வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி
வட அயர்லாந்து தேசிய கால்பந்து அணி (Northern Ireland national football team) என்பது வட அயர்லாந்தைப் பிரதொநிதித்துவப் படுத்தும் பன்னாட்டு கால்பந்து அணியாகும். 1882 முதல் 1921 வரை அயர்லாந்து முழுவதும் ஒரே அணியில் "அயர்லாந்து தேசிய கால்பந்து அணி என்ற பெயரில் அயர்லாந்து கால்பந்துச் சங்கத்தின் (IFA) ஆதரவில் விளையாடின. 1921 ஆம் ஆண்டில் ஐரிய சுயாதீன நாடு உருவான போது, அயர்லாந்து கால்பந்துச் சங்கம் வட அயர்லாந்துக்கு மட்டும் உரியதாக சட்டமியற்றப்பட்டது. ஆனாலும், தேசிய கால்பந்து அணி ஒரே அணியில் "அயர்லாந்து" என்ற பெயரில் 1950 வரை விளையாடி வந்தது. அயர்லாந்து என்ற பெயர் 1970கள் வரை புழக்கத்தில் இருந்தது.[1][n 1][2][3] அயர்லாந்துக் குடியரசின் கால்பந்து சங்கம் (FAI) தனியான அயர்லாந்து தேசிய காற்பந்து அணியை உருவாக்கி விளையாடி வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் அணியில் விளையாடி வருகிறது. ஏனைய பன்னாட்டுப் போட்டிகளில் தனியான அணியாக விளையாடுகிறது. வட அயர்லாந்து மூன்று உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் பங்குபற்றியது. 1958, 1982 போட்டிகளில் காலிறுதிக்குத் தகுதி பெற்றது. யூரோ 2016 போட்டியில் முதன் முறையாக ஐரோப்பியப் போட்டிகளில் பங்குபெறத் தகுதி பெற்றது. இவற்றையும் பார்க்ககுறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia