விக்கிப்பீடியா:உரித்தாக்கம்பயனர்கள் தாங்கள் ஒவ்வொரு மாதமும் செய்யும் தொகுப்புகளை தாங்கள் மதிக்கும், ஊக்குவிக்க நினைக்கும் இன்னொரு பயனருக்கு உரித்தாக்கலாம். விக்கியன்பின் ஒரு பகுதியாகவும் இதனை நோக்கலாம்.
பிப்ரவரி 2015எனது இம்மாதத் தொகுப்புகளை பல திறமையான விக்கி, கணிமைக் கருவிகளை உருவாக்கியுள்ள நீச்சல்காரனுக்கு உரித்தாக்குகிறன். மீண்டும் அவர் முன் போல் முனைப்புடன் விக்கியில் பங்களிப்பதைக் காண ஆவல் :) --இரவி (பேச்சு) 05:56, 3 பெப்ரவரி 2015 (UTC) நான் என்னுடைய 2015 பெப்ரவரி தொகுப்புக்களை விக்கியில் தளராமல் உழைத்துவரும் பயனர் சிறீதரனுக்கு (Kanags) உரித்தாக்க விரும்புகிறேன். -- மயூரநாதன் (பேச்சு) 03:25, 5 பெப்ரவரி 2015 (UTC) சனவரி 2015இம்மாதம் நான் செய்யும் இலக்குத் தொகுப்புகளை செங்கை செல்விக்கு உரித்தாக்கலாம் என்று எண்ணியுள்ளேன். தானும் பங்களிப்பதோடு அல்லாமல் செங்கை பொதுவனுக்கு உற்ற துணையாகவும் விளங்கும் அவர்களின் பெருமைக்கு இதன் மூலம் என்னால் இயன்ற சிறு சிறப்பைச் சேர்க்க இயலும் என்று எண்ணுகிறேன். இது போல் ஒவ்வொரு பங்களிப்பாளரும் தங்கள் மனம் கவர்ந்த பங்களிப்பாளருக்குத் தம் இலக்குத் தொகுப்புகளை உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகமூட்டி இந்த இலக்குப் பயணத்தில் பங்கேற்கச் செய்ய முடியும். இத்தகைய உரித்தாக்குதலை குறிப்பிட்ட பயனர்களின் பேச்சுப் பக்கங்களில் தெரிவிக்கலாம். எல்லாருக்கும் புரிகிற மாதிரி தமிழில் சொல்வதென்றால் உங்க editsஐ dedicate பண்ணுங்க ;) --இரவி (பேச்சு) 20:25, 8 சனவரி 2015 (UTC)
சனவரியில் நான் செய்யும் தொகுப்புகளை ஸ்ரீகர்சனுக்கு உரித்தாக்குகிறேன். இந்த ஆண்டின் மற்ற மாத தொகுப்புகளை ஆன்டனுக்கும் சேலம் & கோவை வாத்தியாரம்மாக்களுக்கும் உரித்தாக்குகிறேன். --குறும்பன் (பேச்சு) 17:27, 20 சனவரி 2015 (UTC)
பல்வேறு எதிர்ப்புக்களையும் குற்றச்சாட்டுக்களையும் தாங்கிக் கொண்டு, சோர்ந்துவிடாமல், த.வி.யின் கலைக்களஞ்சியத்தன்மை ஒன்றையே மனதிலிருத்தி, எழுதப்பட்டதும் கட்டுரைகள் விக்கிப்பீடியாக்குரியவையேயொழிய தனியாட்களினுடையவை அல்ல என்ற புரிதலுடன் சலிக்காமல் அஞ்சாமல் குப்பைகளை நீக்கும் என்சக துப்பரவுத் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் எனது இம்மாத தொகுப்புக்களை உரித்தாக்குகிறேன். எவ்வளவ பார்த்துட்டோம் :) விடாது முன்னேறுவோம். கோபி (பேச்சு) 12:59, 22 சனவரி 2015 (UTC)
