This page in a nutshell:தற்காவல் அணுக்கம் உள்ள ஒருவர் உருவாக்கும் புதிய பக்கங்கள் சுற்றுக்காவலுக்குட்பட்டதாக தாமாகவே குறிக்கப்படும். இதன் மூலம் சுற்றுக்காவலர்களின் பணிச்சுமை குறையும். இவ்வணுக்கம் பல புதிய கட்டுரை உருவாக்கங்கள் மூலம் வாழும் மாந்தர்களின் வரலாற்றுக் கட்டுரைகள், காப்புரிமம், மெய்யறிதன்மை, குறிப்பிடத்தக்கமை தொடர்பாக நல்ல புரிதலைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தி இருக்கும் அனுபவம் வாய்ந்த பயனர்களுக்கு வழங்கப்படும்.
தற்காவல் (autopatrolled அல்லது autoreviewer) அணுக்கத்தைத் தொடர்ந்து சிறப்பாக பங்களித்து வரும் பயனர்களுக்கு அவர்கள் கோராமலேயே எந்த ஒரு நிருவாகியும் தாமாகவே வழங்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். ஒரு பயனருக்கு இவ்வணுக்கத்தை வழங்கிய பின் அது குறித்த மாற்றுக் கருத்து இருந்தால், அணுக்கம் வழங்கிய நிருவாகியுடன் இந்தப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உரையாடலாம். குறிப்பிட்ட பயனர் தற்காவல் அணுக்கம் பெறுவதற்குக் கடைபிடிக்க வேண்டிய, மேம்படுத்திக் கொள்ள வேண்டிய விசயங்களைப் பட்டியலிட்டு அவருடைய பேச்சுப் பக்கத்தில் பொதுவாக வேண்டுகோள் விடுக்கலாம். இருப்பினும், தொடர்ந்து மேம்பாடுகள் இல்லை என்றால், அணுக்கத்தை மீளப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வணுக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு பயனர் வழமை போலவே பங்களிக்கப் போகிறார் என்பதாலும், ஒரு நிருவாகி தாமாக வழங்கும் அணுக்கம் தொடர்பாக பயனருக்குத் தேவையில்லாத உளைச்சல் வரக்கூடாது என்பதாலும் பொதுவாக அவருடைய பங்களிப்பைப் படிப்படியாக மேம்படுத்தும் வண்ணம் கனிவுடன் சுட்டிக் காட்டுதல் வேண்டும்.
இவ்வணுக்கத்தைப் பெறவோ வழங்கவோ ஒருவர் குறைந்தது 50 கட்டுரைகளாவது உருவாக்கி வாழும் மாந்தர்களின் வரலாற்றுக் கட்டுரைகள், காப்புரிமம், மெய்யறிதன்மை, குறிப்பிடத்தக்கமை தொடர்பாக நல்ல புரிதலைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியிருப்பது அவசியம். தாமாகவே இவ்வணுக்கம் வேண்டுவோரும் மேற்கண்ட 50 கட்டுரைகள் எண்ணிக்கையைக் கடந்திருக்க வேண்டும்.
45 கட்டுரைகள் தொடங்கியுள்ளார். எனினும், தொடர் விக்கிப்பீடியா பங்கேற்புகள் மூலம் தற்காவல் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.
46 கட்டுரைகள் தொடங்கியுள்ளார். எனினும், விக்கிமூலம், விக்கித்தரவு உள்ளிட்ட தளங்களில் சிறப்பான பங்களிக்கின்றமையால், தற்காவல் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.
321 முதன்மைக் கட்டுரைகள் தொடங்கியுள்ளார். எனினும், தொடர் விக்கிப்பீடியா பங்கேற்புகள் மூலம் தற்காவல் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.
600 கட்டுரைகளுக்கு மேல் உருவாக்கி நீண்டகாலமாகத் தமிழ் விக்கியில் கட்டுரைகள் எழுதிவருபவர். தற்போது மூன்று மாதங்களுக்கு அணுக்கம் வழங்கியுள்ளேன். அவரது தொடர் பங்களிப்புகளைக் கவனித்து தற்காவல் அணுக்கத்தை நீட்டிக்கலாம்.