ரேடியம் கார்பனேட்டு
ரேடியம் கார்பனேட்டு (Radium carbonate) RaCO3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படுகிறது. ரேடியம், கார்பன், ஆக்சிசன் ஆகிய மூன்று தனிமங்கள் சேர்ந்து ரேடியம் கார்பனேட்டு உருவாகிறது. படிக உருவமற்றதாக [4] வெண்மை நிறத்திலிருக்கும் இந்த உப்பு நச்சுத்தன்மை கொண்டதாகவும் கதிரியக்கத் தன்மை கொண்டதாகவும் காணப்படுகிறது. ரேடியம் கார்பனேட்டு மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படுகிறது.[2] ஆய்வகங்களில் நைட்ரிக் அமிலத்தில் இதைக் கரைத்து ரேடியம் நைட்ரேட்டு தயாரிக்கப்படுகிறது. ரேடியம் கார்பனேட்டு நீரில் கரையாது. தயாரிப்புசெறிவூட்டப்பட்ட சோடியம் கார்பனேட்டில் உயர்ந்த வெப்பநிலையில் ரேடியம் சல்பேட்டைக் கரைத்து, பின்னர் மேற்பரப்பில் மிதக்கிற வேதிப்பொருளை அகற்றுவதன் மூலம் ரேடியம் கார்பனேட்டை உற்பத்தி செய்யலாம்: [5]
RaCO3 சேர்மத்தின் மிகக் குறைந்த கரைதிறன் காரணமாக, இது ஒரு வெண்மையான வீழ்படிவை உருவாக்கும். வினைகள்ரேடியம் நைட்ரேட்டு மற்றும் பிற ரேடியம் உப்புகளை உற்பத்தி செய்ய ரேடியம் கார்பனேட்டைப் பயன்படுத்தலாம்:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia