வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா

வாய்சு ஆஃப் அமெரிக்கா
Typeபன்னாட்டு பொது ஒளிபரப்பு கூட்டுநிறுவனம்
Countryஅமெரிக்கா
Founded1942
Headquartersவாசிங்டன் டி.சி.
Ownerஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு
Official website
www.voanews.com

வாய்சு ஆஃப் அமெரிக்கா - ஐக்கிய அமெரிக்க கூட்டரசுக்கு சொந்தமான ஒரு பன்னாட்டு ஒளிபரப்பு நிறுவனம்.

அமெரிக்காவின் ஒளிபரப்பு வாரிய ஆளுநர்கள் அமைப்பின் (BBG) கீழ் இயங்கி வரும் இந்நிறுவனம் [1] அமெரிக்காவுக்கு வெளியே 45 மொழிகளில் பல்வேறு வானொலி, தொலைக்காட்சி சேவைகளை வழங்கி வருகிறது.

வாய்சு ஆஃப் அமெரிக்கா உலகளவில் செய்தி, பிற நிகழ்ச்சிகளை கிழமைதோறும் 1500 மணி நேரம் ஒலி/ஒளிபரப்புவதை ஏறக்குறைய 123 மில்லியன் பார்வையாளர்கள் பார்க்கின்றனர்.

மொழிகள்

வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா தற்போது 45 மொழிகளில் ஒலி/ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. (தொலைக்காட்சி அலைவரிசைகள் விண்மீன் சின்னத்துடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன):

சிறப்பு ஆங்கிலம்

வாய்சு ஆஃப் அமெரிக்காவின் வாசிங்டன் டி.சி. யில் உள்ள தலைமையகம்

ஆங்கிலம் சரியாக தெரியாதவர்களுக்கு உதவும் வகையில், குறைந்த வேகத்தில் வார்த்தைகளை நன்கு தெளிவாக உச்சரிக்கும் சிறப்பு ஆங்கில (Special English) நிகழ்ச்சிகள் 1959 அக்டோபர் 19-ம் தேதி முதல் ஒலிபரப்பத் தொடங்கியது.

இந்த முறையில் செய்திகள் வாசிக்கும்போது செய்தி வாசிப்பாளர்கள் வழக்கத்தைவிட குறைந்த வேகத்தில் செய்திகளை படிப்பதோடு கடுமையான சொற்களை தவிர்த்து 1500 அடிப்படை சொற்களை மட்டுமே பயன்படுத்துவர். [2]

ஆங்கிலம் பயில்வோருக்கு இந்நிகழ்ச்சி உதவிகரமாக இருக்கும். இந்தியாவில் டிசிட்டல் செட் டாப் பாக்சு மூலம் கேபிள் டி.வி. நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களுக்கு வாய்சு ஆஃப் அமெரிக்காவின் சிறப்பு ஆங்கில நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி பெட்டியின் மூலமும் கேட்க முடியும்.

மேற்கோள்கள்

  1. "ஒளிபரப்பு வாரிய ஆளுநர்கள் அமைப்பு". Archived from the original on 2016-06-14. Retrieved 2013-10-19.
  2. சிறப்பு ஆங்கிலம்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya