தாவரவியல் கட்டுரைகளை, பன்னாட்டு தரவுகளினால் விக்கியாக்கம் செய்வதே, இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். எனவே, பன்னாட்டு தாவரவியலாளர் பெரும்பான்மையாக ஏற்றுக்கொண்ட தாவரவியல் தரவுகளை, கட்டற்ற உரிமத்தில் தரும் அமைப்புகளின் செயற்பாடுகளை, நாம் அறிதல் தேவையாகிறது. அப்பொழுதே, தமிழரின் தனித்துவம் மிக்க சித்த மருத்துவத் தாவரங்களின் தனித்துவத்தை, நாம் அறிவியல் ஆய்வுகளினால் தெளிவாக புரிந்து கொள்ள இயலும். நம் சித்த மருத்துவ நுட்பங்களை வளர்ப்பதற்கான வழிமுறைகளும் தோன்றும். நம்பிக்கை அடிப்படையில் அல்லாமல், தெளிவான புரிதலை பொதுமக்களிடம் உருவாக்கினால் தான், தாவரவளம் எந்நாட்டிலும் பெருகம்; நிலைக்கும். ஏற்கனவே உள்ள தாவரவியல் கட்டுரைகளின், நிறைகுறைகளை அறிந்து கொண்டால் தான், புதிய கட்டுரைகளைச் சிறப்பாக உருவாக்க வழிவகைகள் தோன்றும். எனவே, எங்களை அணுகி, உங்கள் ஈடுபாட்டினையும், எண்ணங்களையும் தருக.
தாவரவியல் பெயரிடல் முறைமை
ஒரு தாவரத்தின் பொதுப்பெயரானது, இடத்திற்கு இடம், ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. எனவே, அறிவியல் கண்டுபிடிப்புகளை பகிரும் போது, குழப்பங்களைத் தவிரக்க, ஏறத்தாழ 300 ஆண்டுகளாக பன்னாட்டு தாவரவியலாளர்கள் தாவரவியல் பெயரிடல் முறைமைகளை வளர்த்தும், பின்பற்றியும் வருகின்றனர். எனவே, பன்னாட்டினரும் ஏற்றுக்கொண்டு அறிவித்த, தாவரவியல் பெயர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அவற்றின் தமிழ் பெயர்களையும் அறிந்து கொள்ளுதல் வேண்டும். அப்பொழுது ஏற்படும் பொருள் மயக்கத்தைத் தவிரக்கவும், அயல்நாட்டுத் தாவரங்களுக்கு பொருத்தமான தமிழ் பெயர்கள் இல்லாநிலை ஏற்படுமாயின், /பெயரிடல் வழிமுறை பக்கத்தினைக் காணவும். இப்பக்கத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறைகளையும், ஏற்படும் புதிய தேவைகளும், தொடர்புடைய நுட்பங்களும் ஒருங்கிணைக்கப் படுகின்றன.
பொதுவக வார்ப்புருவில் இருக்கும் பொருத்தமில்லா இணைப்புகளை மேம்படுத்த வேண்டும். (எடுத்துக்காட்டு)
தேவையற்ற வழிமாற்றுகளை நீக்குதல். எடுத்துக்காட்டு: எம்பிரியோபைட் என்பது நிலத்தாவரங்கள் என வழிமாற்று இன்றி நகர்த்தப்பட்டது.
இதுபோல ஏற்கனவே ஒலிபெயர்ப்பில் சொல்லிருக்கும் பக்கங்களில் தமிழ் பெயர்களை மாற்றிய பிறகே வழிமாற்று இன்றி பக்கத்தினை நகர்த்த வேண்டும்.
கிரந்த தலைப்பு நீக்க வேண்டும். அப்பொழுது ஏற்கனவே கிரந்த தலைப்பு உள்ள கட்டுரைகளிலும் மாற்றம் ஏற்படுத்தி வழிமாற்று இன்றி கிரந்தமற்ற தலைப்புக்கு நகர்த்த வேண்டும். எடுத்துகாட்டு: ஐஸோநேந்த்ரா லான்சியொலாட்டா
பகுப்பு:கூகுள் தமிழாக்கம்-தாவரவியல் - இவை பெருங்கட்டுரைகளாக உள்ளன. முழுமையாக செய்ய வேண்டும் என்பது இலக்கு. எனினும், 5000 பைட்டுகள் உள்ள கட்டுரையாக முதலில் மாற்றுக. பிறகு விரிவுபடுத்துக.
புதிய கட்டுரைகளை உருவாக்குதல்
பன்னாட்டு தாவரத் தரவுகளால் கட்டுரை உருவாக்கம்
புதிய கட்டுரைகளை, மேற்கூறிய சீர்மைகளோடு, உருவாக்குதல்
பன்னாட்டுத் தாவரவியல் அமைப்புகளின் கட்டுரைகளை உருவாக்குதல். எடுத்துக்காட்டு: பனை இல்லம், கியூ தோட்டம்
படங்கள் கட்டற்ற முறையில் பல பன்னாட்டுத் தாவரவியல் தளங்களில் இருக்கின்றன. (காண்க: இணையப்பக்கம். )
பொதுவகத்தில் படங்கள் இல்லையென உறுதிசெய்த பிறகு, பொதுவகத்தில் ஏற்றுதல். (எடுத்துக்காட்டு: c:Category:Borassus heineanus என்ற பகுப்பும், படங்களும் இணைக்கப்பட்டன)
முதற்கட்டமாக பூக்கும் தாவரத் தொகுதிமரபு குழும முறைமை 4 இக்கட்டுரையை முழுமையாக வளர்த்தெடுத்தல். பின்பு, இதனை அடிப்படையாகக் கொண்டு, புதிய நுட்பங்கள், புதிய கட்டுரைகள், இதற்குமுன் அமைந்த கட்டுரைகளை இற்றைப்படுத்தவும் செய்தல் வேண்டும்.
ஒரு தாவரவியலாளர் பெயரை, பன்னாட்டு சீர்தர பெயரோடு இணைத்தல். (எ-கா: பன்னாட்டு சீர்தரமுள்ள சுருக்கப்பெயர்) இதுபோல, அனைத்து தாவரவியலாளர் பெயர்களை, தொடர்புடைய அனைத்து கட்டுரைகளிலும் இணைக்க வேண்டும்.
தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள தாவரவியல் கட்டுரைகளின் தலைப்புகளை, petscan வழியே எடுக்கலாம். பகுப்பு, துணைப்பகுப்பு, துணைப்பகுப்பின் உட்பகுப்பு என மூன்று கட்டகத்தினுள்ளும் சென்று தாவரப்பெயர்களை இந்த இணைப்பு தரும். இவற்றை அணித்தரவு கோப்பாக தரவிறக்கிக் கொள்ளுதல் நன்று.
விக்கிநூல்கள் திட்டப்பகுதியில், பைத்தான்3 நுட்பத்தில் தமிழ்சொற்களைக் கொண்டு(as variable) எளிய நிரலாக்கங்களை உருவாக்குதல். இதனால் யாவரும் புரிந்து கொண்டு விரைந்து செயற்படசெய்தல்.
இத்தளத்தின் API விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வெளிவர உள்ளதால் அதனை தொடர்ந்து கவனித்தல்.
d:Wikidata:WikiProject Taxonomy என்பதில், எளிமையாக ஒரே ஒரு விக்கித்தரவு வார்ப்புரு({{#invoke: Taxobox | taxobox | qid=Q34687| count=6 |lang=de }.}) இடுவதன் மூலம், தாவரத் தகவற்பெட்டியும், பத்துக்கும் மேற்பட்ட மேற்கோள்களோடும் காட்டுவதற்கான நுட்பம் வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும், d:Template:Taxobox, fr:Rosanae என்பனவற்றையும் ஒருங்கிணைத்து, APG IV அடிப்படையில் தனி தகவற்பெட்டி அமைப்பது நன்று.
மேலும், ஒவ்வொரு தாவரயினத்தின் வாழிட, ஒத்தப்பெயர்களை எடுக்க, பியூட்டிபுல் சூப் பயன்படுத்தி எடுக்கலாம்.
உலக தாவரவள இணைநிலை தளத்தின் அணித்தரவுக்கோப்பு ஏறத்தாழ 1000 மெகாபைட்டு இருக்கிறது. ஏறத்தாழ 15 இலட்சம் வரிகள் உள்ளன. ஒரு தாவரத்திற்கு ஒரு வரி எனலாம். அத்தரவினை சிப்லிட்டு (split = en:split (Unix)) கொண்டு பிரித்தல்.
பைன்டு (find, en:find (Unix)) ஒரு கோப்புரைக்குள் பல கோப்புகள் உள்ள போது. எடுத்துக்காட்டாக 100 கோப்புகள் உள்ளன. அவற்றில் இருந்து குறிப்பிட்ட பொதுவான பெயரினைக் கோப்புகளை மட்டும் (எ-கா. *-2powo-placesClean.txt) பிரித்தெடுக்க $ find . -name \*.xls -exec cp {} newDir \; என்ற கட்டளையை பயன்படுத்தலாம்.[1]
உலக தாவரவள இணைநிலை இணையத்தின் அணித்தரவுக்கோப்பில் இருந்து, வேண்டிய தாவரயினத்தின் தரவுவரியைப் பிரித்தெடுக்கும் பைத்தான்3 நிரலாக்கம்.
நுட்பத் தேவைகள்
நிலவியல் வரைப்படங்களில் குறிப்பிட்ட நாடுகளைக் காட்ட நுட்பம் தேவை. எடுத்துக்காட்டு, காட்டு மல்லியின் பல ஆப்பிரிக்க நாடுகளைக் (தாயகங்கள்) காட்ட இயலுமா? அங்குள்ள படம், கட்டற்ற உரிமத்தில் உள்ளதால், எளிமையாகப் பதிவிறக்கம் செய்ய பொதுவகத்தின் நுட்பத்தினை அறிக.
மேற்கோள் வார்ப்புருக்களை இணைக்கும் போது, ஏறத்தாழ 80 வார்ப்புருக்களே இணைக்க இயலும். ஆனால் ஒரு தாவரக்குடும்பத்தில் அதற்கும் மேற்பட்ட இனங்கள் இருக்க வாய்ப்புண்டு. உரிய மேற்கோள் இணைப்புகளைக் கட்டுரைகள் உருவாக்கத்தின் போதே கொடுத்தால், பின்னாளில் கட்டுரை உருவாக்கத்திற்கு உதவியாக இருக்கும். எ-கா எண்பதிற்க்கும் மேற்பட்ட மேற்கோள்களைத் தரும் போது ஏற்பட்ட இடரும், தானியக்கப் பகுப்பும்..