நா. காமராசன்
நா. காமராசன் (Na. Kamarasan, நவம்பர் 29, 1942 - மே 24, 2017) தமிழ்ப் புதுக்கவிதை இயக்க முன்னோடியும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். தொடக்கத்தில் மரபுக்கவிதைகள் எழுதி வந்த இவர் காலப்போக்கில் வசனக்கவிதை, புதுக்கவிதை ஆகிய துறைகளுக்கு மாறி அவற்றிலே தன் சிறப்பை வெளிப்படுத்தினார். கிராமியச் சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார். இவர் ஒரு உருவகக் கவிஞர் ஆவார். அழகான கவிதைகளால் பொருத்தமற்ற கொள்கைகளைச் சாடும் காமராசன், "கவியரசு, சோசலிசக்கவிஞர், புதுக்கவிதையின் முன்னோடி, புதுக்கவிதை ஆசான்" என்றும் அழைக்கப்பட்டவர், "கலைஞர்" மு.கருணாநிதி வழியே அரசியலுக்கும், ம. கோ. இராமச்சந்திரன் வழியே திரைத்துறைக்கும் வந்தவர்.
வாழ்க்கை1942-ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் நாள் தேனி மாவட்டத்தில் போடி மீனாட்சிபுரத்தில் நாச்சிமுத்து, இலட்சுமி அம்பாள் தம்பதியினருக்குப் பிறந்தார். கல்விமதுரை தியாகராசர் கலைக்கல்லூரியில் தமிழிலக்கியம் பயின்று கலை இளவர் (B.A.), கலை முதுவர் (M.A.) பட்டங்களைப் பெற்றார். பணி
அரசியல்1964-ஆம் ஆண்டில் மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் மாணவராக இருந்தபொழுது நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக்கொண்டு காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு காலில் விலங்கு பூட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவர். முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்திருந்தார். 1973ஆம் ஆண்டில் அ.தி.மு.க. தொடங்கப்பட்டபொழுது அரசுப்பணியைத் துறந்து, அக்கட்சியின் கொள்கைவிளக்கப் பேச்சாளராக மாறினார். பின்னர் அக்கட்சியில் மாநில மாணவரணிச் செயலாளர் (1990), மாநில இலக்கியஅணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருந்தார். 1989ஆம் ஆண்டில் ம.கோ.இரா.வின் மறைவிற்குப்பின் அ.தி.மு.க. பல்வேறு அமைப்புகளாக உடைந்தபொழுது ஜெ.ஜெயலலிதாவின் அணியிலிருந்தார். பொறுப்பு
வெளியான நூல்கள்கவிதைகள்
கதைகள்
திறனாய்வு
திரைத்துறையில்எம்.ஜி.ஆரால் திரைத்துறையில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டவர். இவரது பாடல்கள் இடம்பெற்ற சில திரைப்படங்கள்
வசனம் எழுதிய திரைப்படம்
இதழாளர்
குடும்பம்இவர் தேனி மாவட்டம், உ. அம்மாபட்டியில் வசித்த தா. பொம்மையன் மகள் லோகமணியை வாழ்க்கை துணைவியாக ஏற்றுக்கொண்டவர். இவருக்குத் தைப்பாவை என்ற மகளும், தீலீபன் என்ற மகனும் உள்ளனர். சிறப்பு
பெற்ற விருதுகள்
மறைவுநா. காமராசன் உடல்நலக் குறைவால் 2017 மே 24 அன்று சென்னையில் காலமானார். இவரது கவிதைப் புத்தகங்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கி இவரைச் சிறப்பிக்கும் வகையில் இவரது மனைவி திருமதி லோகமணி காமராசனை கெளரவித்து சிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது[4] நாட்டுடைமையாக்கல்இவரது படைப்புகளைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது. அதற்கான பரிவுத் தொகை 2020 சனவரி 20 அன்று வழங்கப்பட்டது.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia