விளக்கு விருது

விளக்கு விருது அமெரிக்க வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பினரால் புதுமைப்பித்தன் நினைவாகக் கலை - இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தமிழ்ச் சூழலில் தகுதிவாய்ந்த படைப்பாளிகள் உரிய அங்கீகாரமும், கவனமும் பெறவேண்டும் என்பதுதான் இந்த விருதின் நோக்கம். விருதுடன் ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படுகிறது.

விருது பெற்றோர்

ஆண்டு எழுத்தாளர்
1995 சி. சு. செல்லப்பா
1996 பிரமிள்
1997 கோவை ஞானி
1999 நகுலன்
2000 பூமணி
2001 ஹப்சிபா ஜேசுதாசன்
2002 சி. மணி
2003 சே. இராமானுஜம் (நாடகக் கலைஞர்)
2004 ஞானக்கூத்தன்
2005 அம்பை
2006 தேவதேவன்
2007 எஸ். வைதீஸ்வரன்
2008 விக்ரமாதித்யன்
2009 திலீப்குமார்
2010 தேவதச்சன்
2011 எம். ஏ. நுஃமான்
2012 பெருமாள் முருகன்
2013 கோணங்கி
2014 சி. மோகன்
2015 என். கல்யாணராமன்

2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு இருவருக்கு விருது அளிக்கப்படுகிறது.[1]

ஆண்டு புனைவிலி புனைவு
2016 ராஜ் கௌதமன் க. சமயவேல்
2017 ஆ. இரா. வேங்கடாசலபதி பா. வெங்கடேசன்
2018 ஆ. சிவசுப்பிரமணியன் பாவண்ணன்
2019 பேராசிரியர் க. பஞ்சாங்கம் கவிஞர் கலாப்ரியா
2020 ஸ்டாலின் ராஜாங்கம் சுகிர்தராணி
2021 அஸ்வகோஷ் வண்ணநிலவன்
2022 பொ. வேல்சாமி சு. தமிழ்ச்செல்வி
2023 வைதேஹி ஹெர்பர்ட் கி. விட்டால் ராவ்

மேற்கோள்கள்

  1. "விளக்கு விருது பெற்றோர்". விளக்கு. Retrieved 17 May 2025.

உசாத்துணை

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya