யோசப் பொன்னையா
அதி வணக்கத்துக்குரிய யோசப் பொன்னையா (Right Reverend Joseph Ponniah, 12 அக்டோபர் 1952 – 19 மே 2025) இலங்கைத் தமிழ் போதகரும், மட்டக்களப்பு ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயரும் ஆவார்.[1] வாழ்க்கைக் குறிப்புயோசப் பொன்னையா இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு, தன்னாமுனை என்ற ஊரில் பிறந்தார்.[2][3] புனித வளனார் சிறிய குருமடத்திலும், திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[4][5] திருச்சிராப்பள்ளி புனித பவுல் குருமடத்தில் உயர் கல்வி கற்று மெய்யியலில் இளங்கலைப் பட்டமும், புனேயில் உள்ள தேசிய குருமடத்தில் பயின்று இறையியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.[4][5] அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டதாரியுமான இவர் ரோம் மறைமாவட்ட நகரப் பல்கலைக்கழகத்தின் விவிலிய இறையியல் பட்டமும் (1993), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.[4][6][7] பணியோசப் பொன்னையா 1980 ஏப்ரலில் கத்தோலிக்கப் பாதிரியாராகப் பணியிலமர்த்தப்பட்டார்.[2][3] இவர் பங்குப் பாதிரியாராக மட்டக்களப்பு தூய மரியாள் இணைப்பேராலயம் (1980-82), வாகரை, வீச்சுக்கல்முனை, ஆயித்தியமலை ஆகியவற்றில் பணியாற்றினார்.[4][7] மட்டக்களப்பு புனித வளனார் சிறிய குருமடத்திலுல் பணிப்பாளராகப் (1993-96) பணியாற்றிய பின்னர் அம்பிட்டி தேசிய குருமடத்தில் (1996-2001) பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.[4][5][7] 2001-06 காலப்பகுதியில் தாண்டவன்வெளி பங்குப் பாதிரியாராகப் பணியாற்றிய பின்னர் 2006 இல் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பதில் பொருப்பாளராகப் பதவியேற்றார்.[4][7] கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.[6] 2008 பெப்ரவரியில் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் துணை-ஆயராக நியமிக்கப்பட்டு, 2008 மே மாதத்தில் அதன் ஆயராகப் பதவியேற்றார்.[2][3] 2012 சூலையில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முதலாவது ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.[2][3] 2024 ஆகத்து 19 அன்று அகவை மூப்பு காரணமாகத் தனது ஆயர் பதவியில் இருந்து இளைப்பாறினார்.[8][9][10] இறப்புயோசப் பொன்னையா ஆண்டகை இரண்டு கிழமைகளாக சுகவீனமுற்றிருந்த நிலையில் 2025 மே 19 அன்று தனது 72-ஆவது அகவையில் காலமானார்.[11][12] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia