கே. ஆர். விஜயா
க. இரா. விஜயா (K. R. Vijaya) என்பவர் ஒரு இந்திய நடிகை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிப் படங்கள் உட்பட சுமார் 450 திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழ்த் திரைப்படங்களில் அதிகமாக நடித்த நடிகை இவரையே சாரும். மேலும் இவரது நடிப்பை கருதி புன்னகை அரசி என அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.[1] மேலும் கே. ஆர். விஜயா அவர்கள் தனது திரைப்படங்களில் ஏற்கும் கனமான கதாபாத்திரங்களில் அசாத்தியமான நடிப்பை வெளிபடுத்தியதாலே தமிழ் திரையுலகில் அன்றைய முன்னணி நடிகர்களான எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் அவர்களுக்கு இணையான சம்பளத்தையும், மதிப்பையும் பெற்றார். மேலும் விஜயா அவர்கள் திரையுலக நடிப்பில் திரைப்படம்/நாடகம்/விளம்பரங்களை தவிர்த்து திரை சார்ந்து நடத்தபடும் பரிசு வழங்கும் பாராட்டு விழா மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் கூட அன்று முதல் இன்று வரை கலந்து கொள்ளாமல் மிகவும் கண்ணியமான நடிகையாக வாழ்ந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். வாழ்க்கைக் குறிப்புகே. ஆர். விஜயாவின் தந்தை ராமசந்திரன் ஆந்திர பிரதேசத்தையும், தாயார் கல்யாணி கேரளாவையும் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு கேரளத்தில் திருச்சூரில் தெய்வநாயகி என்ற இயற்பெயர் உடன் முதல் மகளாகப் பிறந்தார். இவருக்கு வத்சலா, சாவித்திரி, சசிகலா, ராதா என்கிற நான்கு தங்கைகளும் நாராயணன் என்கிற ஒரு தம்பியும் உள்ளனர். தந்தை ராமச்சந்திரன் தனது தொடக்கக் காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் அன்றைய ஒருங்கிணைந்த இந்தியா–பாக்கித்தான் எல்லையில் இராணுவ வீரராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். தந்தைக்கு திருவனந்தபுரத்தில் நகை வியாபாரம் செய்து வந்த போது நகை வியாபாரத்தில் ஏற்பட்ட பெருத்த நட்டத்தால், அவரது குடும்பம் கேரளத்தில் இருந்து வெளியேறி தமிழ்நாட்டில் உள்ள பழநியில் குடியேறியது. பழநி முருகன் கோவிலில் இவரது தந்தை உயர் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றினார். மேலும் கே. ஆர். விஜயா அவர்களது தந்தை ராமச்சந்திர ராவ் அவர்கள் இராணுவத்தில் பணியாற்றியதால் கே. ஆர். விஜயாவிற்கு ஆரம்பகாலத்தில் நடிக்கும் போதே குத்து சண்டை, துப்பாக்கி சுடும் பயிற்சி, வில்லிஸ் ஜீப் மற்றும் ராயல் என்ஃபீல்டு மோட்டார் பைக் ஓட்டும் பயிற்சி போன்ற கடுமையான தற்காப்பு பயிற்சிகளையும் கே. ஆர். விஜயாவிற்கு கற்று வழங்கினார். பின்னாளில் அதுவே கே. ஆர். விஜயாவிற்கு நடிப்பில் பெரிதும் அப்பயிற்சிகள் உதவியது. தொடக்கக் காலத்தில் நாடகக் குழுவிலும் சில மேடை நாடங்களில் நடித்து வந்த விஜயா திரைக்கு வந்த பிறகு நடிகர் எம். ஆர். ராதா விஜயா என்று அவரது பெயரை மாற்றி வைத்தார். இதை தனது தாய்/தந்தையின் முதல் எழுத்தை சேர்த்து கே. ஆர். விஜயா என்று மாற்றி கொண்டார். 1960 களில் நடிக்கத் தொடங்கி சுமார் 40 ஆண்டுகளுக்கு அதிகமாக நடித்து வருகிறார். இவர் நடித்த முதற்படமான கற்பகம் 1963 இல் வெளிவந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், முத்துராமன், ஏ. வி. எம். ராஜன், ஜெய்சங்கர், ரவிசந்திரன், ஆகிய பிரபல நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார். அதுமட்டுமல்லாமல் தமிழ் திரையில் இவர் நடித்த ஆரம்பகாலத்தில் பல வில்லன் நடிகர்களான ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், கே. பாலாஜி, ஆகியோருடன் கதாநாயகி ஆகவும் நடித்துள்ளார். பின்பு நகைச்சுவை நடிகர்களான நாகேஷ், சோ, தேங்காய் சீனிவாசன் ஆகியோருடனும் இணைந்து சில படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் திரையில் அறிமுகமானாலும், மலையாளம், தெலுங்கு, கன்னடம், படங்களிலும் பல உச்ச நட்சத்திர நடிகர்களுடன் ஜோடியாக இணைந்து நடித்துள்ளார். தமிழில் விஜயபுரி வீரன் ஆனந்தன் முதல் எல். ஐ. சி. நரசிம்மன் வரை இணைந்து நடித்த நடிகை ஆவார். பின்பு தற்போது தமிழில் பல சின்னத்திரை நாடகங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இவர் திரைக்கு வந்த சில காலங்களிலே 1966 ஆம் ஆண்டு அன்றைய பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், தொழிலதிபருமான சுதர்சன் எம். வேலாயுதம் நாயர் என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஹேமலதா என்கிற ஒரு மகள் உள்ளார். நடிகை கே. ஆர். விஜயாவிற்கு தமிழ் திரையுலகில் முதல் முறையாக 1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்த சாண்டில்யனின் ஜீவ பூமி என்ற படத்தில் நாக கன்னியாக நாகமாக மாறி இளவரசி கதாபாத்திரத்தில் நடித்த சரோஜாதேவியை சீண்டும் நாகமாக விஜயா வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுவே அவர் தோன்றி நடித்த முதல் திரைப்படம் ஆகும். ஆனால் அப்படம் வெளிவராமல் போனது. திரைப்பட அனுபவங்கள்
நடித்த திரைப்படங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia