ராஜமன்னார் குழு![]() ராஜமன்னார் குழு (Rajamannar Committee) என்பது தமிழ்நாடு மாநில அரசால் ஒன்றிய, மாநில உறவுகள் குறித்து (மாநில சுயாட்சி குறித்து) ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 1969இல் அமைக்கப்பட்ட ஒரு குழுவாகும். இக்குழுவில் அன்றைய சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பி. வி. ராஜமன்னார் தலைவராகவும், முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பி. சந்திர ரெட்டி, அன்றைய சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ. இலட்சுமணசுவாமி ஆகிய இருவரும் குழு உறுப்பினர்களாக இருந்தனர்.[1] இக்குழு அமைக்கபட்டு இரு ஆண்டுகள் கழித்து 1971, மே, 27 இல் அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சமர்பித்தது.[2] அந்த அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1974 ஏப்ரல் 16 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நோக்கம்இக்குழுவானது ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளின் அம்சங்கள் அனைத்தையும் ஆராய்ந்து, ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பங்கீட்டில் உள்ள சிக்கல்களுக்கான காரணத்தைக் கண்டறிவதாகும். முக்கிய பரிந்துரைகள்[3]
காலப்போக்கில் நிறைவேறியவை
மேலும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia