லிபரல் டெமக்கிராட்சு (Liberal Democrats, பெரும்பாலும் சுருக்கமாக லிப் டெம்;Lib Dems, வேல்சு: Democratiaid Rhyddfrydol) are a ஐக்கிய இராச்சியத்தில்தாராளமயமாக்கல் கொள்கையுடைய ஓர் அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி அரசியலமைப்பிலும் தேர்தல் முறைமைகளிலும் சீர்திருத்தங்கள்,[15] முன்னோக்கிய வரிவிதிப்பு,[16] சுற்றிச்சூழல் பாதுகாப்பு, ஐரோப்பிய மனித உரிமை சட்டங்கள்,[17] வங்கிச் சீர்திருத்தங்கள்[18] மற்றும் குடியியல் உரிமைகளுக்கு[19] ஆதரவளிக்கிறது.
1988இல் லிபரல் கட்சியும் சோசியல் டெமக்கிராட்டிக் கட்சியும் இணைந்து இக்கட்சி உருவானது. இதற்கு முன்னதாக இரு கட்சிகளும் ஏழு ஆண்டுகளாக கூட்டணி அமைத்திருந்தன. லிபரல்கள் 129 ஆண்டுகளாக இருந்து வருகின்றனர்; ஆட்சியிலும் இருந்துள்ளனர். இவர்களது ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைக்கு கொணர்ந்துள்ளனர். கன்சர்வேடிவ் கட்சிக்கு முதன்மையான எதிர்கட்சியாக இருந்த லிபரல் கட்சி 1920களில் தொழிற் கட்சியிடம் தன்னிடத்தை இழந்தது. இன்று மூன்றாவது பெரிய கட்சியாக ஐக்கிய இராச்சிய அரசியலில் இருந்து வருகறது.
இக்கட்சி சாதாரணர்களின் அவையில் 650 இடங்களில் 57 இடங்களும் பிரபுக்கள் அவையில் 738 இடங்களில் 79 இடங்களும் கிடைத்துள்ளன. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரித்தானியாவிற்குள்ள 72 இடங்களில் 11 இடங்களும் இசுகாட்லாந்தின் சட்டப் பேரவையில் 129 இடங்களில் 16 இடங்களும் வேல்சு சட்டப் பேரவையில் 60 இடங்களுக்கு 5 இடங்களும் பெற்றுள்ளது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தற்போதுள்ள ஐக்கிய இராச்சிய அரசில் பங்கேற்றுள்ளது. லிபரல் டெமக்கிராட்சின் தலைவர் நிக் கிளெக் துணைப் பிரதமராக உள்ளார்.
↑"Anthony Wells looks at our Lib Dem results". Archived from the original on 28 நவம்பர் 2010. Retrieved 18 December 2010.. On a left right scale 65% of Liberal Democrat members identify themselves as being left-of-centre, with an average score on a scale of -100 (very left wing) to +100 (very right wing) of -32