ரேடியம் ஐதராக்சைடு
ரேடியம் ஐதராக்சைடு (Radium hydroxide) என்பது Ra(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ரேடியமும், ஐதரசன் ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1] சுழிய அயனி வலிமையில் நீரிய RaOH+ அயனி இணையின் நிலைப்புத்தன்மை மாறிலியின் மதிப்பு ஐந்துக்கு சமமாகும்.[2] தயாரிப்பு
இயற்பியல் பண்புகள்ரேடியம் ஐதராக்சைடு நிறமற்ற படிகங்களாக உருவாகிறது. இது பேரியம் ஐதரக்சைடை விட அதிகமாக தண்ணீரில் கரைகிறது. மேலும் அதிகமான காரப் பண்புகளையும் கொண்டுள்ளது. ரேடியம் ஐதராக்சைடு Ra(OH)2·8H2O என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட நீரேற்றாகவும் உருவாகிறது.[5] ரேடியம் ஐதராக்சைடு நச்சு மற்றும் அரிக்கும் தன்மை கொண்ட வேதிப்பொருள் ஆகும். பேரியம் ஐதராக்சைடு (Ba(OH)2) மற்றும் இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு (Sr(OH)2) ஆகியவற்றை விட குறிப்பிடத்தக்க அளவு நச்சுத்தன்மை வாய்ந்தது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia