றெக்கை கட்டி பறக்குது மனசு என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஜூன் 19, 2017 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி மார்ச்சு 4, 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பான காதல் மற்றும் குடும்பம் பின்னணியை கொண்ட தொலைக்காட்சித் தொடர்.[1] இந்த தொடரை பசீர் என்பவர் இயக்க, சித்தார்த், சமீரா, அஸ்வின் கார்த்திக், வந்தனா, சாந்தி வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.[2] இது ஒரு ஜீ மராத்தி தொலைக்காட்சி தொடரான 'துஜித் ஜீவ் ரங்கலா' என்ற தொடரின் மறு தாயாரிப்பாகும். இந்த தொடரை நடிகை சமீரா தயாரிக்கிறார்.[3] இந்த தொடர் 24 மே 2019 ஆம் அன்று 520 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.
கதைச்சுருக்கம்
ஆஞ்சநேயர் பக்தனான (சித்தார்த்) தமிழும் பள்ளி ஆசிரியான மலருக்கும் (சமீரா) வரும் காதலை பற்றிய கதை.
இந்த தொடர் முதல் முதலில் ஜூன் 19, 2017 அன்று இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பானது. ஏப்ரல் 20, 2018 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகினது. பழைய நேரத்தில் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என்ற தொடர் தற்பொழுது ஒளிபரப்பாகின்றது. 4 மார்ச்சு 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது.
ஒளிபரப்பான திகதி
நாட்கள்
நேரம்
அத்தியாயங்கள்
19 ஜூன் 2017 - 20 ஏப்ரல் 2018
திங்கள் - வெள்ளி
21:30
1-219
23 ஏப்ரல் 2018 – 2 மார்ச்சு 2019
22:00
220-462
4 மார்ச்சு 2019 – 24 மே 2019
18:30
463-520
மறுதயாரிப்பு
இந்த தொடர் மலையாளம் மொழியில் 'அளியம்பாள்' என்ற பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டு ஜீ கேரளம் தொலைக்காட்சியில் நவம்பர் 26, 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது.