விக்கிப்பீடியா பேச்சு:விக்கிமீடியா அறக்கட்டளை ஊடாகத் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்https://meta.wikimedia.org/wiki/Community_Capacity_Development#Phase_2:_Community_discussion பாருங்கள். இதன் மூலமாக ஆறு தகுந்த புலங்களில் தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு உதவ விக்கிமீடியா அறக்கட்டளை முன்வந்திருக்கிறது. இவற்றில் எந்தப் புலங்கள் நமக்குத் தகும், என்ன உதவிகள் தேவை என்று நாம் விரிவாக உரையாடி ஒரு சுருக்கத்தை விக்கிமீடியா அறக்கட்டளைக்குப் பரிந்துரைத்தால், அவர்கள் மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
ஆகிய மூன்று புலங்களில் நாம் உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறேன். இவற்றின் சில செயற்றிட்டங்கள் ஏற்கனவே நாம் த. இ. க. மூலம் முன்னெடுக்க விரும்பும் பணிகளுடனும் ஒன்றிணைந்து செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.--இரவி (பேச்சு) 11:52, 25 ஆகத்து 2015 (UTC)
வணக்கம், Community governance, Conflict management, On-wiki technical skills, New contributor engagement and growth, Partnerships Communications என அனைத்து நம் தமிழ் விக்கிப்பீடியாவிற்குத் தேவை என்று எண்ணுகிறேன். நாம் புதுப்பயனர்களை தொடர்ந்து ஊக்குவிக்க, எனக்குத் தெரிந்தவரையிலும் எதுவும் செய்ய இயலவில்லை என்றே எண்ணுகிறேன். இது வரை Conflict management குறித்த தேவைகள் அவ்வளவாக இல்லாமல் இருந்தாலும் தமிழ் விக்கிப்பீடியா இனி வரும் காலங்களில் பலமடங்கு பயனர்களைப் பெரும்பொழுது இதனுடைய அவசியம் அதிகரிக்கும். ஏற்கனவே ஒருசில பிணக்குகள் வந்தபின் கொள்கைகளை வகுத்திருக்கிறோம்; இனிவரும் காலங்களில் அனைத்தும் தேவையான அளவில் வைத்துக் கொண்டால் நிச்சயம் பயனுள்ளதாகவே இருக்கும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:05, 31 ஆகத்து 2015 (UTC)
அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி. 2, 3 வாரங்களில் இவ்வாய்ப்பினை முன்வைத்து விக்கிச்சமூகத்துடன் உரையாடி ஏதேனும் ஒரு புலத்தின் கீழ் முதற்கட்டமாக பணித்திட்டம் அல்லது தேவையைச் சுட்டுமாறு விக்கிமீடியா அறக்கட்டளையில் கேட்டிருந்தார்கள். பொதுவாக, ஆறு புலங்களின் கீழும் இவற்றை ஊடறுத்தும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான தேவைகள் உள்ளன என்பதே உண்மை. குறிப்பாக, பல நாட்கள் பங்களித்து வரும் பலருக்குமே ஒரு சில விடயங்களில் கூடுதல் தெளிவு தேவைப்படுவதைக் கடந்த இரண்டு மாதங்களில் பலரையும் சந்தித்து உரையாடி போது உணர முடிந்தது. எனவே, என்னுடைய பரிந்துரை: தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான ஒரு மூன்று நாள் பயிற்சி முகாம் நடத்தலாம். இதில் எழுத்தாற்றல், மொழிபெயர்ப்பு, ஒளிப்படம் எடுத்தல், விக்கிமீடியா அமைப்பு முறை, பரப்புரைக்குத் தேவைப்படும் திறன்கள், அடிப்படை விக்கி நுட்பங்கள் முதலிய பல்வேறு பயிற்சிகளை அளிக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Train_the_Trainer_Program/2015 பாருங்கள். இலங்கையில் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய கவனத்தைக் கூட்டும் வகையிலும், இலங்கை - இந்தியா பயனர்கள் இடையே நல்லுறவை வளர்க்கும் வகையிலும் இப்பயிற்சியை இலங்கையில் வைத்து நடத்தலாம் என்பது என் ஆவல். இடர்கள் என்று பார்த்தால்: அ) பலரும் முதல் முறையாக கடவுச்சீட்டு எடுக்க வேண்டி வரலாம். ஆ) செலவு கூடுதல் என்றோ தனித்தனியாக இரு நாடுகளில் இரு பயிற்சிகள் நடத்தலாம் என்றோ விக்கிமீடியா அறக்கட்டளை கருத இடமுண்டு. ஆனால், இரு நாட்டுப் பயனர் நல்லுறவை வலியுறுத்தி இக்கவலையைத் தவிர்க்கலாம். இ) இலங்கையில் இதனைப் பொறுப்பெடுத்துச் செயற்படுத்த ஒரே நகரில் அல்லது அருகமை நகர்களில் அமைந்த விக்கிப்பீடியர்கள் குழு அல்லது ஒத்த கருத்துள்ள ஆர்வலர்கள் தேவை. ஒரு கல்வி நிறுவன ஆதரவும் இருந்தால் நன்றாக இருக்கும். ஈ) இது தொடர்பான செலவுகளுக்கு விக்கிமீடியா அறக்கட்டளையில் இருந்து இலங்கைக்குப் பணம் அனுப்புவதில் சிக்கல் வருமா? முன்பு வெளிநாட்டில் இருந்து இலங்கைக்குப் பணம் அனுப்புவதில் சிக்கல் இருந்தது. செலவுத் தொகையைப் பொறுத்து ஒரு சில விக்கிப்பீடியர்களின் கூட்டுக் கணக்குக்கோ பல்கலைக்கழகம் போன்ற ஆதரவாளரின் கணக்குக்கோ பணத்தை அனுப்பி வைக்கக் கோர முடியும். ஆகக்கூடுதலாக 30 முதல் 40 பேர் வரை இத்தகைய பயிற்சியில் பங்கேற்பது வினைத்திறம் மிக்கதாக இருக்கும். குறைந்தது 500 முதன்மைவெளித் தொகுப்புகள் செய்துள்ள விக்கிப்பீடியர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். தகுந்த பயிற்சிகளை அளிக்கக் கூடியவர்களை இந்தியாவில் இருந்தும் வர வைக்கலாம். பல தமிழ்நாட்டு விக்கிப்பீடியர்களும் இலங்கையைப் பற்றி மேலும் புரிந்து கொள்ள விரும்புகிறார்கள். இத்தகைய ஒரு பயிற்சி இலங்கையில் அமைவது பல்வேறு வகையில் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன். அனைவரின் கருத்துகளையும் வரவேற்கிறேன். --இரவி (பேச்சு) 19:25, 10 செப்டம்பர் 2015 (UTC)
எனவே, 1. விக்கிப்பீடியர்கள் திறன் மேம்பாட்டுக்கு மூன்று நாள் பயிற்சி முகாம் என்பது முதற் பரிந்துரை - இதற்கு அனைவர் ஆதரவும் இருக்கும் என்று நம்புகிறேன். 2. இம்முகாமை இலங்கையில் நடத்த முன்னுரிமை தரலாம் என்பது இரண்டாவது பரிந்துரை - இதில் கருத்தளவில் சிக்கல்கள் இல்லை. ஆனால், யாரேனும் களப் பணிகள், ஒருங்கிணைப்புக்கு பொறுப்பெடுத்து நடத்த முன்வர வேண்டும். ஆதரவு தரக்கூடிய கல்வி நிறுவனமும் பங்களிப்பாளர்களும் இலங்கையின் எந்த நகரில் இருந்தாலும் சரி. அங்கு நடத்தலாம். இணையம் மூலமாகச் செய்யக்கூடிய ஒருங்கிணைப்புப் பணிகளை அனைவரும் கலந்து செய்வோம். இதன் மூலம் களத்தில் உள்ளவர்களுக்கான சுமையைக் குறைக்கலாம். --இரவி (பேச்சு) 03:07, 11 செப்டம்பர் 2015 (UTC) இலங்கையில் இப்பயிற்சியை நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து உங்கள் கருத்து தேவை: @AntanO, சஞ்சீவி சிவகுமார், Shrikarsan, மதனாஹரன், Aathavan jaffna, Mohamed ijazz, Sivakosaran, Mayooranathan, and கோபி: --இரவி (பேச்சு) 07:05, 14 செப்டம்பர் 2015 (UTC) இலங்கையில் பன்னாட்டு அளவிலான விக்கிப் பட்டறை ஒன்றை நடாத்துவது பயனர்களைக் கவருதல் மற்றும் நிலைத்திருக்கச் செய்தலில் பெருமளவு பங்களிக்கும் என்றே கருதுகின்றேன். எங்கு நடாத்தலாம், ஒருங்கிணைப்பில் பங்குகொள்ளக் கூடிய ஆளணிவளம் ,பயிற்சி இலக்கு மற்றும் உள்ளடக்கம் என்பன குறித்து தீர்க்கமாக முடிவெடுப்பதும் செயற்படுத்துவதில் பங்களிக்க உறுதியளிப்பதும் அவசியமாகும். எனக்கு ஓரிரு நாட்களை ஒதுக்கிச் செயற்பட முடியும். --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 18:28, 14 செப்டம்பர் 2015 (UTC)
இடம், ஏற்பாட்டுக் குழு முதலியவற்றை முடிவு செய்ய இன்னும் காலம் தேவைப்படும் என்று உணர்கிறேன். எனவே, மேலும் தாமதப்படுத்தாமல் இத்தகைய ஒரு பயிற்சி தேவைப்படுகிறது என்பதை மட்டும் இப்போது ஒரு முன்மொழிவாக விக்கிமீடியா அறக்கட்டளைக்குத் தெரிவிக்கிறேன். மற்ற விவரங்களைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். எப்படியும் இது தொடர்பான ஏற்பாடுகளைச் செய்ய விக்கிமீடியா அறக்கட்டளைக்கும் சற்று காலம் பிடிக்கும். --இரவி (பேச்சு) 15:47, 16 செப்டம்பர் 2015 (UTC)
விக்கிமீடியா அறக்கட்டளை ஊடான சமூகத் திறன் மேம்பாடு குறித்து தமிழ் விக்கிப்பீடியர் சமூக முன்மொழிவு / Proposal from Tamil Wikipedia Community regarding WMF's Community Capacity Development frameworkவிக்கிமீடியா அறக்கட்டளை வளர்ந்து வரும் விக்கிமீடியா சமூகங்களின் திறன் மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை வழங்குவதை தமிழ் விக்கிப்பீடியர் சமூகம் வரவேற்கிறது. இங்கு குறிப்பிட்டுள்ள ஆறு புலங்களிலும் அவற்றை ஊடறுத்தும் இன்னும் சில புலங்களிலும் பல்வேறு நிலைகளிலும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு அவர்களின் தேவைக்கும் ஆர்வத்துக்கும் ஏற்ப திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், வளங்களை வழங்குவதற்கான தேவையை தமிழ் விக்கிப்பீடியர் சமூகம் உணர்கிறது. எனவே, இது தொடர்பாக பின்வரும் தேவையை முன்வைக்கிறோம்: பல்வேறு நாடுகளில் இருந்தும் பங்களிக்கும் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி தேவை. எழுத்தாற்றல், மொழிபெயர்ப்பு, ஒளிப்படம் எடுத்தல், விக்கிமீடியா அமைப்பு முறை, பரப்புரைக்குத் தேவைப்படும் திறன்கள், அடிப்படை விக்கி நுட்பங்கள் முதலிய பல்வேறு பயிற்சிகளை அளிக்கலாம். இப்பயிற்சி இலங்கை அல்லது இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்டு மூன்று நாட்கள் நடைபெறும். 40 முதல் 50 விக்கிப்பீடியர்கள் பங்கு பெறுவர். இவர்கள் முதன்மைப் பெயர்வெளியில் குறைந்தது 500 தொகுப்புகள் செய்திருப்பர் அல்லது அதற்கு இணையான பன்முகப் பங்களிப்பை நல்கி இருப்பர். விக்கிமீடியா அறக்கட்டளை இப்பயிற்சியைச் சிறப்பாக வழங்குவதற்கான திட்டமிடல் மற்றும் நிதி ஆதரவை வழங்க வேண்டும். நேரடிப் பயிற்சிக்குப் பிறகு தொடர்ந்து இத்திறன்களைத் தமிழ் விக்கிப்பீடியர்கள் மேம்படுத்திக் கொள்வதற்கான வளங்களையும் வழங்க வேண்டும். --இரவி (பேச்சு) 15:47, 16 செப்டம்பர் 2015 (UTC) ஆதரவு (Support)
நடுநிலை (Neutral)
எதிர்ப்பு (Oppose)கருத்துகள் (Comments)வாக்கெடுப்பு முடிவுற்றது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கத்தைச் சரி பார்த்து, மேபடுத்தி உதவுங்கள். நன்றி. கவனிக்க: @Natkeeran and Sundar:--இரவி (பேச்சு) 12:26, 24 செப்டம்பர் 2015 (UTC) சுருக்கம் (Summary)The Global Tamil Wikimedia Community (GTWC) welcomes the Wikimedia Foundation's effort to support emerging communities by offering Community Capacity Development framework. The GTWC recognizes the need for capacity development in many domains including and across the 6 domains identified by WMF. The degree of capacity development will also vary for different domains based on contributors' existing skill level and interest. In this context, we propose the following requirement: Tamil Wikimedians living across the globe would benefit from a capacity development training camp. Translation, Prose writing, Photography, Understanding the Wikimedia movement and its organizational structure, Outreach, and MediaWiki are some of the areas in which training shall be given. This training shall be organized in India or Sri Lanka. The camp will be conducted for 3 full days with 40 to 50 participants who have contributed at least 500 edits in main namespace or something equally useful for Tamil Wikimedia projects. WMF shall support this camp by offering funding and program design expertise. It shall also offer resources so that contributors continue to work on these skills after attending the camp. The whole exercise shall be conducted in a cost-effective manner. இற்றைவிக்கிமீடியா அறக்கட்டளை ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள் தொடர்பாக நாம் அனுப்பி வைத்த பரிந்துரைக்கான பின்னூட்டம் கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாறான ஒரு பொதுவான பயிற்சிக்கான தேவை உள்ளது என்பதை உணர்கிறார்கள். ஆனால், அதனை வழமையான Grants:PEG மூலமாக நிறைவேற்றித் தர விரும்புகிறார்கள். Community Capacity Development என்னும் இப்புதிய திட்டத்தைப் பொருத்த வரை, அவர்கள் குறிப்பிட்டுள்ள ஆறு புலங்களில் ஏதேனும் ஒன்றில் தனிக்கவனம் எடுத்து தமிழ் விக்கிச் சமூகம் பங்கேற்றால் நன்றாக இருக்கும் என்கிறார்கள். அதிலும் குறிப்பாக, நுட்பத் திறன்கள் மேம்பாடு குறித்த புலத்தில் தமிழ் விக்கிப்பீடியா சமூகம் ஈடுபட விரும்புகிறதா என்று கேட்கிறார்கள். இதன் கீழ் செய்யக்கூடிய ஒரு எடுத்துக்காட்டுத் திட்டத்தை இங்கு காணலாம். காலம் கருதி, இத்திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா ஈடுபடுவது பயனளிக்குமா, இதற்கான தேவை உள்ளதா என்று தமிழ் விக்கிப்பீடியாவில் நுட்ப ஆர்வம், திறம் உள்ள பங்களிப்பாளர்களிடம் மின்மடல் வழி கருத்து கோரி இருந்தேன். நற்கீரன், சுந்தர், சிபி, சீனிவாசன், நீச்சல்காரன் ஆகியோர் இத்திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா ஈடுபடுவதற்கான தேவை உள்ளது என்ற அடிப்படையில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். அக்கருத்துகளின் சுருக்கங்களை இங்கும் பகிருமாறு அவர்களை வேண்டுகிறேன். பொதுவாக, ஒரு சமூகமாக நாம் பலரின் திறன்களை ஒருங்கிணைத்து வெற்றி காண்கிறோம். ஆனால், தனித்தனியாக பங்களிப்பாளர்கள் பார்வையில் இருந்து பார்க்கையில் ஒவ்வொருவரும் தங்களின் திறன்களை மேம்படுத்த, புதிய திறன்களைப் பெற இடம் இருப்பதை உணர முடிகிறது. இத்திட்டம் பெருமளவு மீடியாவிக்கி மற்றும் விக்கிமீடியா திட்டங்களின் வலைத்தளங்கள் சார்ந்தே இருக்கும் என்றே எதிர்பார்க்கிறேன். அதே வேளை, தமிழ் சார் நுட்பங்களுக்கான தேவையையும் சுட்டிக் காட்டி இவற்றை நமக்கு நாமே (peer-peer) கற்பிப்பதற்கான வளங்களை உருவாக்க முடியுமா என்று பார்க்கலாம். விக்கிமீடியா அறக்கட்டளை அலுவர் பரிந்துரைத்த அடிப்படையில், இத்திட்டத்திற்கான மைல்கற்கள் பின்வருமாறு அமையலாம்:
காலம் கருதி, தமிழ் விக்கிப்பீடியா சமூகம் இத்திட்டத்தில் ஈடுபட விரும்புகிறது என்ற தகவலை விக்கிமீடியா அறக்கட்டளைக்குத் தெரிவிக்கிறேன். மேற்கண்ட திட்டமிடல் படி, இப்பயிற்சியை ஒருங்கிணைக்க குறைந்தது மூன்று பேராவது முழு மூச்சாக முன்வந்தால் நன்று. ஏற்கனவே சீனிவாசன் முன்வந்துள்ளார். நானும் அறக்கட்டளையுடனான ஒருங்கிணைப்பில் உதவ முடியும். இப்பயிற்சி 90% இணையம் வழி நடைபெறும் என்பதால் அனைவரும் தயங்காமல் இதில் பங்கேற்க வேண்டும் என்று கோருகிறேன். 280க்கும் மேற்பட்ட மொழிச் சமூகங்கள் இருக்கும் விக்கிப்பீடியாவில், விக்கிமீடியா அறக்கட்டளையில் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவை நாடி வந்து கூட்டுறவு கொள்ள முனைகிறார்கள் என்பது நல்ல சேதி. அதனை எப்படிப் பயன்படுத்தி முன்னேற்றம் காண்பது என்ற வகையில் அணுகினால் வெற்றி நமதே :)--இரவி (பேச்சு) 15:45, 10 அக்டோபர் 2015 (UTC)
குறிப்பான நுட்பப் பயிற்சிப் பரிந்துரைகள்"விக்கி api பயிற்சி""எளிய உதாரணங்களோடு தொடங்கி, ஒரு bot செய்வது""Widget, gadget, template உருவாக்குதல்""wikidata ஐ பயன்படுத்தி பயனுள்ள செயலிகள் உருவாக்குதல்"விக்கிப்பீடியா வளங்களைப்(tools.wmflabs.org) பற்றிய பயிற்சிவிக்கித் தரவுகள் - அனைத்து விக்கிகளுக்குமான அட்டவணைகள், நிலப்படங்கள்! + தன்மொழியாக்கம்அனைத்து விக்கிகளும் ஒரே தரவுகளைக் கொண்ட அட்டவணைகள், நிலப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை ஒரு இடத்தில் இட்டு, தன்மொழியாக்கம் மட்டும் செய்தால் நிறைய உழைப்பு சேமிப்பாகும். இற்றைப்படுத்தல், பராமரித்தல் இலகுவாகும். இதற்கான வாய்ப்புக்கள் என்ன? இது தொடர்பாக எதாவது முயற்சிகள் செய்யப்படுகின்றனவா? --Natkeeran (பேச்சு) 13:24, 14 அக்டோபர் 2015 (UTC)
விரிதாளில் இருந்து கட்டுரை, கட்டுரையில் இருந்து விரிதாளுக்குநீச்சல்காரன், மீடியாவிக்கி API பயன்படுத்தி வார்ப்புருக்களில் இருந்து தகவல்களை விரிதாளுக்கு extract செய்யும் செயலிகளை எழுதியுள்ளார். தானியங்கிகளைப் பயன்படுத்தி விரிதாளில் உள்ள தரவுகளைப் பயன்படுத்தி கட்டுரைகளை உருவாக்கும் முறை நெடுங்காலமாகப் பயன்படுத்தப்படுகிறது. எனினும் இந்த நுட்பங்கள் தொடர்பான பரவலான புரிதல், திறன் விருத்தி இருந்தால் நன்று. --Natkeeran (பேச்சு) 13:24, 14 அக்டோபர் 2015 (UTC)
நுட்பங்களுக்கான பயிற்சி மிகவும் தேவையே.எந்தெந்த மொழிகளுக்கான பயிற்சிகள் தேவை என்று பட்டியலிட்டு, அந்த மொழிகளுக்கான அடிப்படைப் பயிற்சியும், விக்கி api உடனான பயிற்சியும் பாடத்திட்டத்தில் இருக்க வேண்டும். எளிய உதாரணங்களோடு தொடங்கி, ஒரு bot செய்வது வரை விளக்குவதாக இருக்கலாம். Widget, gadget, template உருவாக்குதலுக்கும் wikidata ஐ பயன்படுத்தி பயனுள்ள செயலிகள் உருவாக்குதலுக்கும் இதே போல செய்யலாம். வீடியோ பாடங்களாகவும் செய்யலாம். தமிழ் விக்கியில் நுட்ப வல்லுனர்களை இரு/மூன்று மடங்காக்குதல் என்ற இலக்கில் செயல்படலாம். ஒருங்கிணைப்புப் பணிகளை இணையவழியிலேயே செய்யலாம் எனில் நான் உதவுகிறேன். --த.சீனிவாசன் (பேச்சு) 01:26, 15 அக்டோபர் 2015 (UTC) பயிற்சிக்கான முன்னேற்பாடுகள்இப்பயிற்சி தொடர்பாக நாம் பங்கேற்ற வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், பின்வரும் மூன்று அடிப்படைகளில் பயிற்சிகள் தேவைப்படுகிறது என்றும் தமிழ் விக்கிச்சமூகத்துக்குப் பெரிதும் பயன்படும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
அடுத்து நாம் செய்ய வேண்டியது?
பட்டறைக்கான பயனர் பதிவுஏப்ரல் 29, 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் பட்டறை நடத்த வாய்ப்புள்ளது. விக்கிமீடியா அறக்கட்டளையில் இருந்து அலுவலர்கள் வர வேண்டி இருத்தல், தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் ஆகிய சூழல்களைக் கருத்தில் கொண்டு இத்தேதிகளே தோதாக அமைந்தன. ஏப்ரல் 29 (வெள்ளி) பொதுவான பயனர் அறிமுகம், நுட்பம் சாரா உரையாடல்கள் அமையும். முன்கூட்டியே வர முடிந்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். பணிக்குச் செல்பவர்களும் பயிற்சியில் கலந்து கொள்ளும் வகையில் நுட்பப் பயிற்சி ஏப்ரல் (சனி), மே 1 (ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடைபெறும். இது ஓரளவு அடிப்படை விக்கிப்பீடியா அறிமுகம் உள்ளவர்களுக்கான பயிற்சி என்பதால், இன்றைய தேதியில் குறைந்தது 500 முதன்மைவெளித் தொகுப்புகள் (அதாவது கட்டுரைகளில் 500 தொகுப்புகளாவது செய்திருக்க வேண்டும். 500 முழு கட்டுரைகள் அல்ல) செய்திருப்பவர்கள் அல்லது முதன்மையாக நுட்பப் பங்களிப்புகள் செய்பவர்கள் மட்டும் இப்பயிற்சியில் இடம்பெறுவது பொருத்தமாக இருக்கும் என்று பரிந்துரைக்கிறேன். வேறு வகையில் பங்கேற்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான பரிந்துரைகளை வரவேற்கிறேன். எப்படி ஆயினும் 30 முதல் 40 பேர் பங்கேற்கும் வகையிலேயே நம்மிடம் வளங்கள் உள்ளன. எனவே, மற்றவர்கள் விண்ணப்பிப்பதைத் தவிர்க்கலாம். நாள்: ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1 இடம்: தமிழ் இணையக் கல்விக்கழகம், சென்னை பயிற்சி அளிப்போர்: அசாப் பர்தோவ், யுவராசு பாண்டியன் (விக்கிமீடியா அறக்கட்டளை அலுவலர்கள்) இந்தியாவுக்குள் இருந்தும் இலங்கையில் இருந்தும் சென்னைக்கு வருவதற்கான போக்குவரத்துச் செலவுகள், சென்னையில் தங்குமிடம், உணவுச் செலவுகள் பொறுப்பேற்கப்படும். இவ்விரு நாடுகளுக்கு வெளியே இருந்து யாரேனும் கலந்து கொள்ள விரும்பினால் அதற்கான செலவைப் பொறுப்பேற்பது சிரமம். ஆனால், கலந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் தயங்காமல் பதிவு செய்யுங்கள். அதற்கான நிதி வாய்ப்புகளையும் ஆராய்வோம். கீழே உங்கள் பெயர், மற்ற விவரங்களை நான் பதிவு செய்துள்ளது போலவே பதிவு செய்யுங்கள். இலங்கையில் இருந்து வருபவர்கள் தங்கள் ஊரில் இருந்து கொழும்பு வருவதற்கான போக்குவரத்து, தங்குமிடம், இதர தேவைகளையும் குறிப்பிடுங்கள். பெரும்பாலும், விமானச் சீட்டு நேரடியாக உங்களுக்கு வழங்கப்படும். அதைத் தவிர மற்ற போக்குவரத்துச் செலவுகளை நிகழ்வில் கலந்து கொள்ளும் போது திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அனைவரும் தங்கள் செலவுகளுக்கான உரிய கட்டணச் சான்றுகளைச் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டுகிறேன். கட்டணச் சான்று அளிக்காத தானிகள் முதலிய சேவைகளுக்கு சிறிய அளவிலான தொகை என்றால் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். மற்றபடி, கடவுச் சீட்டு / விசா செலவு, வாடகைச் சீருந்து, விடுதி, உணவகம், பேருந்து / இரயில் கட்டணச் சான்றுகளைச் சேகரித்து வையுங்கள். பல்வேறு திட்டமிடல் முடிவுகள் எடுக்க வேண்டி இருப்பதால், தங்கள் பெயர்களை மார்ச்சு கருத்துகள் / கேள்விகள்@AntanO, சஞ்சீவி சிவகுமார், Shrikarsan, மதனாஹரன், Booradleyp1, and Surya Prakash.S.A.: @Aathavan jaffna, Balurbala, Commons sibi, Parvathisri, Mahir78, and Mohamed ijazz: @தமிழ்க்குரிசில், Mayooranathan, and Rsmn: @Sivakumar, Sivakosaran, Selvasivagurunathan m, Ksmuthukrishnan, Seesiva, and Shanmugamp7: @Neechalkaran, Sengai Podhuvan, and Sodabottle: @பரிதிமதி, Aswn, Vatsan34, Nandhinikandhasamy, Iramuthusamy, கி. கார்த்திகேயன், and எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி: @Yokishivam, பா.ஜம்புலிங்கம், சக்திகுமார் லெட்சுமணன், கி.மூர்த்தி, Info-farmer, and Saranbiotech20: @Inbamkumar86, Jagadeeswarann99, Karthickbala, Arunankapilan, Balurbala, எஸ்ஸார், and Logicwiki: @Fahimrazick, Srithern, Arafath.riyath, அரிஅரவேலன், ஜெ.மயூரேசன், Arulghsr, and தென்காசி சுப்பிரமணியன்: இந்நிகழ்வில் தாங்கள் கலந்து கொள்வது பயன்மிக்கதாக இருக்கும். சில ஆண்டுகளுக்குப் பிறகு பல தமிழ் விக்கிப்பீடியர்கள் 3 நாட்கள் ஒன்று கூடும் நிகழ்வாக இருக்கும். எனவே, தங்கள் பெயர்களைப் பதிந்து நிகழ்ச்சியை உறுதிப்படுத்த உதவ வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 19:55, 18 மார்ச் 2016 (UTC)
நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான பெயர் பதிவு இன்னும் இரு நாட்களில் முடிவுறுகிறது. எனவே, அனைவரும் மறவாமல் பெயர் பதிய வேண்டுகிறேன். கலந்து கொள்பவர்களின் தோராயமான எண்ணிக்கை, தேவைகள் முன்கூட்டியே தெரிந்தால் தான் நிகழ்ச்சியைத் திட்டமிட முடியும். நன்றி.--இரவி (பேச்சு) 18:08, 26 மார்ச் 2016 (UTC)
பதிவு செய்த பயனர்கள்1. அ. இரவிசங்கர்
2. உலோ.செந்தமிழ்க்கோதை
சொ.பிரசாத்
3. ஹிபாயத்துல்லா
4. நீச்சல்காரன்
5. தகவலுழவன்
6. நா ஸ்ரீதர்
7. இரா. பாலசுப்ரமணியம் (Balurbala)
8, முரளிதரன்
9. கி.மூர்த்தி
10. சஞ்சீவி சிவகுமார்
11. மாதவன்
12. ஆதவன்
13. பாலாஜி
14. த.சீனிவாசன்
15. மதனாகரன்
16. சண்முகம்
17. செம்மல்
18. பாஹிம்
19. அருளரசன்
20. செங்கைப் பொதுவன்
21. செங்கைச் செல்வி
22. சிவக்குமார்
23. நந்தினி
24. பரிதிமதி
25. இரகுமானுதீன் (CIS)
26. தீட்டோ தத்தா (CIS)
28. அன்புமுனுசாமி
29. மா. செல்வசிவகுருநாதன்
31. எஸ்ஸார்
32. சுடர்
பெயர் பதிவு நிறைவுற்றது. இறுதி நேர வசதி வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு, இன்னும் ஐவருக்கான இடங்களையும் உள்ளடக்கித் திட்டமிடுவோம். நிகழ்வில் கலந்து கொள்வது தொடர்பான நடைமுறை ஒருங்கிணைப்புகளை மின்மடல் மூலமாகத் தொடர்வோம். நன்றி. --இரவி (பேச்சு) 07:49, 29 மார்ச் 2016 (UTC) இற்றைவிக்கி நுட்பப் பயிற்சி திட்டமிட்டபடி வரும் வெள்ளி, சனி, ஞாயிறு (ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1) சென்னையில் நடைபெறும். தங்குமிடம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை நாளை தெரியப்படுத்துகிறேன். வெளியூர்களில் இருந்து வருபவர்கள் தங்கள் பயணத்துக்கான ஏற்பாடுகளை மட்டும் தாங்களே கவனிக்க வேண்டுகிறேன். ஏதேனும் தகவல் தேவையென்றால் 99431 68304 அழையுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 16:49, 25 ஏப்ரல் 2016 (UTC) இடம்வெளியூர்களில் இருந்து வருவோருக்கான தங்குமிடம்அண்ணா மேலாண்மை நிலையம் தங்கும் விடுதி, “மகிழம்பூ”, 163/1, பி.எஸ். குமாரசாமி இராஜா சாலை, (பசுமைவழிச்சாலை), சென்னை - 600028 தொலைப்பேசி - +91-(0)44- 24938247 / 24937170 கூகுள் வரைபடத்தில் இருப்பிடம் - https://goo.gl/maps/TB8RFWyR6c52 அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் - அடையாறு நோக்கி / அடையாற்றில் இருந்து புறப்படும் பேருந்துகள் நிற்கும் இடம் - MGR Janaki College அல்லது Sathya Studios Bus stop. அங்கு இறங்கி தங்கும் இடம் நடக்கும் தூரமே (பார்க்க - நடந்து வரும் வழிக்கான வரைபடம்). அமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களது குடியிருப்புக்கு அருகே உள்ள இடம் என்றும் விசாரித்து வரலாம். பறக்கும் இரயில் மூலம் வருபவர்கள் Greenways Road நிறுத்தத்தில் இறங்கி 1 கி. மீ. தூரம் வர வேண்டி இருக்கும். (வரைபடம்) பயிற்சி நடக்கும் இடம்வெள்ளி அன்று: தமிழ் இணையக் கல்விக்கழகம், அண்ணா பல்கலைக்கழக வளாகம், காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம் காவல் நிலையம் எதிரில், அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில், சென்னை – 600 025. தொ.பே : 91-44-2220 9400 சனி மற்றும் ஞாயிறு: அண்ணா நூற்றாண்டு நூலகம் கருத்தரங்க அறை, காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம் காவல் நிலையம் எதிரில், சென்னை – 600 025. சனி, ஞாயிறு நிகழ்விடம் கடைசி நேர மாறுதலுக்குட்பட்டு தமிழ் இணையக் கல்விக்கழக வளாகத்திலேயே நடைபெற வாய்ப்புண்டு. எனவே, வரும் முன் 99431 68304 என்ற எனெ எண்ணுக்கு அழைத்து உறுதிப்படுத்திக் கொண்டு வரலாம். நன்றி.--இரவி (பேச்சு) 21:20, 27 ஏப்ரல் 2016 (UTC) |
Portal di Ensiklopedia Dunia