பள்ளி மாணவர்கள் பக்கத்திற்கு தங்களை அன்போடு வரவேற்கின்றோம்
பள்ளி மாணவர்களின் பக்கத்திற்கு தங்களை அன்போடு வரவேற்கின்றோம். இப்பக்கம் விக்கிப்பீடியாவில் பங்களித்துக் கொண்டிருக்கும் பள்ளி மாணவர்களுக்கென சிறப்பாக உருவாக்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கென பல திட்டங்கள் இனிவருங்காலத்தில் நடைமுறைக்கு வர இருக்கின்றன. அந்த வகையில் பள்ளி மாணவர்கள் இப்பக்கத்தில் சேர விரும்பினால் இங்கு தங்கள் (பெயர்,பாடசாலை,வகுப்பு) பற்றிய விபரத்தை தரவும். நன்றி
பள்ளி மாணவர்கள்
தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் பள்ளி மாணவர்கள். நீங்கள் விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் ஒரு பள்ளி மாணவரா, விரும்பின் உங்களின் பெயரை இங்கு நீங்கள் இணைக்கலாம்.
விக்கியில் பள்ளி மாணவரின் பங்களிப்பு
விக்கியில் பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட கட்டுரைகளின் விபரம் கீழே தரப்பட்டுளது.
விக்கியில் பங்களிப்பதால் மாணவர்களுக்கு கிடைக்கும் பயன்கள்
உங்கள் எழுத்துத் திறனை மேன்படுத்தலாம்: தமிழ் விக்கியில் நீங்கள் பங்களிக்கும் கட்டுரைகளை பிற பயனர்கள் திருத்தி உதவுவார்கள். வரலாற்றில் திருத்தங்களை அவதானிப்பதன் மூலம் உங்கள் எழுத்துத் திறனை மேம்படுத்தலாம்.
விக்கி நுட்பத்தை அறிந்து கொள்ளல்: விக்கி என்பது இணையம் ஊடாகப் பலர் கூட்டாகச் சேர்ந்து உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான ஒரு மென்பொருள். நீங்கள் தமிழ் விக்கியில் பங்களிப்பதன் ஊடாக விக்கியில் தொகுப்பது பற்றி, விக்கித் தொழில்நுட்பங்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம்.
விக்கிச் சமூகம்: உலகளாவிய அளவில் பன்மொழிகளில் விக்கியில் தொகுக்கும் தன்னார்வலர் சமூகத்தோடு நீங்கள் ஊடாட முடியும். ஒரு கட்டற்ற, கூட்டுறவு, கூட்டு மதிநுட்ப செயற்திட்டம் எப்படி சமூகத்தால் முன்னெடுக்கப்படுகிறது என்பதை நெருக்கமாக அவதானிக்கலாம்.
தமிழ்க் கல்வி: தமிழ்க் கல்விக்கு விக்கியூடகங்கள் ஒரு முதன்மை இணைய கல்வி வளம் ஆகும். தமிழ் கல்விக்கு வாசிப்பு, எழுத்து, தட்டச்சு, கலைச்சொற்கள், அறிவியல் தமிழ் எனப் பல முனைகளில் தமிழ் விக்கியூடகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தகவல், அறிவு, பல்லூடகங்கள்: விக்கியூடகங்கள் பல்துறைகளில் பல வகை அறிவுத் தொகுப்புக்களைக் கொண்டுள்ளன. விக்கியில் பங்களிப்பது ஊடாக விக்கி வளங்களைத் திறனாகப் பயன்படுத்துவது என்பது அறிந்து கொள்ளலாம்.
மகிழ்ச்சி, பொழுது போக்கு: விக்கியில் பங்களிப்பது பலருக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு செயற்பாடு ஆகும். மேலும் பலருக்கு இது ஒரு பொழுது போக்கு ஆகும்.
சமூக சேவை: விக்கிப் பங்களிப்பு ஒரு வகைச் சமூக சேவை ஆகும்.
கல்வி வளர்ச்சி: விக்கியில் தொகுக்கும் போது அல்லது கட்டுரை எழுதும் போது அது உங்கள் மனதில் ஆழமாக பதிந்துவிடும். இதன் மூலம் மாணவர்களின் அறிவும் வளர்ச்சி அடையும்.
மாணவர் மன்றங்கள்
பள்ளி மாணவர்கள் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்திடவும், விக்கிப்பீடியாவில் மாணவர்கள் பங்களிப்பை ஊக்கப்படுத்திடவும் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர் மன்றங்கள் தொடங்க கல்வி நிறுவனங்கள் முன் வரவேண்டும். தமிழ்நாட்டில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டாறு எனும் ஊரில் எக்செல் பள்ளிகளில் இந்தியாவின் முதல் விக்கிப்பீடியா மாணவர் மன்றம் தொடங்கப்பட்டிருக்கிறது.
விக்கிப்பீடியாவில் பள்ளி மாணவர்கள் குறித்த ஊடகச் செய்திகள்
வணக்கம்! பள்ளி மாணவர்கள் அவர்களே! பள்ளி மாணவர்கள் குழுமம் தங்களை அதன் புதிய உறுப்பினராக ஏற்றுகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது! ஏதேனும் ஐயம் எழுந்தால் இங்கே கேட்கலாம்! நன்றி!