This page in a nutshell:முன்னிலையாக்கர் அணுக்கம் விக்கிப்பீடியாவில் தொகுக்கப்படும் விசமம், தீக்குறும்பு, தவறுதல் தொகுப்புக்களை இலகுவாக எதிர்கொள்ள உள்ள ஓர் முறையாகும். விக்கிப்பீடியாவின் கொள்கைகள் தொடர்பாக நல்ல புரிதலைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தி இருக்கும் அனுபவம் வாய்ந்த பயனர்களுக்கு வழங்கப்படும்.
விக்கிப்பீடியாவில் செயற்படும் விக்கிமீடியா மென்பொருள் முன்னிலையாக்கர் அல்லது முன்னிலையாக்கல் (Rollback அல்லது Rollbacker) என்ற அணுக்கம் தொடர்பில் உள்ள ஓர் ஏற்பாடாகும். இவ் அணுக்கம் பெற்ற ஒருவர் தனியொரு சொடுகல் மூலம் பக்கத்தை முறையான தொகுத்தலுக்கு கொணர முடியும். இந்த முன்னிலையாக்கல் விக்கிப்பீடியாவில் செய்யப்படும் சிக்கல்மிக்க தொகுப்புக்களான விசமம், தீக்குறும்பு ஆகியவற்றை மீளமைக்கு பயன்படுத்தப்படுகிறது.
அணுக்கம் பெறுவதற்கான தகுதி
குறைந்தது 1000 முதன்மை வெளித் தொகுப்புகளையாவது செய்திருக்க வேண்டும்.
கணக்கைத் தொடங்கி, குறைந்தது 6 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும்.
ஏற்கெனவே, விசமத் தொகுப்புகளைத் தடுக்கும் வகையில் செயற்பட்டு வருபவராக இருக்க வேண்டும்.
இவ்வணுக்கம் வழங்கப்பட்ட பயனர் அதனைத் தவறாகப் பயன்படுத்தினால் முதல் தடவை பேச்சுப்பக்கத்தில் விளக்கலாம். மீண்டும் தவறாகப் பயன்படுத்தினால், அது தொடர்பில் நிருவாகிகள் விளக்கம் கோரலாம் (மூன்று நாட்களுக்குள் பதிலளிக்கக் கோரலாம்). விளக்கம் தவறாக இருந்தாலோ அல்லது பதிலளிக்கத் தவறினாலோ நிருவாகிகள் இவ்வணுக்கத்தை நீக்கலாம்.
பயனர்களின் வேண்டுகோளின் பேரில் வாக்கெடுப்பு ஏதுமின்றி, வேண்டுகோள் விடுக்கப்பட்டு 3 நாள்களின் பின் (மாற்றுக்கருத்து இருப்பின் அறிவதற்காக), இவ்வணுக்கத்தை வழங்கலாம்.
அணுக்கத்தைத் தொடர்ந்து சிறப்பாக பங்களித்து வரும் பயனர்களுக்கு அவர்கள் கோராமலேயே எந்த ஒரு நிருவாகியும் தாமாகவே வழங்குவதாவிருந்தால், இங்கு தெரிவித்து 3 நாள்களின் பின், மாற்றுக்கருத்து இல்லாதிருப்பின் இவ்வணுக்கத்தை வழங்கலாம்.
எப்படி இயங்குகிறது
முன்னிலையாக்கர் அணுக்கம் கொண்ட பயனர் மேலதிக முன்னிலையாக்க வசதிகளைக் பக்க வரலாறு, "பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு", பயனர் பங்களிப்புக்கள், கவனிப்புப் பட்டியல் என்பவற்றில் கொண்டிருப்பர்.
10:01, 22 நவம்பர் 2013எடுத்துக்காட்டு (பேச்சு | பங்களிப்புகள்) .. (55 பைட்டுகள்) (+1) .. (10-க்கும் மேற்பட்ட தொகுப்புகளை முன்நிலையாக்குக | மீளமை | நன்றியுரை) - இதில் (10-க்கும் மேற்பட்ட தொகுப்புகளை முன்நிலையாக்குக என்பது முன்னிலையாக்கத்திற்கான எடுத்துக்காட்டு.
முன்நிலையாக்குக என்பதை சொடுக்குவதன் மூலம் முன்னைய நிலைக்கு பக்கத்தைக் கொணரலாம். இது பக்க வரலாற்றில் காணப்படும். இதை முன்நிலையாக்கியதும் பின்வரும் சுருக்கம் தெரியும்:
சி (User A (பேச்சு) ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) (தற்போதைய) [1 தொகுப்பை முன்நிலையாக்குக]
889 முதன்மைவெளித் தொகுப்புகள் செய்துள்ளார். எனினும், தொடர் விக்கிப்பீடியா பங்கேற்புகள் மூலம் முன்னிலையாக்கர் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.
547 முதன்மைவெளித் தொகுப்புகள் செய்துள்ளார். எனினும், விக்கிமூலம், விக்கித்தரவு உள்ளிட்ட தளங்களில் சிறப்பான பங்களிக்கின்றமையால், முன்னிலையாக்கர் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.