வயிற்றுப்புற கிளை
வயிற்றுப்புற கிளல என்பது தண்டுவட நரம்புகளின் இரு முதன்மை பிரிவுகளில் முன்புற முதன்மை பிரிவு ஆகும். வயிற்றுப்புற கிளை உடலின் முன்புற மற்றும் பக்கவாட்டுப் பகுதியில் தோல் மற்றும் தசைகளுக்கு மேலும் மேற்கை மற்றும் கால்களுக்கு நரம்புகளை வழங்குகிறது. வயிற்றுப்புற கிளை முதுகுப்புற கிளைகளை விட பெரியதாக உள்ளது. அமைப்புபின்புற மற்றும் வயிற்றுப்புற நரம்பு வேர் இணைந்து உருவான தண்டுவட நரம்புகள் வயிற்றுப்புற கிளை முதுகுப்புற கிளை என இரு முதன்மை பிரிவுகளாக பிரிகிறது. இதில் முன்புற முதன்மை பிரிவான வயிற்றுப்புற கிளை உலலின் முன்புறப் பகுதியில் தோல், தசைகளுக்கு மேலும் மேற்கை மற்றும் கால்களுக்கு நரம்புகளை வழங்குகிறது. எனவே உடலின் முன்புற பகுதியின் உடல உணர்வுகள் மற்றும் உடல இயக்கு விசைகளை கட்டுப்படுத்துகிறது. தண்டுவட நரம்பு மற்றும் அதன் இரு முதன்மை பிரிவுகள் இரண்டும் கலப்பு நரம்புகள் ஆகும்.[1]
முக்கிய தண்டுவட நரம்பு பின்னல்கள்மனித உடலில் உள்ள சில தண்டுவட நரம்பு பின்னல்கள் முறையே கழுத்து, மேற்கை, நாரி மற்றும் திருவெலும்பு தண்டுவட நரம்பு பின்னல்[2][3] ஆகும். கழுத்து தண்டுவட நரம்பு பின்னல் சி1 முதல் சி4 வரையிலான தண்டுவட நரம்புகளின் வயிற்றுப்புற கிளைகளால் ஆனது. மேற்கை தண்டுவட நரம்பு பின்னல் சி5 முதல் டி1 வரையிலான தண்டுவட நரம்புகளின் வயிற்றுப்புற கிளைகளால் ஆனது. நாரி தண்டுவட நரம்பு பின்னல் எல்1 முதல் எல்4 வரையிலான தண்டுவட நரம்புகளின் வயிற்றுப்புற கிளைகளால் ஆனது. திருவெலும்பு தண்டுவட நரம்பு பின்னல் எல்4 முதல் எஸ்4 வரையிலான தண்டுவட நரம்புகளின் வயிற்றுப்புற கிளைகளால் ஆனது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia