வடக்கஞ்சேரி
வடக்கஞ்சேரி (Vadakkencherry, Palakkad) என்பது கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரும்[2], கிராம ஊராட்சியும் [3] ஆகும். இது பாலக்காட்டிலிருந்து . தேசிய நெடுஞ்சாலை 544 வழியாக சுமார் 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தே.நெ-544 இன் வடக்கஞ்சேரி-மன்னுத்தி பிரிவு மாநிலத்தின் முதல் ஆறு வழி தேசிய நெடுஞ்சாலையாகும். சொற்பிறப்பியல்இந்த ஊரின் பெயரானது "வடக்கன்" மற்றும் "சேரி" ஆகியவற்றின் கலவையாகும். கல்வி
போக்குவரத்துவடக்கஞ்சேரி அனைத்து முக்கிய நகரங்களுடனும் போக்குவரத்தால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இது தேசிய நெடுஞ்சாலை 544 இல் அமைந்துள்ளது. பொது போக்குவரத்தில் முதன்மையாக தனியார் மற்றும் கே.அ.போ.க பேருந்து சேவைகள் உள்ளன. வடக்கஞ்சேரியில் இருந்து ஒரு கே.அ.போ.க இயக்க மையம் உள்ளது. [8] தனியார் பேருந்துகளை இயக்க இந்திரா பிரியதர்சினி பேருந்து நிலையம் என்று பொதுவாக அழைக்கப்படும் ஒரு தனியார் பேருந்து நிலையமும் உள்ளது. [9] அருகிலுள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள் பாலக்காடு சந்திப்பு தொடருந்து நிலையம் மற்றும் திருச்சூர் தொடருந்து நிலையம் ஆகும். அருகிலுள்ள வானூர்தி நிலையம் கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia