கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி (Kallakurichi) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் ஒர் தேர்வுநிலை நகராட்சி ஆகும். இதுவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. கள்ளக்குறிச்சி நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. மக்கள் வகைப்பாடு2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 12,801 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 52,507 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 86.17% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 984 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5541 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 902 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே மற்றும்ஆகவுள்ளனர்.[1] 2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, கள்ளக்குறிச்சியில் இந்துக்கள் 83.87%, முஸ்லிம்கள் 13.4%, கிறிஸ்தவர்கள் 1.72%, சீக்கியர்கள் 0.04%, பௌத்தர்கள் 0.02%, சைனர்கள் 0.17%, 0.71% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.08% பேர்களும் உள்ளனர். முக்கிய சுற்றுலாத் தலங்கள்கோமுகி அணை, மணிமுக்தா அணை, சின்னதிருப்பதி கோவில், தென்பொன்பரப்பி சிவன் கோவில், ஆஞ்சநேயர் கோவில், கல்வராயன் மலை, மேகம் நீர்வீழ்ச்சி, பெரியார் நீர்வீழ்ச்சி,கவியம் நீர்வீழ்ச்சி, தியாகதுருகம் மலை மற்றும் பழமைவாய்ந்த பீரங்கி குண்டுகள், எஸ். ஒகையூர் பெரிய ஏரி மற்றும் ஒகையூர் பழமைவாய்ந்த சிவன் கோவில், சித்தலூர் பெரியாயி கோவில். போக்குவரத்துசாலைப் போக்குவரத்துகள்ளக்குறிச்சி நகரில் உள்ள சாலை போக்குவரத்தின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
பேருந்து வசதிகள்
நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்
கள்ளக்குறிச்சி நகராட்சியானது கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். 2024 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த தே. மலையரசன் வென்றார். 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) சேர்ந்த மா. செந்தில்குமார் வென்றார். தொழிற்சாலைகள்
இதனையும் காண்கமேற்கோள்கள்வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia