ரக்கல்தாஸ் பானர்ஜி
ரக்கல்தாஸ் பானர்ஜி அல்லது ஆர். டி. பானர்ஜி (Rakhaldas Bandyopadhyay also known as R. D. Banerji) (12 ஏப்ரல் 1885 – 23 மே 1930), இந்திய வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல் மற்றும் தொல்லெழுத்தியல் துறையின் முன்னோடி ஆவார். சிந்து வெளி நாகரீக கால அரப்பா, மொகெஞ்சதாரோ தொல்லிடங்களின் அகழ்வாய்வுப் பணிகளால் ஆர். டி. பானர்ஜி நன்கறியப்படுகிறார்.[1] பணிகள்கொல்கத்தா பல்கலைக் கழகதில், வரலாறு படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற ஆர். டி. பானர்ஜி, 1910ல் கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தின், தொல்லியல் பிரிவு உதவியாளராக பணியில் சேர்ந்தார். 1911ல் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில், உதவி கண்காணிப்பாளராக பதவியேற்று, 1917ல் இந்தியத் தொல்லியல் துறையின் மேற்கு மண்டல கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். 1924ல் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கிழக்கு மண்டலத்திற்கு மாற்றப்பட்டு, தற்போதைய வங்காள தேசத்தில் உள்ள சோமபுரம் மகாவிகாரை பகுதிகளில் அகழ்வாய்வு பணிகள் மேற்கொண்டார். 1926ல் விருப்ப ஓய்வு பெற்ற பானர்ஜி, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் கல்வெட்டியல் மற்றும் தொல்லெழுத்தியல் துறை பேரராசிரியர் பணி மேற்கொண்டார்.[2] பின்னர் 1928ல் பானர்ஜி தாம் 23 மே 1930ல் இறக்கும் வரை, பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார்.[3] வங்காள மொழி எழுத்துமுறை வரலாறு குறித்து The Origin of the Bengali Script எனும் நூலை எழுதி 1919ல் வெளியிட்டார். மத்தியகால இந்தியாவின் நாணயங்கள் மற்றும் உருவங்களினால் அல்லது வரிவடிவங்களினால் பொருளை விளக்கும் கலை (Iconography) குறித்தும், குப்தப் பேரரசு காலத்திய சிற்பக் கலை மற்றும் கட்டிடக் கலை குறித்தும் நூல்களை வெளியிட்டார். மொகெஞ்சதாரோ கண்டிபிடிப்புசிந்து வெளி நாகரீக கால மொகெஞ்சதாரோ மற்றும் அரப்பா போன்ற தொல் நகரங்களை அகழ்வாய்வுகளின் மூலம், சிந்து வெளி நாகரீகம், இந்தியாவின் வெண்கலக் காலத்தைச் சேர்ந்தது என்ற உண்மையை உலகிற்கு அறிவித்தவர் பானர்ஜி ஆவார்.[4] படைப்புகள்
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
|
Portal di Ensiklopedia Dunia