சென்ற ஆண்டு (2014), விக்கிப்பீடியாவைப் பற்றி விளக்கவுரைகள் செய்ய திரு. இரவி மலேசியா வந்திருந்தார். அவரைச் சந்திக்க முடியாமல் போய் விட்டது. சுங்கை சிப்புட் நகரில் நடந்த விளக்கக் கூட்டத்தில் நிறைய விளக்கங்களைக் கொடுத்து இருக்கிறார். அந்தக் கூட்டத்தில் கிளேபாங் தமிழ்ப்பள்ளியில் ஆறாம் ஆண்டு பயிலும் என் பேத்தியும் (ஸ்ரீ லேகா) கலந்து கொண்டார். ரவி அவர்களுக்கு என் பேத்தியைத் தெரியாது என்று நினைக்கிறேன். ஆரம்ப காலங்களில், விக்கிப்பீடியாவில் தட்டுத் தடுமாறி எழுதிக் கொண்டு இருக்கும் போது, எனக்கு உதவி செய்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கனக்ஸ், குறும்பன், சோடாபாட்டில், இரவி, செல்வசிவகுருநாதன், மகிழ்நன், நற்கீரன், சிவக்குமார், தமிழ்க்குரிசில், தென்காசி சுப்பிரமணியன், கார்த்திக் இராமானுஜம், அண்டன், சஞ்சீவி சிவகுமார், புன்னியாமீன், பாஹிம். இப்படி நிறைய பேர். இன்னும் சிலரின் பெயர்கள் விடுபட்டு போய் இருக்கலாம். பொறுத்தருளவும். ஒரு குடும்பமாக நின்று தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறோம். இந்த நிலை தொடர்ந்து நிலைக்க வேண்டும். நமக்குள் குறை நிறைகள் இருக்கலாம். அதை எல்லாம் பெரிது படுத்தாமல், நம்முடைய சேவைகளைத் தொடர்ந்து செய்வோம். அதுவே தமிழ் அன்னைக்கு நாம் செய்யும் கைமாறு. ஆக, என்னுடைய தொகுப்புகளை இரவி அவர்களுக்கு உரித்தாக்குகிறேன். நந்தக்குமார் அவர்களுக்கு நன்றிகள். நன்றிகள். மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு--ksmuthukrishnan 13:39, 22 சனவரி 2015 (UTC)
கனக சிறிதரனும் இரவியும் ஏற்கனவே இதில் பங்களிப்பதாலும் சோடா சூரியா போன மாதம் தான் விக்கிக்கு எட்டிப் பார்த்துட்டு போனதாலும் சில மாதங்களாக விக்கியில் பங்களிக்காமல் இருக்கும் தலையைக் காட்டாத வாத்தியார் அம்மாக்கு நான் என் பங்களிப்புகளை உரித்தாக்குகிறேன். ஒழுங்கா வரலைனா பங்களிப்புகளை வேரு யாருக்காவது கொடுத்துபுடுவேன். அக்காங்...... --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:10, 27 சனவரி 2015 (UTC)
சனவரி மாதம் நான் செய்திருந்த 500 அதிகமான தொகுப்புகளை இருவருக்கு உரித்தாக்குகிறேன். தமிழ் விக்கியில் இணைந்த மிகக் குறுகியகாலத்திலேயே பயனுள்ள பங்களிப்பை வழங்கிவரும் பயனர் திரு.பா.ஜம்புலிங்கம் அவர்களுக்கும் மற்றும் தமிழ் விக்கிப்பீடியாவிற்காகவே தனது வாழ்வின் பெரும் பகுதியை செலவிட்டுவரும் நண்பர் இரவி அவர்களுக்கும் எனது சனவரி மாதத் தொகுப்புகள் உரித்தாகுகிறது.--இரா.பாலா (பேச்சு) 02:27, 3 பெப்ரவரி 2015 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவின் வரலாற்றில் சுந்தர், நற்கீரன் ஆகியோரது பங்களிப்புக்கள் மிகவும் முக்கியமானவை. எனது சனவரி மாதத் தொகுப்புக்களை அவர்கள் இருவருக்கும் உரித்தாக்குகிறேன். --மயூரநாதன் (பேச்சு) 03:34, 5 பெப்ரவரி 2015 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia