ரிஷிவந்தியம்
11°49′01″N 79°06′00″E / 11.817°N 79.100°E ரிஷிவந்தியம் (Rishivandiyam) என்பது இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். மக்கள் வகைப்பாடுஇவ்வூரானது கள்ளக்குறிச்சிக்கு வடகிழக்கே 18 கி.மீ. தொலைவிலும் திருக்கோவலூர்க்குத் தென்மேற்கே 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[1] 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1822 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 8225 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 4178, பெண்களின் எண்ணிக்கை 4047 என உள்ளது. எழுத்தறிவு விகிதம் 62.4 % ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[2] வழிபாட்டுத் தலங்கள்ரிஷிவந்தியத்தில் பழமையான அர்த்தநாரீசுவரர் கோயில் உள்ளது. இக்கோயில் மதுரைத் திருமலை நாயக்கரால் புதுப்பித்துக் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.மேலும் ரிஷிவந்தியம் ராஜநாராயணப்பெருமாள் கோயில் உள்ளது. குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia