ரங்கா (திரைப்படம்)

ரங்கா
சுவரிதழ்
இயக்கம்ஆர்.தியாகராஜன்
தயாரிப்புசி. தண்டாயுதபானி
கதைதூயவன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்பு
ஒளிப்பதிவுவி. இராமமூர்த்தி
படத்தொகுப்புஎம். சி. பாலு ராவ்
கலையகம்தேவர் பிலிம்ஸ்
விநியோகம்தேவர் பிலிம்ஸ்
வெளியீடு14 ஏப்ரல் 1982
ஓட்டம்133 நிமிடம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ரங்கா ரஜினிகாந்த், இராதிகா, கராத்தே மணி, கே. ஆர். விஜயா, சில்க் ஸ்மிதா, இரவீந்திரன் நடிப்பில் 1982 இல் வெளிவந்த தமிழ் திரைப்படம். இது தேவர் பிலிம்ஸ் படைப்பு. இயக்குநர் ஆர்.தியாகராஜன், தயாரிப்பு சி. தண்டாயுதபானி, வசனம் தூயவன், இசை சங்கர் கணேஷ் , ஒளிபதிவு வி.ராம்மூர்த்தி. இதில் நல்ல கட்டை நாட்டுகட்டை, பட்டுக்கோட்டை அம்மாளே போன்ற பாடல்கள் இடம் பெற்றிருந்தன. ரஜினிகாந்தின் 75 வது திரைப்படமாகும்.[1]

கதைச்சுருக்கம்

ரங்கா (ரஜினி) தன் அக்காளை (கே ஆர் விஜயா) சிறுவயதில் பிரிந்துவிடுகிறார். அவர் பட்டணத்துக்கு வேலை தேடி வரும் போது ராஜை (கராத்தே மணி) சந்திக்கிறார். அப்போது ராஜ் திருடனாக இருக்கிறார். ரங்காவின் பேச்சால் திருட்டு தொழிலுக்கு முழுக்கு போட்டுவிட்டு திருந்தி வாழ்கிறார். அவருக்கு கே ஆர் விஜயாவின் வீட்டில் அவரின் பையனை பாதுகாக்கும் வேலை கிடைக்கிறது. நல்லவனாக இருந்த ரங்கா திருட்டு தொழிலுக்கும், அடிதடி தொழிலுக்கும் செல்கிறார். ரங்காவும் அந்த வீட்டில் பணியில் சேர்ந்து பையனை தூக்கி செல்லமுயலுகிறார். அதை ராஜு முறியடிக்கிறார். இறுதியில் கே. ஆர். விஜயா தனது அக்கா என்று தெரிந்து கொள்கிறார். பையனை எதிரிகளிடம் இருந்து காக்கிறார்.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya