வடபழனி மெற்றோ நிலையம்
கோயம்பேடு-ஆலந்தூர் வழித்தடத்தில் முக்கிய நிலையங்களில் ஒன்றான வடபழனி நிலையம் 2015ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செயல்படத் தொடங்கியது. [1] கட்டுமான வரலாறுஇந்த நிலையத்தை ஒருங்கிணைந்த கட்டமைக்கப்பட்ட கூட்டமைப்பு (சி.சி.சி.எல்) கட்டியது. கோயம்பேடு, அரும்பாக்கம், CMBT, மற்றும் அசோக் நகர் நிலையங்கள் ஒருங்கிணைந்து கட்டமைக்க ₹ 1,395.4 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. [2] நிலையம்இந்த நிலையம் ஜவஹர்லால் நேரு சாலை மற்றும் ஆற்காடு சாலை சந்திப்பில் சாலையிலிருந்து 16 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்ட நிலையமாகும்.[3] இந்த நிலையம் சென்னை மெற்றோவின் மிக உயரமான நிலையமாகும். [4] சி.எம்.ஆர்.எல். தகவலின்படி, இந்த நிலையத்தில் குறைந்தது 12,000 பேர் கடந்து செல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. [1] தளவமைப்பு
வசதிகள்இணைப்பு2014ஆம் ஆண்டில், சென்னை மெற்றோ இரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) வடபழனி மெற்றோ நிலையத்தை ஃபோரம் விஜயா மாலுடன் இணைக்கும் திட்டத்தை அறிவித்தது. [1] ஆதரவு உள்கட்டமைப்பு![]() 2013ஆம் ஆண்டு நிலவரப்படி, கத்திப்பாரா மற்றும் வடபழனிக்கு இடையில் ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ள பகுதி வழியாக சுமார் 11,000 வாகனங்கள் கடந்து செல்கின்றன. மேலும் 12,000 வாகனங்கள் உச்ச நேரங்களில் வடபழனி-கோயம்பேடு பிரிவு வழியாகச் செல்கின்றன. ஒவ்வொரு நாளும் மொத்தம் 185,000 வாகனங்கள் சாலையைப் பயன்படுத்துகின்றன. [4] கோயம்பேடு மற்றும் அசோக் நகர் மெற்றோ நிலையங்களுடன், கடைகளுக்கோ அல்லது அலுவலக இடங்களுக்கோ இடத்தைக் குத்தகைக்கு விடுவதன் மூலம் வடபழனி மெற்றோ நிலையம் உருவாக்கப்படும். தீ பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நிலையத்தில் 50,000 முதல் 100,000 லிட்டர் திறன் கொண்ட நிலத்தடி நீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. [5] சந்திப்பைக் கடந்து செல்ல இந்த நிலையத்தில் ஒருங்கிணைந்த மேம்பாலம் உள்ளது. 450 மீட்டர் நீளமுள்ள நான்கு மேம்பாலம் ₹ 694,3 மில்லியன் செலவில் மத்தியப் பகுதி வடபழனி மெற்றோ இரயில் நிலையத்துடன் ஒருங்கிணைக்கப்பட இருக்கிறது. மாநகரப் பேருந்துகள் பயணிகளை இறக்கி பயணிகளை அழைத்துச் செல்ல ஏதுவாக நிலையத்திற்குள் தனிவழி கட்டப்பட்டுள்ளது. [4] சி.எம்.ஆர்.எல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணைந்து இந்த மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia