஆதரவளித்தார். அவர்களின் பிரதான விருந்தினராக, தனது சம்பா தொகுதியில் முதல் மரத்தை நட்டார். எல்லைப் பாதுகாப்புப்படை 200,000 மரக்கன்றுகளை நட்டது . [5] இவர், ஹர்ஷ் தேவ் சிங்குடன், ஜம்முவில் 2016 செப்டம்பர் 18 அன்று பாக்கித்தானுக்கு எதிராக இந்திய இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஊரி தாக்குதலுக்குப் பின்னர் நடந்த போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார். பயங்கரவாத தாக்குதல்களுக்கு பாக்கித்தான் ஆதரவளித்ததாக குற்றம் சாட்டினார். [6] அக்டோபர் 2016 இல், இராம்நகர் கோயிலில், பட்டியல் சாதி இளைஞரான பிசன் தாசை கொடூரமாக தாக்கிய பாஜக தொழிலாளர்கள் மீது காவல்துறை தகுந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை என்று இவர் குற்றம் சாட்டினார். இந்த வழக்கு கொலை முயற்சி என பதிவு செய்யப்பட வேண்டும் என்று இவர் விரும்பினார். சமீபத்திய பாஜக தேர்தல் வெற்றிகளின் விளைவாக இப்பகுதியில் பட்டியல் சாதியினருக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று இவர் குற்றம் சாட்டினார். 18 மாத காலப்பகுதியில் அவர்களின் ஏழு அறியப்படாத மரணங்கள் இப்பகுதியில் தீர்க்கப்படவில்லை என்று கூறினார். [7] முன்னதாக, திசம்பரில் நடந்த 2014 ஜம்மு-காஷ்மீர் பொதுத் தேர்தலில், இவர் பாஜக வேட்பாளரிடம் தோலிவுயுற்றார். பிப்ரவரி 2020 இல், இவர் தேசிய சிறுத்தைகள் கட்சி செயற்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். [8] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia