வன்னிவேடு அகத்தீசுவரர் கோயில்
வன்னிவேடு அகத்தீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். அமைவிடம்இக்கோயில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் வன்னிவேடு என்னுமிடத்தில் அமைந்துள்ளது. பாலாற்றின் வட கரையில் இக்கோயில் உள்ளது.[1] இறைவன், இறைவிஇக்கோயிலின் மூலவராக அகத்தீசுவரர் உள்ளார். அகத்தியர் அமைத்த லிங்கம் என்பதால் லிங்கம் குள்ளமாக இருக்கிறது. இறைவி புவனேசுவரி ஆவார். இறைவி, பீடத்தின் மீது தவக்கோலத்தில் நின்ற நிலையில் உள்ளார். சிவராத்திரி, பௌர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன.[1] வரலாறுவன்னி மரங்கள் நிறைந்த இத்தல இறைவனை அகத்தியர் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டதாகக் கூறுவர். திருச்சுற்றில் அஷ்டதிக் பாலகர்கள், காசி விசுவநாதர், விசாலாட்சி, சுப்ரமணியர், சரபேசுவரர், கால பைரவர் ஆகியோர் தனி சன்னதிகளில் உள்ளனர். வன்னி மரத்தின் கீழ் விநாயகர், சனீசுவரர் அடுத்தடுத்து உள்ளனர்.[1] மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia