விக்கிப்பீடியா:வகைப்படுத்துதல்வகைப்படுத்தல் அறிதலின் ஒரு முக்கிய வழிமுறை. அனைத்தையும் இயல்களாக வகுக்கும் பொழுது நாம் உலகை நோக்கி ஒரு புரிதலையும் எமது உலக பார்வையையும் முன்வைக்கின்றோம். இச்செயற்பாடு எம் அறிவுக்கும் தேடல்களுக்கும் ஒரு அடிப்படை அம்சம். த.வி வின் வகைப்படுத்தல் தமிழ்ச் சூழமைவுக்கமைய, தமிழர் பின்புலத்தில் இருந்து அறிவியலோடும், இயற்கையோடும், உலக இயல்போடும் ஒத்து கட்டமைக்கப்படுகின்றது. வகைப்படுத்தல் நோக்கி சீரான பகுத்தறிவை நாம் தொடர்ச்சியாக வளர்த்துகொண்டு இச்செயற்பாட்டை முன்னெடுக்கின்றோம். கட்டுரை ஆக்கம், நுட்ப கட்டமைப்பு, சமூகம், கொள்கைகள் போன்றே வகைப்படுத்தல் தமிழ் விக்கிபீடியாவின் ஒரு முக்கிய அம்சம். இந்தப்பக்கத்தின் நோக்கம் தமிழ் விக்கிபீடியாவின் வகைப்படுத்தல் அணுகுமுறையை வரையறை செய்து விபரித்தலே ஆகும். அச்செயற்பாட்டில் அந்த அணுகுமுறையை விளங்கிகொண்டு மேம்படுத்தலும் உட்படும். இங்கு எமக்கு இரண்டு நிலைகளில் புரிதல் தேவை. ஒன்று வகைப்படுத்தல் நோக்கிய புரிதல். இரண்டாவது வகைப்படுத்தப்படும் இயல்கள் நோக்கிய புரிதல். வகைப்படுத்தல் தகவல்களை சேகரிப்பதற்கும் மீட்டெப்பதற்கும் உதவும் ஒரு செயற்பாடு. தமிழ் விக்கிபீடியாவில் இலக்கமியல் முறையில் தகவல்கள் சேகரிப்பதும் மீட்டெப்தும் பிற முறைகளில் (எ.கா நூலம், காப்பகம் - archives) தகவல்களை சேகரிப்பதற்கும் மீட்டெப்பதற்கும் காட்டிலும் பல்வேறு வழிகளில் வேறுபட்டது. கையேடுவகைப்படுத்தலின் அடிப்படை
கீழே த.வி வில் உள்ள தாய்ப் பகுப்புகளும், அவை ஏன் தாய்ப் பகுப்புகளாக வகைப்படுத்தப்பட்டன என்பதற்கான சுருக்க விளக்கமும். இயல்கள்
(மேலே தரப்பட்டவற்றை தவிர, சமயம், கலைகள், வேளாண்மை, மருத்துவம், ஊடகங்கள், தமிழர் போன்ற தலைப்புகளையும் தாய்ப் பகுப்பு ஆக்குவது பற்றி கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.) தகவல் வெளிப்படுத்தல் முறைகள்
வகைப்படுத்தல் கலந்துரையாடலுடன் தொடர்புடைய சில முக்கிய சுட்டிகள்
இவற்றையும் பார்க்க |
Portal di Ensiklopedia Dunia