விக்ரமாதித்யன்

கவிஞர் விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யன் (பிறப்பு: செப்டம்பர் 25, 1947) ஒரு தமிழ்நாட்டுக் கவிஞர். இவரது இயற்பெயர் நம்பிராஜன். திருநெல்வேலி நகரப் பகுதியில் கல்லத்தி முடுக்கு தெருவில் வளர்ந்தவர். பின்னர் குற்றாலம், தென்காசி, சென்னை மேற்கு மாம்பலம், கலைஞர் கருணாநிதி நகர், அசோக் நகர் ஆகிய இடங்களிலும் வாழ்ந்துள்ளார்.

கல்வி

  • தொடக்கக்கல்வியை திருநெல்வேலியில் பெற்றார்.
  • 5ஆம் வகுப்பு (இரண்டாம் முறை), 6ஆம் வகுப்புக் கல்வியை சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பெற்றார். [1]
  • 7, 8, 9ஆம் வகுப்புக்கல்வியை கடலூர் மாவட்டம் மாதிரவேளூரிலுள்ள முத்துசாமி-விசுவநாதர் நடுநிலைப்பள்ளியில் (1962-63ஆம் கல்வியாண்டு முதல் 1964-65ஆம் கல்வியாண்டு முடிய) பெற்றார்.[1]
  • 10, 11ஆம் வகுப்புக்கல்வியை அப்போதைய திருநெல்வேலி மாவட்டம் (தற்போதைய தெங்காசி மாவட்டம்) வாசுதேவநல்லூர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் (கல்வியாண்டு 1965-66, 1966-67) பெற்றார்.[1]
  • புகுமுகவகுப்புக் கல்வியை (Pre University Course) பாபநாசத்தில் உள்ள திருவள்ளுவர் கல்லூரியில் (கல்வியாண்டு 1967-68) பெற்றார். அங்கு இவருக்குத் தமிழாசிரியராக இருந்தவர் க. ப. அறவாணன் ஆவார். [1]
  • திருநெல்வேலி மேடைத்தளவாய் கூட்டுறவுப் பயிற்சிப் பள்ளியில் கூட்டுறவு மேற்பார்வையாளர் பயிற்சியைப் (1974-75ஆம் கல்வியாண்டு) பெற்றார்.[1]

தொழில்

  • தெருவோடி விற்பனையாளர்(Hawker) - பகுதிநேரம் (1960 முதல் 1962 வரை)
  • உணவகத்தில் மேசைதுடைத்தல்: திருச்சியிலிருந்த உணவகங்களில் - பள்ளி விடுமுறை நாள்களில் (1962 முதல் 1965 வரை)
  • உணவகத்தில் உணவுபரிமாறல்: மேலூர் (1968), சென்னை (1969-1972)
  • குன்றக்குடி ஆதினத்தில் உதவியாளர் (1969)
  • குற்றாலம் பொருட்காட்சியில் நுழைவுச்சீட்டுவிற்றல் (1070)
  • நா. காமராசன் ஆசிரியராக இருந்து வெளியிட்ட சோதனை (1973 ஏப்ரல், மே, சூன்), விசிட்டர் (1980), அஸ்வினி (1980) இதழ்களில் மெய்ப்புப்பார்த்தல்
  • இதழ்களில் பங்களிப்பாளர் (1973 முதல்)
  • துணையாசிரியர் உள்ளிட்ட மயன், இதயம் பேசுகிறது, தாய், தராசு, நக்கீரன் இதழ்களில்.

குடும்பம்

1970ஆம் ஆண்டில் குற்றாலம் சிறீ பராசக்தி கல்லூரி கூட்டுறவுச் சங்கத்தில் வேலைபார்த்த பெண்ணை மணந்தார். இவர்களுக்கு ஆண்மக்கள் (இளையவர் பெயர் சந்தோசு) உள்ளனர்.

படைப்புகள்

16 கவிதைத்தொகுப்புகளும் இரண்டு சிறுகதைத்தொகுப்புகளும் 7 கட்டுரைத்தொகுப்புகளும் இதுவரை வெளியாகியுள்ளன.

வெளியான ஆண்டு நூலின் பெயர் வகை பதிப்பகம் குறிப்புகள்
1982 ஆகாசம் நீலநிறம் கவிதை அன்னம், சிவகங்கை
1984 ஊரும் காலம் கவிதை
1987 உள்வாங்கும் உலகம் கவிதை
1988 எழுத்து சொல் பொருள் கவிதை
1991 திருஉத்தரகோசமங்கை கவிதை
1993 கிரகயுத்தம் கவிதை
1993 திரிபு சிறுகதை
1997 ஆதி கவிதை
1999 கவிமூலம் கட்டுரை
2001 கல் தூங்கும் நேரம் கவிதை
2001 நூறு எண்ணுவதற்குள் கவிதை
2001 வீடுதிரும்புதல் கவிதை
2001 விக்ரமாதித்யன் கவிதைகள் - 1 கவிதை
2001 இருவேறு உலகம் கட்டுரை
2001 கவிதைரசனை கட்டுரை
2002 பாதி இருட்டு பாதி வெளிச்சம் கவிதை
2003 சுடலைமாடன் வரை கவிதை
2003 அவன்-அவள் சிறுகதை
2004 தேவதைகள்-பெருந்தேவி-மோகினிப்பிசாசு கவிதை
2004 தமிழ்கவிதை- மரபும் நவீனமும் கட்டுரை
2005 தன்மை-முன்னிலை-படர்க்கை கட்டுரை
2007 சேகர் சைக்கிள் ஷாப் கவிதை
2007 எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு கட்டுரை
2008 எல்லாச்சொல்லும் கட்டுரை
விக்ரமாதித்யன் கவிதைகள் - II கவிதை
ஊழ் கட்டுரை
கங்கோத்ரி கட்டுரை
கவிதையும் கத்தரிக்காயும் கட்டுரை
சாயல் எனப்படுவது யாதெனின் கட்டுரை
சும்மா இருக்கவிடாத காற்று கட்டுரை
சொல்லிடில் எல்லை இல்லை கட்டுரை
தற்காலச் சிறந்த கவிதைகள் கட்டுரை
மஹாகவிகள் ரதோற்சவம் கட்டுரை
ருத்ரபூமி கட்டுரை நக்கீரன் வெளியீடு
காடாறு மாதம் நாடாறு மாதம் தன்வரலாற்றுக் குறிப்பு தீராநதியில் வெளிவந்த தொடர்

திரையில்

  1. தனுஷ்கோடி என்னும் குறும்படத்தில் நடித்தார். அது வெளியிடப்படவில்லை [1]
  2. நான் கடவுள் திரைப்படத்தில் பிச்சைகாரர் வேடத்தில் நடித்துள்ளார். 2008ம் ஆண்டின் விளக்கு இலக்கிய விருது இவருக்கு வழங்கப்பட்டது.

விருதுகள்

மேற்கோள்

இவர் எழுதிய புகழ் பெற்ற வரிகள்,

சான்றடைவு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 தீராநதி
  2. "விக்கிரமாதித்யனுக்கு விளக்கு | எழுத்தாளர் ஜெயமோகன்". www.jeyamohan.in. Retrieved 14 December 2021.
  3. "கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு சாரல் விருது". tamil.filmibeat.com. 29 January 2014.
  4. http://www.jeyamohan.in/?p=45202
  5. "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - விருதுகள்". tamilonline.com. Retrieved 14 December 2021.
  6. https://www.jeyamohan.in/152054/
  7. "2021-12: விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா – விக்கிரமாதித்யன் – விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்". Vishnupuram Ilakkiya Vattam. Retrieved 14 December 2021.
  8. "Cong leader Jairam Ramesh to felicitate Vishnupuram awardee on December 26 | Entertainment". MyNews 24x7. 20 December 2021. Archived from the original on 21 டிசம்பர் 2021. Retrieved 21 டிசம்பர் 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya