வறுத்தலைவிளான் வல்லை-தெல்லிப்பழை-அராலி வீதியில் தெல்லிப்பழைக்கும்கட்டுவன் சந்திக்கும் இடையில்,[5] வறுத்தலைவிளான் கிராமசேவகர் பிரிவு (யா/241) வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[6][7]
ஈழப்போர் காரணமாக இக்கிராமம் 1990 ஆம் ஆண்டு முதல் பலாலி விமான நிலையம், மற்றும் அதன் அருகேயுள்ள பலாலி படைத்துறையினரின் பாதுகாப்புக்காக உயர் பாதுகாப்பு வலயத்தில் முடக்கப்பட்டுள்ளது.[8][9][10][11]
தமிழறிஞர் வித்துவ சிரோமணி சி. கணேசையர் (1878-1958)[12][13] வறுத்தலைவிளானில் வாழ்ந்து வந்தார். இங்குள்ள மருதடி விநாயகருக்கு ‘மருதடி விநாயகர் பிரபந்தம்’, ‘மருதடி விநாயகர் இருபா இருபஃது’ ‘மருதடி விநாயகர் அந்தாதி’ ‘மருதடி விநாயகர் ஊஞ்சல்’ எனப் பல பாடல்களை எழுதி வெளியிட்டார்.[14][15]
வறுத்தலைவிளான் அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை 1866 ஆம் ஆண்டில் வினாசித்தம்பி தம்பிப்பிள்ளை என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலை 1990 சூன் வரை இயங்கி வந்தது.
2015 ஆம் ஆண்டில் இலங்கையில் மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அரசு பதவியேற்றதை அடுத்து பலாலி, வீமன்காமம் தெற்கு, வறுத்தலைவிளான் பகுதிகளில் 400 ஏக்கர் காணிகளையும், கட்டுவன், குரும்பசிட்டி பகுதிகளில் 300 ஏக்கர் காணிகளையும் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து மீள்குடியேற்றத்திற்காக விடுவித்தது.[16][17]