அனைவருக்கும் வணக்கம் ஏதேனும் ஐயம் இருந்தால் இங்கே கேட்கலாம்
விருப்பம் பங்களிக்கும் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் senior என்ற முறையில் வாழ்த்துகள் :) நானும் பள்ளி பயிலும் காலத்தில்தான் விக்கியில் பங்களிக்கத் தொடங்கினேன். இப்போது, கல்லூரி மூன்றாமாண்டு படித்து வருகிறேன். அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்... --சூர்யபிரகாஷ்உரையாடுக11:43, 11 ஏப்ரல் 2013 (UTC)[பதிலளி]
நன்றி,இப்பக்கத்தை நான் கனக்ஸ், செல்வசிவகுருனாதன் போன்றவர்களின் ஆலோசனைகாலாலேயே இப்பக்கத்தை உருவாக்கியுள்ளேன்.--aathavan jaffna 13:34, 11 ஏப்ரல் 2013 (UTC)
ஆதவன்! பலரின் புரிதலுக்கு வேண்டி, யாழ் பாடசாலை என்று மாற்றியுள்ளேன். 50-60 நபர்களுக்கு நான் விக்கிப்பங்களிப்புச் சொல்லிக் கொடுத்திருப்பேன். அந்த அனுபவத்தில் கீழ்கண்டவற்றை முன்மொழி விரும்புகிறேன்.
வாழிடம் குறித்த படங்களை எடுக்கச் சொல்வோம். ஏனெனில், எழுதுவதை விட படமெடுத்தல் எளிமை.
அடுத்து அவரவர் பிறப்பிட ஊரைப் பற்றி எழுதச் சொல்வோம்.
புதியவர்களுள்ள இடர்களும், ஐயங்களும் வேறுபட்டு காணப்படும். அவைகளை இனங்கண்டு நீக்கினால் அவர்கள் தொடர்ந்து பங்களிப்பர்.
பலவித ஊடகக் கோப்புகளை இங்கு வளர்ப்பேன்.பள்ளி விக்கியர்இடப்பக்கமுள்ள படக்கோப்பினை, இத்திட்டத்திற்கு /குறிப்பாக புதியவர்கள் பயன்படுத்த முன்மொழிகிறேன். ≈ த♥உழவன்( கூறுக )06:50, 5 மே 2013 (UTC)[பதிலளி]
இடப்பட்ட கோப்பு பொத்தமில்லை. சிறுவர்/குழந்தைகள் என்னும் போது பெரும்பாலும் 3-10 வயதினரையே சுட்டுகிறோம். பள்ளி மாணவர்கள் என்னும் போது ஆண்டு 5 இல் இருந்து ஆண்டு 12 வரைக்கும் எனக் கொள்ளலாம். ஆகவே அவர்கள் எல்லோரையும் சிறுவர் என்று குறிப்பிட முடியாது. அவர்கள் பள்ளி மாணவர்கள். --Natkeeran (பேச்சு) 15:46, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
யாரேனும் இதற்குச் சரியான படிமம் எவறேனும் உருவாக்கித் தந்தால் மாற்றிவிடலாம் நட்கீரன். எனக்கும் இதில் உடன்பாடில்லைதான். நம் வடிவமைப்பாளர்களுள் யாரையேனும் கேட்கிறேன். அப்படத்தில் என்ன இருக்க வேண்டும் என்று கூறினால் நலம். எனக்கு ஏதும் catchy-ஆக சிக்கவில்லை. உதவவும். --சூர்யபிரகாஷ்உரையாடுக15:49, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நாம் மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து ஏதும் தனித்துவமான திட்டங்களை முன்னேடுக்கலாமா??, கூட்டு முயற்சி போல ஒன்றாக சேர்ந்து கட்டுரைகளை விரிவாக்கல்.. உரை திருத்தல்... கூகுள் கட்டுரை துப்பரவு.. வலைவாசல்கள் உருவாக்கல், பராமரித்தல் போன்றவை. மேலும் செயற்படாத திட்டங்களான பிறந்தநாள் வாழ்த்துக் குழுமம் போன்றவற்றை சேர்ந்து செயற்படுத்தல்.., மாணவர்கள் பங்களிப்பு அதிகரித்துள்ளமையால் பயனர்கள் இர்றைப்படுத்தலில் சிரமம் ஏற்பட்டால் அவற்றையும் சேர்ந்து செய்து வழங்கலாம். தங்கள் கருத்துக்கள், பரிதுரைகளை எதிர்பார்க்கிறேன். நன்றி --♥ ஆதவன் ♥♀ பேச்சு ♀15:48, 7 பெப்ரவரி 2014 (UTC)[பதிலளி]
அபிராமியின் வலது கையில் சிறு விபத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள உள் நரம்பு முறிவின் காரணமாக அவர் விக்கியில் இத்திட்டத்தில் பங்களிக்க இயலாத நிலை உள்ளது. இன்னும் ஒரு மாதம் ஆகலாம். நன்றி. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:02, 13 பெப்ரவரி 2014 (UTC)[பதிலளி]
சில முக்கிய இயற்பியல் கட்டுரைகள் உள்ளடக்கம் குறைவாக உள்ளன. உதாரணமாக எதிர்மின்னி கட்டுரை. அனைவரும் இணைந்து தொகுத்தாலே இதை முன்னேற்ற முடியும். உயர்தர விஞ்ஞானம் அல்லது கணிதம் படிக்கும் மாணவர்களும், ஏனை ஆர்வமுள்ளோரும் இணைந்தால் இதை நிறைவேற்றலாம். --G.Kiruthikan (பேச்சு) 07:22, 15 ஏப்ரல் 2014 (UTC)[பதிலளி]