ரெடின் கிங்ஸ்லி
ரெடின் கிங்ஸ்லி (Redin Kingsley) ஒரு இந்திய நடிகரும், நகைச்சுவை நடிகரும் ஆவார். இவர் முக்கியமாக தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.[1] இவர் திரைப்படங்களில் சத்தமாகவும், தட்டையாகவும் பேசும் பாணியில் மிகவும் பிரபலமானவர்.[2] தொழில்ரெடின் கிங்ஸ்லி திரைப்படங்களில் நுழைவதற்கு முன்பு சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் நடக்கும் அரசு கண்காட்சிகளுக்கு ஒரு நிகழ்ச்சி அமைப்பாளராகப் பணிபுரிந்தார். இவரது முதல் படம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'வேட்டை மன்னன்' என்று கூறப்பட்டது. ஆனால் அந்த படம் அறியப்படாத காரணங்களால் கைவிடப்பட்டது. பின்னர் 2018இல், இவர் முதலில் நெல்சன் இயக்கிய நயன்தாராவின் கோலமாவு கோகிலாவில் தோன்றினார். சில படங்களில் சிறிய வேடங்களில் தோன்றிய பிறகு, இவர் நெற்றிக்கண் (2021) படத்தில் இரகசிய ஏஜென்டாகவும், 'டாக்டர்' (2021) படத்தில் மறைநிலை காவல் அதிகாரியாகவும் நடித்திருந்தார்.[3][4] நகைச்சுவையான பாத்திரங்களைத் தொடர்ந்து இவர் இரசினிகாந்தின் அண்ணாத்த (2021) படத்திலும் நடித்தார். இவரது தற்போதைய திட்டங்களில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்,[5] விஜய்யின் 'பீஸ்ட்' ஆகியவை அடங்கும். இரண்டுமே சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றன. வடிவேலுவின் முந்தைய படங்களில் இவரது நடிப்பிற்காக இவர் அழைக்கப்பட்டு பாராட்டப்பட்டார்.[6][7] மேலும் வடிவேலுவின் வரவிருக்கும் நகைச்சுவைத் திரைப்படமான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஒரு முக்கிய பாத்திரம் வழங்கப்பட்டது.[8] சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia