வருண் காந்தி
வருண் பெரோஸ் காந்தி (Varun Feroze Gandhi) அல்லது வருண் காந்தி (பிறப்பு 13 மார்ச் 1980) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் பிலிபித் தொகுதியிலிருந்து மக்களவைக்கு மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கபட்ட உறுப்பினராக உள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரான இவர், 2012 மார்ச்சில் ராஜ்நாத் சிங் அணியில் பொதுச் செயலாளராக சேர்க்கப்பட்டார்.[1] இவர் நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்பெரோஸ் வருண் காந்தி [2][3] தில்லியில் 13 மார்ச் 1980 அன்று சஞ்சய் காந்தி மற்றும் மேனகா காந்திக்கு பிறந்தார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேரனும் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் கொள்ளுப் பேரனும் ஆவார். 1980 பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சியைப் பிடித்தவுடன் வருண் பிறந்தார். ஜூன் 1980 இல் வருணுக்கு மூன்று மாத குழந்தையாக இருந்தபோது இவரது தந்தை சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்தார். வருணுக்கு நான்கு வயதாக இருந்தபோது 1984 அக்டோபர் 31 அன்று இந்திரா படுகொலை செய்யப்பட்டார். வருண் இரிஷி வேலி பள்ளியிலும், புது தில்லியில் உள்ள பிரித்தானிய பள்ளியிலும் பயின்றார். அங்கு இவர் மாணவர் அமைப்பில் இருந்தார்.[4] இலண்டன் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டம் பெற்றவர். ஆரம்பகால அரசியல் வாழ்க்கைவருண் காந்தியை முதன்முதலில் பிலிபித் தொகுதியில் இவரது தாயார் 1999 தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிமுகப்படுத்தினார்.[5] முன்னதாக மேனகா தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தார். ஆனால் அவரும் வருணும் முறைப்படி [6] 2004 இல் பாஜகவில் இணைந்தனர். வருண் காந்தி 2004 தேர்தலில் 40 தொகுதிகளுக்கு மேல் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்.[7] ![]() மக்களவை உறுப்பினராக2009 பொதுத் தேர்தலில் வருண் காந்தியை இவரது தாயார் மேனகா காந்திக்குப் பதிலாக பிலிபித் தொகுதியில் வேட்பாளராக நிறுத்த பாஜக முடிவு செய்தது.[8] இவர் 419,539 வாக்குகள் பெற்று தொகுதியை வென்றார். மேலும், 281,501 வாக்குகள் வித்தியாசத்தில் தனக்கு எதிராக போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளரான வி. எம். சிங்கை தோற்கடித்தார்.[9][10][11][12][13] வி. எம். சிங் உட்பட போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் வைப்புத்தொகையை இழந்தனர்.[14] பிலிபித்தின் தல்சந்த் மொகல்லா பகுதியில் நடந்த கூட்டத்தில், வருண் காந்தி மீது முஸ்லிம்களைப் பற்றி ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், இந்த வழக்கில் இவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.[15][16] 5 மார்ச் 2013 அன்று, 2009 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது இவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது வெறுப்புப் பேச்சு வழக்கில் இருந்தும் பிலிபித் நீதிமன்றம் விடுவித்தது.[17] மே 2014 இல், லோக்சபா 2014 தேர்தலில் சுல்தான்பூரில் போட்டியிட்டு அமிதா சிங்கை தோற்கடித்தார்.[18] இவர் 2019 பொதுத் தேர்தலில் பிலிபித் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 250,000 வாக்குகள் பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக மக்களவை உறுப்பினர் ஆனார்.[19] ஆகஸ்ட் 2011 இல், வருண் காந்தி ஜன் லோக்பால் மசோதாவை வலுவாக வலியுறுத்தினார். அண்ணா அசாரேவிற்கு அரசு அனுமதி மறுத்ததை அடுத்து, உண்ணாவிரதத்தை நடத்துவதற்காக, அவருக்கு வருண் காந்தி தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை வழங்கினார்.[20] அசாரே சிறையில் அடைக்கப்பட்டபோது, ஜன்லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முன்வந்தார்.[21] ஆகஸ்ட் 24 அன்று, அன்னா அசாரேவுக்கு ஆதரவளிக்க புதுதில்லி, ராம்லீலா மைதானத்திற்குச் சென்றார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வெளிப்படையாக ஆதரித்த முதல் அரசியல்வாதி ஆனார்.[22] கட்டுரையாளர்தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், தி எகனாமிக் டைம்ஸ் எகனாமிக் டைம்ஸ், இந்தியன் எக்சுபிரசு, தி ஏசியன் ஏஜ், தி இந்து, அவுட்லுக் போன்ற இந்தியாவில் உள்ள பல தேசிய நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு வருண் காந்தி கட்டுரைகள் மற்றும் கொள்கை ஆவணங்களை எழுதுகிறார். எழுத்துகள்வருண் தனது முதல் கவிதைத் தொகுதியான தி அதர்னஸ் ஆஃப் செல்ஃப் என்ற தலைப்பில் 20 வயதில், 2000 இல் எழுதினார். இவரது இரண்டாவது கவிதைத் தொகுதி, ஸ்டில்னஸ் என்ற தலைப்பில் ஏப்ரல் 2015 இல் ஹார்பர்காலின்ஸ் என்ற பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. புத்தகம் வெளியான முதல் இரண்டு நாட்களில் 10,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி, அதிகம் விற்பனையாகும் புனைகதை அல்லாத புத்தகமாக மாறியது.[23] 2018 ஆம் ஆண்டில், இவர் இந்திய கிராமப்புற பொருளாதாரம் குறித்த தனது புத்தகத்தை தி ரூரல் மேனிஃபெஸ்டோ: ரிலீசிங் இன்டியாஸ் பியூட்டர் த்ரோ ஹெர் வில்லேஜ் என்ற தலைப்பில் வெளியிட்டார். புத்தகம் வெளியான பத்து நாட்களில் 30,000 பிரதிகளுக்கு மேல் விற்றது.[24] இவரது நான்காவது புத்தகமான, தி இந்தியன் மெட்ரோபோலிஸ்: டிகன்ஸ்ட்ரக்டிங் இந்தியாஸ் அர்பன் ஸ்பேசஸ் என்பது பிப்ரவரி 2023 இல் வெளியிடப்பட்டது. இதனையும் காண்கசான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia