விக்கிப்பீடியா பேச்சு:பெண்ணியமும் நாட்டார் மரபும் 2023

கட்டுரைக்கான வரம்பு

போட்டி தொடங்கிய உடனே தமிழ் விக்கிப்பீடியா இரண்டாவது இடத்தில் வந்துள்ளது. அதே வேளையில் சிறிய கட்டுரைகள் போட்டிக்கு வந்துள்ளதாக ஒரு கருத்து எழுந்துள்ளது. முன்னர் தமிழ் விக்கிப்பீடியாவில் நாம் நடத்திய போட்டிகளில் குறைந்தது 300 வார்த்தைகள் என்ற வரம்பினை வைத்திருந்தோம். மொழியியல் அடிப்படையில் ஒட்டுநிலை மொழியான தமிழுக்கு இந்த வரையறை பிற மொழிகளுடன் ஒப்பிடும் போது சமமானதாக இருக்காது என்று அன்றும் கூறியிருந்தேன். ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் என்ற வகையில் அந்த விதியை மாற்றாமல் அவ்வாறே தொடர்ந்தோம். இம்முறை அந்த விதி கைவிட்டு, சர்வதேச அளவில் உள்ள விதியான //3000 பைட் அல்லது 300 சொற்கள்// என்ற நிலையிலேயே வைத்துக் கொள்வோமா? அல்லது 300 சொற்கள் என்றே கொள்வோமா அல்லது சற்று தளர்த்தி //200 சொற்கள்// என்று நடுத்தர அளவில் விதியை அமைத்துக் கொள்வோமா? தற்போதைக்கு மேல்விக்கியில் உள்ள விதியைக் கொண்டு போட்டியைத் தொடங்கியுள்ளோம், சில மொழியினர் அவர்களுக்கு ஏற்ப விதிகளில் முன் பின் அமைத்துக் கொண்டுள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ளலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 02:36, 5 பெப்ரவரி 2023 (UTC)Reply

ஆங்கிலத்தில் உள்ள விதிமுறைகளின் படி 3000 பைட்டுகள் அல்லது 300 சொற்கள் என்றுள்ளது. கருவியும் அவ்வாறே வடிவமைக்கப்பட்டுச் செயல்படுகிறது. எனது இரு தொகுப்பு சொற்களின் எண்ணிக்கை காரணமாக தற்பொழுது தகுதி நீக்கத்தில் உள்ளது. சில தொகுப்புகளை மேம்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. போதுமான தரவுகளோ அல்லது மேற்கோள்களோ கிடைப்பதில்லை. பிறமொழிகளிலும் இந்நிலைப்பாடு (300 சொற்கள்) உள்ளதாகத் தெரியவில்லை. இதுபோன்ற போட்டியின் தமிழுக்குறிய விதிமுறைகளால் விக்கிமூலம் 2022-ல் ஒரு பக்கத்தின் காரணமாக நாம் மூன்றாமிடத்தினை இழந்தோம். எனவே ஆங்கிலத்தில் உள்ள விதியின் அடிப்படையில் அல்லது என்பதை இணைக்க வேண்டாம். 3000 பைட்டுகள் அல்லது 300 வார்த்தைகள் இதில் எது ஒன்றினை ஒரு தொகுப்பு பூர்த்தி செய்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். --சத்திரத்தான் (பேச்சு) 03:03, 5 பெப்ரவரி 2023 (UTC)Reply
தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தைக் கருத்திற்கொண்டு 4000 பைட்டுகள் அல்லது 250 வார்த்தைகள் என்று வைத்துக் கொள்ளலாமா?--கி.மூர்த்தி (பேச்சு) 04:03, 5 பெப்ரவரி 2023 (UTC)Reply
நாளை வரை பார்ப்போம். மாற்றுக் கருத்தில்லாவிட்டால் 4000 பைட்டு அல்லது 250 வார்த்தைகளை விதிகளிலும்/பவுண்டைனிலும் சேர்ப்போம். -நீச்சல்காரன் (பேச்சு) 13:22, 6 பெப்ரவரி 2023 (UTC)Reply

பதிவு செய்யப்பட்ட கட்டுரைத் தலைப்புகள்

  1. The Fox and the Crow (Aesop)
  2. Vasoorimala
  3. Feminist art
  4. Art+Feminism
  5. Kurdish women
  6. Margaret Murray
  7. Working Women's Association
  8. National Woman Suffrage Association
  9. National Association of Professional Women
  10. National Women's Studies Association
  11. Nikki Haley
  12. Women's rights in Iran
  13. Women's rights movement in Iran
  14. Menstrual leave
  15. Oinam Bembem Devi
  • Summer Festival in The Nilgiris
  • Narasimha Jayanti
  • Henny Penny
  • The Goose that Laid the Golden Eggs
  • The Dog and Its Reflection

கட்டுரைப்பிரிவுகள்

சர்வதேச கட்டுரைகளுக்கும் தமிழ் விக்கிபீடியாவின் கட்டுரைகளுக்கும் என்ன என்ன வித்தியாசங்கள்? ஏன் அவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன? யாராவது விளக்க இயலுமா? பிரயாணி (பேச்சு) 09:41, 6 பெப்ரவரி 2023 (UTC)Reply

சர்வதேசக் கட்டுரைகள் பொதுவாக எல்லா மொழியினர்க்கும் பொதுவான பரிந்துரை. தமிழுக்காகத் தனியாகப் பரிந்துரைக்கக் கேட்டிருந்தேன். அதன்பொருட்டு, ஒத்த பகுப்புகளில் தமிழில் இல்லாத கட்டுரைகளை மட்டும் எடுத்து, தமிழுக்குப் பரிந்துரைக்கப்பட்டவை இவை. -நீச்சல்காரன் (பேச்சு) 13:20, 6 பெப்ரவரி 2023 (UTC)Reply
இரண்டு தலைப்புகளிலும் கட்டுரைகள் எழுதலாமா? ஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளதா?? பிரயாணி (பேச்சு) 07:53, 8 பெப்ரவரி 2023 (UTC)Reply
இரண்டு இணைப்பில் உள்ள கட்டுரைகளையும் எழுதலாம். எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. இரண்டிலும் இல்லாமல் தமிழர்களுக்குத் தொடர்புள்ள நாட்டார் மரபு மற்றும் பெண்ணியசார்ந்த கட்டுரைகள் இருந்தால் இங்கே பரிந்துரைக்கலாம். அவற்றையும் அப்பட்டியலில் இணைக்க முயல்வோம். -நீச்சல்காரன் (பேச்சு) 02:14, 9 பெப்ரவரி 2023 (UTC)Reply

சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள்

ஏற்கனவே பங்களிப்பாளர்கள் சமர்ப்பித்த கட்டுரைகளின் பட்டியலை எங்கு காணலாம்?--Booradleyp1 (பேச்சு) 13:06, 9 பெப்ரவரி 2023 (UTC)Reply

ஆங்கிலத் தொகுப்பினை இடது பட்டியலில் உள்ள மொழிகளில் தமிழ் உள்ளதா என்பதை பார்த்து தெரிந்துகொள்ளலாம். சில கட்டுரைகள் முன்னரே தமிழில் தொகுக்கப்பட்டு ஆங்கிலக் கட்டுரையுடன் இணைக்கப்படாமலும் உள்ளன. இதனை தேடலின் மூலமே தெரிந்துகொள்ளலாம். தனியாக பட்டியல் உள்ளதா எனத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் அறியத் தரவும்.--சத்திரத்தான் (பேச்சு) 13:32, 9 பெப்ரவரி 2023 (UTC)Reply
https://fountain.toolforge.org/editathons/fnf-2023-ta - பக்கத்தில் தமிழ் விக்கிபீடியர்கள் சமர்ப்பித்துள்ள கட்டுரைகளின் பட்டியல் இடம் பெற்றுள்ளது. மேலும், பிற இந்திய விக்கிபீடியர்களின் பட்டியலை https://neechal.toolforge.org/fnf2023.html - இல் காணலாம்.--வசந்தலட்சுமி (பேச்சு) 17:03, 9 பெப்ரவரி 2023 (UTC)Reply
@Vasantha Lakshmi V: நீங்கள் குறிப்பிட்டுள்ள பக்கத்தில் பயனர்கள் உருவாக்கிய கட்டுரைகளின் எண்ணிக்கை தரப்பட்டுள்ளது. கட்டுரைகளின் பட்டியலைக் காணமுடியவில்லையே.--Booradleyp1 (பேச்சு) 03:10, 10 பெப்ரவரி 2023 (UTC).Reply
@Booradleyp1: அவர்களுக்கு வணக்கம். அவர்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் > குறியை சொடுக்கினால் கட்டுரை தோன்றும். முயற்சிக்கவும். நன்றி--Balu1967 (பேச்சு) 03:32, 10 பெப்ரவரி 2023 (UTC)Reply
@Balu1967: உங்களின் அன்பான உதவிக்கு மிக்க நன்றி.--Booradleyp1 (பேச்சு) 03:40, 10 பெப்ரவரி 2023 (UTC)Reply

ஐயம்

இந்தத் திட்டத்தின்கீழ் உருவாக்கப்படும் கட்டுரைகளில் திருத்தங்கள், முன்னேற்றங்களை எப்போது பிற பயனர்கள் செய்யலாம்? போட்டி அடிப்படையிலான திட்டம் என்பதால் இக்கேள்வியை வைக்கிறேன். —-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:07, 11 பெப்ரவரி 2023 (UTC)Reply

பொதுவாக எப்போதும் யார் வேண்டுமானாலும் அக்கட்டுரைகளை மேம்படுத்தலாம். சிறு திருத்தங்களை அவ்வப்போதே செய்யலாம். ஆனால் ஒரு குறுங்கட்டுரையினை மற்றவர் விரிவாக்கிப் போட்டிக்குப் பிழையாகத் தகுதி பெறக் கூடாது என்ற சிக்கல் மட்டும் தான் உள்ளது. அதனால் குறுங்கட்டுரைகளை மார்ச் மாதத்திற்குப் பிறகு விரிவாக்கம் செய்யலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 13:37, 11 பெப்ரவரி 2023 (UTC)Reply

புரிந்து கொண்டேன். பகுப்புகளை ஒழுங்கு செய்தல், சிறு திருத்தங்கள் ஆகியவற்றை செய்வதில் சிக்கல் இல்லை என்பது நன்று. நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:45, 11 பெப்ரவரி 2023 (UTC)Reply

விரிவாக்கம் செய்யப்பட்ட கட்டுரைகள்

ஏற்கனவே எழுதப்பட்டுள்ள போட்டித்தலைப்பு சார்ந்த கட்டுரைகளை விரிவாக்கம் செய்தால் போட்டிக்கு சமர்பிக்கலாமா??? பிரயாணி (பேச்சு) 11:34, 12 பெப்ரவரி 2023 (UTC)Reply

புதிய கட்டுரைகள் அல்லது விரிவாக்கிய கட்டுரைகள் பிப்ரவரி 1 முதல் மார்ச்சு 31 வரையான காலத்திற்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும். என்ற விதியில் உள்ள சொற்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. பயனர்:Neechalkaran எழுதப்பட்டிருக்க என்பதை தொடங்கப்பட்டிருக்க என மாற்றவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:42, 14 பெப்ரவரி 2023 (UTC)Reply

இந்தக் காலத்தில் தொடங்கப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே உள்ள கட்டுரையினை விரிவாக்கலாம். போட்டிக்குச் சமர்ப்பிப்பவர் கூடுதலாக 250 வார்த்தைகளை/4000 பைட்டை விக்கி நடைமுறைக்குட்பட்டுச் சேர்த்திருக்க வேண்டும். -நீச்சல்காரன் (பேச்சு) 11:20, 14 பெப்ரவரி 2023 (UTC)Reply

உவாங்கு ஓ கட்டுரையை சேர்க்க முயன்ற போது அது தொடங்கிய தேதியை வைத்து தடை செய்கிறது. நீச்சல்காரன் நீங்க அதை சேர்க்க முயன்று பார்க்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:23, 16 பெப்ரவரி 2023 (UTC)Reply

Y ஆயிற்று -நீச்சல்காரன் (பேச்சு) 11:34, 16 பெப்ரவரி 2023 (UTC)Reply

நான் சேர்க்க முயன்றபோது தேதி வரம்பை காட்டி சேர்க்கவிடவில்லை. நீச்சல்காரன் அது வழு(?)வா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:53, 7 மார்ச் 2023 (UTC)Reply

நான்காம் அலைப் பெண்ணியம் எனும் கட்டுரையை உள்ளிட பவுன்ட்டன் கருவி மறுக்கிறது. நீச்சல்காரன் (பேச்சு)உதவி செய்யவும். ஏன் எனத் தெரியவில்லை. ஏற்கெனவே தொடங்கப்பட்ட கட்டுறை என்பதாலா.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு)

பரிசு தொடர்பான கேள்விகள்

தமிழுக்கான பரிசுகளும் உள்ளன என மொட்டையா உள்ளதே? இன்னும் என்ன பரிசு என முடிவு செய்யப்படலையா? பயனர்:Neechalkaran எனில் அதையும் சேர்த்து குறிப்பிட்டு விடலாமே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:49, 14 பெப்ரவரி 2023 (UTC)Reply

ஆமாம். பரிசு உள்ளது ஆனால் இன்னும் அவர்கள் உறுதி செய்யவில்லை. முதல் மூன்று பரிசும் ஐந்து ஆறுதல் பரிசினையும் கேட்டுள்ளேன். -நீச்சல்காரன் (பேச்சு) 11:14, 14 பெப்ரவரி 2023 (UTC)Reply

பொதுவானதொரு வேண்டுகோள்

கட்டுரையைப் பதிவேற்றம் செய்த பிறகு, அக்கட்டுரையை ஒரு முறை வாசித்துப் பார்த்து, தேவைப்படும் அடிப்படைத் திருத்தங்களை பயனர்கள் செய்யவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:07, 14 பெப்ரவரி 2023 (UTC)Reply

போட்டியில் முனைப்பாகப் பங்கெடுத்துவரும் சக பயனர்களுக்கு எனது வாழ்த்துகள். செல்வசிவகுருநாதனின் வேண்டுகோளை நானும் உங்கள்முன் வைக்கிறேன். குறிப்பாக, மொழிபெயர்ப்புக் கருவிமூலம் கட்டுரைகளை உருவாக்கும் பயனர்கள், அக்கட்டுரைகளை தாங்களே மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்த்துவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அண்மையில் சில கட்டுரைகளை மொழிபெயர்ப்புக் கருவிகொண்டு உருவாக்கிப் பார்த்தேன். பல வகைகளில் அது நமது வேலையை எளிதாக்குகிறது. எனினும், முற்றுப்புள்ளி வரவேண்டிய இடங்களிலெல்லாம் காற்புள்ளியைத் தருகிறது. வாக்கிய அமைப்புகள் நமது நடைமுறையில் இல்லாதவகையில் சற்று வேடிக்கையாகவும் இருக்கிறது. சில சொற்களுக்குத் தவறான பொருளுள்ள சொற்களையும் தருகிறது. எனவே தான் இந்த வேண்டுகோள். புரிதலுக்கு நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:51, 14 மார்ச் 2023 (UTC)Reply

வேண்டுகோள்

சர்வதேச புள்ளிவிவர பட்டியலை எழுதப்பட்ட கட்டுரையின் எண்ணிக்கை வகையாக வரிசைப்படுத்தினால் பங்காளிப்பவர்களின் வரிசையை தெரிந்து கொள்ள எளிதாக இருக்குமே.. மற்ற மொழி விக்கிப்பீடியர்கள் கட்டுரை எழுதுவதில் தான் அதிக கவனம் செலுத்துவதாக தெரிகிறது.

அந்த அட்டவணைகள் எல்லாம் வரிசைப்படுத்தத்தக்கவை. தலைப்பைச் சொடுக்கினால் தானாக வரிசைப்படுத்திக் காட்டும் வேண்டிய நெடுவரிசையை நீங்களே வரிசைப்படுத்திக் கொள்ளலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 05:43, 24 பெப்ரவரி 2023 (UTC)Reply
புரிந்தது. பயன்படுத்தி பார்த்துக்கொண்டேன். மிக்க நன்றி பிரயாணி (பேச்சு) 12:24, 24 பெப்ரவரி 2023 (UTC)Reply

கட்டுரையினை திரும்பபெறுதல்

தவறுதலாக உள்ளீடு செய்யப்பட்ட கட்டுரையினை Fountain Tool-l திரும்ப பெறுவது எவ்வாது எனத் தெரிவிக்கவும். உ.ம். கஜேந்திர சிங் செகாவத் என்னுடை கணக்கில் தவறுதலாக உள்ளீடு செய்துள்ளேன். இதனை போட்டியிலிருந்து நீக்க வேண்டும்.--சத்திரத்தான் (பேச்சு) 05:01, 26 பெப்ரவரி 2023 (UTC)Reply

நீக்குவதற்கான வழி தெரியவில்லை. ஆனால் கட்டுரைக்கு மதிப்பெண் அளிக்கவில்லை.-நீச்சல்காரன் (பேச்சு)

நேரடிச் சந்திப்பு

இந்தப் போட்டியின் ஒரு அங்கமாகப் பயிற்சி வகுப்பு அல்லது நேரடிச் சந்திப்பினை உள்ளூர் அளவில் நடத்திக் கொள்ள நிதி இருப்பதாக அதன் சர்வதேச ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் வழியாகப் பரப்புரை செய்ய யாருக்கேனும் ஆர்வமிருந்தால் தொடர்பு கொள்க. மேற்கொண்டு திட்டமிடலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 17:04, 21 மார்ச் 2023 (UTC)Reply

போட்டிக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலைமையில், மொழிபெயர்ப்பு கருவி, பேசுவதை தட்டச்சும் கருவி, போன்றவைகளைப் பற்றியும், உரைநடை, பிறமொழி பெயர்களை தமிழ்ப்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள் மற்றும் பிற மொழி பங்கேற்பாளர்கள் பயன்படுத்தும் உத்திகளையும் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் ஏதேனும் ஏற்பாடு செய்ய இயலுமா??
பிற போட்டிகளுக்கு கூட இந்த பயிற்சிகள் உபயோகமாக இருக்கலாம். பிரயாணி (பேச்சு) 19:56, 24 மார்ச் 2023 (UTC)Reply
@பிரயாணி:, யாரேனும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்தால் உதவுகிறேன். ஆனால் இப்போதைய நிலையில் வேறு யாரும் கருத்திடாததால் இவ்வாறான விரிவான பயிற்சிக்கு இத்திட்டத்தின் வழி வாய்ப்பில்லை என நினைக்கிறேன். ஆனால் இணையவழிப் பயிற்சிக்கு முனையலாம். 26 மாலை 8 மணியளவில் சந்திப்போமா? -நீச்சல்காரன் (பேச்சு) 18:58, 25 மார்ச் 2023 (UTC)Reply
சிறிது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இன்று முடியாது @Neechalkaran பிரயாணி (பேச்சு) 08:38, 26 மார்ச் 2023 (UTC)Reply

போட்டிக் காலம் நீட்டிக்கப் பட்டுள்ளதால் நேரடிச் சந்திப்பு/பயிற்சி நடத்தும் காலமும் நீண்டுள்ளது. யாரேனும் நிகழ்ச்சி நடத்த விரும்பினால் நிதிநல்கையைப் பயன்படுத்தலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 10:17, 2 ஏப்ரல் 2023 (UTC)Reply

காலம் நீட்டிப்பு

பல சமூகங்களின் கோரிக்கைக்கு ஏற்பப் போட்டிக் காலத்தை இருவாரம் நீட்டித்துள்ளனர். ஏப்ரல் 15 வரை நடைபெறுகிறது. நீச்சல்காரன் (பேச்சு) 08:47, 29 மார்ச் 2023 (UTC)Reply

கட்டுரையைப் பதிவு செய்ய உள்ளே செல்ல பவுன்ட்டன் மறுக்கிறது. உதவவும்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 02:14, 30 மார்ச் 2023 (UTC)Reply

@உலோ.செந்தமிழ்க்கோதை உங்கள் கட்டுரை இணைக்கப்பட்டுவிட்டது. கட்டுரையில் உள்ள ஆங்கில உள்ளடக்கத்தை மாற்றிவிடுங்கள். அதன் பின்னர் மதிப்பிடுகிறோம்-நீச்சல்காரன் (பேச்சு) 04:11, 2 ஏப்ரல் 2023 (UTC)Reply

கட்டுரையின் ஆங்கில உள்ளடக்கம் தமிழ்ப்படுத்தியுளேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 06:14, 2 ஏப்ரல் 2023 (UTC)Reply

Feminism and Folklore 2023 has been extended

logo.svg
logo.svg

Dear Wiki community,

Greetings from Feminism and Folklore International Team,

We are pleased to inform you that Feminism and Folklore an international writing contest on your local Wikipedia has been extended till the 15th of April 2023. This is the last chance of the year to write about feminism, women biographies and gender-focused topics such as folk festivals, folk dances, folk music, folk activities, folk games, folk cuisine, folk wear, fairy tales, folk plays, folk arts, folk religion, mythology, folk artists, folk dancers, folk singers, folk musicians, folk game athletes, women in mythology, women warriors in folklore, witches and witch hunting, fairy tales and more

We would like to have your immense participation in the writing contest to document your local Folk culture on Wikipedia. You can also help with the translation of project pages and share a word in your local language.

Best wishes,

International Team Feminism and Folklore Tiven2240 (பேச்சு) 05:05, 30 மார்ச் 2023 (UTC)Reply

போட்டியின் முடிவு அறிவிப்பு

இந்தப் போட்டியின் முடிவு எப்போது அறிவிக்கப்படும்?--மகாலிங்கம் இரெத்தினவேலு 10:06, 15 மே 2023 (UTC)Reply

நினைவூட்டலுக்கு நன்றி. மொழிவாரியான முடிவுகள் இங்கே வெளியிடப்பட்டுள்ளன. சர்வதேச முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் நமது பக்கத்தில் மொத்தமாக இற்றை செய்கிறேன். பரிசுகள் அனுப்பப்படும் முறைகுறித்த கூடுதல் தகவல்களைப் வரும் நாட்களில் பகிர்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 13:11, 15 மே 2023 (UTC)Reply
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya